நாயுடு, நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீட்டு உரிமை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :

Like
Like Love Haha Wow Sad Angry
1

நாயுடு ,நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீடு உரிமையை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் : 

*ஏமாளிகளா பலிஜா, கம்மவார் சாதியினர்?*

 

நாயுடு, நாயக்கர், ராவ் என்பது சாதியா? என கேட்டால் நாயுடு , நாயக்கர் , ராவ் என்பது சாதி கிடையாது, பட்டப்பெயர் தான்!!! எனில் நமது சாதிபெயர்கள் பலிஜா, கம்மவார் என்பது தான்!!!
பலிஜா சாதியினருக்கு நாயுடு பட்டமும், செட்டியார் பட்டமும் உண்டு!!!
தமிழகத்தில் வெள்ளாளர்களும், வேட்டுவர்களும் மற்றும் வன்னியர்களும் கூட நாயக்கர் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்!!!
தமிழகத்தில்
பலிஜா, கம்மா அதாவது கம்மவார், கொங்கு நாயக்கர், மூசிக பலிஜா குலம், ராவுத்த நாயுடு என நமது சாதிகள்OC (FC ) அதாவது முற்படுத்தப்பட்ட சாதி!!!
*கம்பளத்து நாயக்கர், தொட்டிய நாயக்கர் பற்றி நான் பேசவிரும்பவில்லை, இவர்கள் MBC மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு!!* நல்லா வசதியாக சென்று MBC இடஒதுக்கீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டார்கள்!!!
கம்மவார், பலிஜா, மூசிக பலிஜா குலம், கொங்கு நாயக்கர், ராவுத்த நாயுடு தான் OC (Forward Community) முற்படுத்தப்பட்டோர்
இந்திய விடுதலைக்கு பின்னர் தமிழக அரசு தமிழகத்தில் சாதிவாரி இடஒதுக்கீடு கொண்டு வந்து அதில் நாமெல்லாம் OC யில் இருப்பதால் நமக்கு இடஒதுக்கீடே கிடையாது!!!
ஒரு காலத்தில் நமது சாதியில் டாக்டர், வக்கீல், தாசில்தார், கலெக்டர், Police Inspector, DSP, SP, நீதிபதி என பல்வேறு அரசு வேலைகளில் இருந்தோம் 1980 க்கு முன்னர்!!! ஆனால் தற்பொழுது என்னவானது?
பிச்சையெடுக்காத குறையாக சென்னை, பெங்களூர், மும்பை, வெளிநாடு என வேலைதேடி ஊர் ஊராக சுற்றி வேலைதேடி போன ஊரிலே குடிபெயர்ந்தும் விட்டோம்!!!
இதனால் நாம் இழந்தவை என்ன :
இடஒதுக்கீட்டிற்காக உயர்ந்த சாதியான கம்மவார் நாயுடு – கம்பளத்து நாயக்கராக மாறி போனான்!!!
பலிஜா நாயுடு — தொட்டிய நாயக்கராக மாறிபோனான்!!
இப்படி தான் அப்பாவோட இன்ஷியலை மாற்றுவது போல் சாதி சான்றிதழை மாற்றி இடஒதுக்கீடு பெறுகிறோம்!! நமக்கே கேவளமாக இல்லை இது!!ஆக மொத்தம் நமது உட்பிரிவுகளை எல்லாம் இழந்து நமது கோத்திரங்களை (வீட்டுப்பெயர் )
இவற்றையெல்லாம் ஊர் ஊராக சுற்றியதால் மறந்து, சொந்த ஊருக்கு போகாமல், ஊர் கோவிலுக்கு வரி கொடுக்காமல், குலத்தெய்வ கோவிலுக்கு வரி கொடுக்காமல், ஊர் கோவில் கொடைக்கு வரமுடியாமல், குலத்தெய்வ கோவிலுக்கு வருடம் ஒரு முறை கூட போக முடியாமலும், ஊரில் உள்ள பூர்வீக நிலத்தை விற்று, ஊரில் உள்ள பூர்வீக வீட்டை விற்று, நமது கோவில்களை எல்லாம் நம்மிடம் இருந்து மற்ற சாதிக்காரர்கள் சண்டை போட்டு, ஏமாற்றி புடுங்கிவிட்டார்கள், சொந்த ஊரில் அல்லது பக்கத்து ஊரில் அல்லது சொந்த மாவட்டத்தில் தொழில் பார்க்க தெரியாமல், வியாபாரம் பார்க்க தெரியாமல், வணிகம் பார்க்க தெரியாமலும், தமிழக அரசு வேலைக்கு போகமுடியாமலும், கம்மவார், பலிஜா வின் பொருள் என்ன நிலவுடமையாளர் இன்று எந்த நம்மில் யாரிடம் அதிக விவசாய நிலம் உள்ளது எல்லாத்தையும் இழந்து, கொத்தனாராக, சித்தாளாக, கூலியாக, ஆட்டோ ஓட்டுநராக, லாரி ஓட்டுநராக, மூடை சுமப்பவனாக,
அனாதையாக, அகதியாக ஊர், ஊராக சுற்றி கொண்டு திரிகிறோம்!
இதற்கு பெயர் என்ன உள்நாட்டு அகதிகள் என்று பெயர்!!! சிலருக்கு கோவம் வந்தாலும் இது தானே உண்மை!! நாம் அகதிகள் தானே அல்லது நாம் நாடோடி சாதியினரா?
நாடோடி சாதிகள் தான் சொந்த ஊரே இல்லாமல் ஊர் ஊராக குறவர்கள் மாதிரி பயணிப்பார்கள், அப்படி தானே ஊர் ஊராக சுற்றி கொண்டு உள்ளோம்!! நமக்கு நிலையான வாழ்க்கை எங்கே உள்ளது?
இதில் ஆண்ட பரம்பரை என பிதற்றி கொண்டு சுற்றி வருகிறோம், ஆண்ட பரம்பரை தான் சித்தாள் வேலையும், கொத்தனார் வேலையும் பார்ப்பார்களா? ஆனால் இன்று நாம் பார்க்கிறோமே!!!
இதில் நமது சாதியினருக்கு அரசியல் கூட புரியவில்லை!! என்ன செய்வது அவ்ளோ முட்டாள்கள் ஆகி போனாம்!!
மத்திய அரசு OC (FC ) சாதியினருக்கெல்லாம் சேர்த்து 10% பொருளாதார இடஒதுக்கீடு என்ற ஒன்று கொண்டூ வருகிறது அரசு வேலையிலும், கல்லூரி படிப்புகளிலும்!!

