கொரோனோ ஊரடங்கு கால விநாயகர் சதுர்த்தி என்ற பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு கட்டுரை :

Like
Like Love Haha Wow Sad Angry

கொரோனோ ஊரடங்கு கால விநாயகர் சதுர்த்தி என்ற பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு கட்டுரை : 

 

👆🏽 விநாயகர்🐁🐘 சதுர்த்தி!

ஆவணி மாதம் வரும் ‘வளர்பிறை சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம்.

விநாயக சதுர்த்தி வரலாறு:

“பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்ற சொல்வழக்குப் பிரபலமானது.

 

விக்கிரகம், யந்திரங்கள் பிம்பங்களில் மட்டுமல்லாது மஞ்சள் கூம்பு, சாணி உருண்டை, களிமண் பிம்பம் என எந்த வடிவில் வேண்டுமானாலும் விநாயகரை வழிபடலாம்.

 

பிரத்யேகமான ஆவாஹன மந்திரங்கள் இருந்தாலும், ஒரு மஞ்சள் உருண்டையைக் கூம்பாகப் பிடித்து, “இது பிள்ளையார்” என்றால் அங்கே உடனே ஆவாஹனமாகி விடுகிறார்.

 

எந்த எளிய பூஜையையும் நிவேதனத்தையும் மனமார ஏற்று அருள் செய்பவர். கோவிலிலும் கொலுவிருப்பார். ஆற்றங்கரை அரசமரத்தடியிலும் அருள்புரிவார்.

 

தனக்கு மேல் நாயகன் இல்லாததால் “விநாயகர்” என்று பெயர் பெற்ற ஸ்ரீ மஹாகணபதியின் பெருமை பேசும் “காணபத்யம்” பற்றிய சில விவரங்களை நாம் இக்கட்டுரையில் பார்க்கலாம்.ஸ்ரீ மஹாகணபதியை நிர்க்குண நிராகார பரப்பிரம்மமாகக் கருதும் காணபத்யம், அவரே முழுமுதற்கடவுள் என்று உபதேசிக்கிறது.

 

உலகத்தின் தோற்றமும், நிலைபெறுதலும் விநாயகராலேயே நிகழ்கிறது. முடிவில் பிரளய காலத்தில் ஒடுங்குதலும் (Moolaam = Uyir occupancy = Moolaathaaram) விநாயகரிடமே.

 

மும்மூர்த்திகளுக்கும் மேலான நாயகராய் விநாயகரே இருந்து இவ்வுலக இயக்கத்தைச் செயல்படுத்துகிறார்.

 

காணபத்யம் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிரபலமாக இருக்கிறது. காணபத்ய மதத்தைச் சேர்ந்தவர்கள் ‘காணபதர்கள்” என அழைக்கப்படுகிறார்கள்.

 

தமிழ்நாட்டில் பிரம்மச்சாரியாக வணங்கப்படும் விநாயகர் வடநாட்டில், சித்தி, புத்தி எனும் இரு மனைவியரோடு கூடியவராக வழிபடப்படுகிறார்

 

பெயர்கள் :

பிள்ளையார்,
விக்னேசுவரர்,
கணேசர்,
கணபதி,
கணாதிபர்,
ஐங்கரன்,
ஏரம்பன்,
இலம்போதரர்,
குகாக்கிரசர்,
கந்தபூர்வசர்,
மூத்தோன்,
ஒற்றைமருப்பினன்,
மூஷிகவாகனன்,
வேழமுகன்,
கயமுகன்,
ஓங்காரன்,
பிரணவன்

போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன.

 

இவற்றுள் ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என அர்த்தப்படும்.

 

பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி’யாக நியமித்தார்.

 

அனிமா, மகிமா
முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார்.

கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ‘ என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்’ என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும்.

 

அதுபோலவே ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடையூறுகளை நீக்குபவர்’ என்றும், ‘ஐங்கரன்’ என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்’ அர்த்தப்படும்.

 

‘கணபதி’ என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

ஒவ்வொரு யுகத்திலும் விநாயகரின் தோற்றம் பற்றி ஒவ்வொரு விதமாகக் கூறப்படுகிறது.

 

பார்க்கவ புராணமாகிய‌ விநாயக‌ புராணத்தின் படி, வக்ரதுண்ட விநாயகர், பிரளயம் முடிந்ததும் மும்மூர்த்திகளையும் படைத்து, முத்தொழில்களையும் செய்யுமாறு ஆணையிட்டு மறைந்தருளுகிறார். பின் உலக நன்மைக்காக, மீண்டும் தோற்றமாகிறார்.

பார்வதிதேவி நீராடும் போது, மஞ்சள் பொடியைப் பிசைந்து ஒரு உருவம் செய்து ,அதற்கு உயிரூட்ட, விநாயகர் தோற்றமானார் என்பதே பொதுவாக விநாயகரின் தோற்றம் குறித்து வழங்கப் பெறும் புராணக் கதை.

 

கயிலாய மலையில், மந்திர ரூபமான ஒரு மணிமண்டபத்தில், மிகுந்த ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்த “சமஷ்டிப் பிரணவம்”, “வியஷ்டிப் பிரணவம்” என்ற இரு பிரணவங்களை இறைவனும் இறைவியும் கருணையுடன் நோக்க, அவை ஒன்றிணைந்து பிரணவ ஸ்வரூபமான விநாயகர் தோற்றமானார் என்கிறது ஸ்ரீ விநாயக புராணம்.

 

வேதாந்தகன், நராந்தகன் என்னும் இரு அசுரர்களின் பிடியிலிருந்து உலகத்தைக் காக்க, தேவர்களின் தாயான அதிதி, தன் கணவர் காஷ்யப மஹரிஷியின் ஆணைப்படி, விநாயகரை குழந்தையாகப் பெற வேண்டித் தவமிருந்தாள். விநாயகரும், “மகோற்கடர்” என்ற பெயரில் அதிதிக்குக் குழந்தையாக அவதரித்தார்.

 

ஆஹா, ஊஹூ, தும்புரு ஆகிய மூவரும் கயிலையில் சிவபெருமானை இசையால் மகிழ்விப்பவர்கள். மகோற்கடர் சிறு வயதாயிருக்கும் போது, அவர்கள் மூவரும் கயிலைக்குச் செல்லும் வழியில் காஷ்யப முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வருகை தந்தனர். நீராடிவிட்டு, தாங்கள் கொண்டு வந்திருந்த,விநாயகர்,சிவன், பார்வதி, விஷ்ணு, ஆகிய பஞ்சமூர்த்திகளுக்குப் பூஜை செய்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தனர்.

 

தியானம் முடிந்து பார்க்கும் போது, விக்கிரகங்களைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

 

இறுதியில், மகோற்கடரைக் கேட்ட போது, அவர் புன்சிரிப்புடன், தன் வாயைத் திறந்து காண்பிக்க, அவர் வயிற்றுக்குள் ஈரேழு உலகங்கள் மட்டுமின்றி காணாமல் போன பஞ்சமூர்த்திகளும்அவர் வயிற்றுக்குள் இருப்பதைப் பார்த்து அதிசயித்து, விநாயகரே முழுமுதற்கடவுள் என்பதை உணர்ந்தனர்.

 

விநாயகர் யானை முகத்தவர். ஒற்றைத் தந்தம், இரு பெரும் செவிகள், மூன்று கண்கள் (விரூபாக்ஷர்), நான்கு புஜங்கள் கொண்ட ஐங்கரன் அவர்.”கணேசாய நம:” என்ற ஆறு அக்ஷரங்களுக்கு உரியவர். விநாயகரின் ரூப பேதங்களில், வலம்புரி விநாயகரே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறார்.1. ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை

இந்து இளம்பிறை போலும் எயிற்றினை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்்தினை

புத்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

– திருமூலர் (திருமந்திரம்)

 

2. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

– ஒளவையார்

 

3. திருவாக்கும் செய்கருமமும் கைகூட்டும் செஞ்சொல்

பொருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்

ஆதலால், வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர் தம்கை.

– கபிலர் (இரட்டை மணி மாலை)

4. அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல

குணமதிக மாம்கருணைக் கோபுரத்தில் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.

– விவேக சிந்தாமணி (கடவுள் வணக்கம்)

 

5. அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

 

6. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று ஒளவையார்பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 👇🏼

 

எழுத்தாளர் : 

திருமுருக்காற்றுப்படையில் மற்றும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் தர்ம சேனையில் பணிபுரியும் பயிரன் கூட்ட சீடன் !!! 

9629908758 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

İzmir Escort Hacklink #yaslikurt#1xbet зеркалоpromosyonjokerbet girişhd film izleevden eve nakliyat jigolo ajansi jigolo ajansi ugurnakliyat instagetfollower instagram takipçi satın al evden eve nakliyat