 

ஆனால் தமிழகத்தில்
இந்த 10% பொருளாதார இடஒதுக்கீட்டின் மூலமாக பலிஜா, கம்மவார், மூசிக பலிஜா, கொங்கு நாயக்கர், ராவுத்த நாயுடு ஆகிய நாம் தமிழக அரசு வேலைக்கு போக விடாமல், கல்லூரி படிப்பில் இடஒதுக்கீட்டை நாம் பெறுவதையெல்லாம் தடுப்பது யாரு?
*இந்த சாதி ஒழிப்பு திக, திமுக, கம்யூனிஸட், விசிக, தேமுதிக, மதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற அரசியல் கட்சிகள் தான்*
காங்கிரஸ் கூட 10% பொருளாதார இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறது!!!
நாயுடுகளுக்கான இடஒதுக்கீட்டை தடுப்பதில் முக்கிய பங்கு திமுகவிற்கு தான்!! ஆனால் நாயுடுகள் யாருக்கு சொம்பு அடிக்கிறோம் நாயுடு என்பதற்காக திமுக கட்சியை சார்ந்த
சென்னை
1.துறைமுகம் சட்டமன்ற தொகுதி பி.கே.சேகர்பாபு நாயுடு MLA
(திமுக )
2.வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி பா.ரங்கநாதன் நாயுடு MLA (திமுக )
3. தி நகர் சட்டமன்ற தொகுதி
பி.சத்தியநாராயணன் நாயுடு என்ற சத்யா MLA (அதிமுக)

4. அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி எம்.கே.மோகன் நாயுடு MLA (திமுக )
5 .தாம்பரம் சட்டமன்ற தொகுதி எஸ்.ஆர்.ராஜா நாயுடு MLA (திமுக )
6.கும்முடிபூண்டி சட்டமன்ற தொகுதி கே.எஸ்.விஜயகுமார் நாயுடு MLA
(அதிமுக)
7.செங்கல் பட்டு சட்டமன்ற தொகுதி ஆப்பூர் வரலட்சுமி நாயுடு MLA (திமுக )
கோவை
8 .கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி அருண் குமார் நாயுடு MLA (அதிமுக)
9.கோவை தெற்கு- அம்மன்.கே அர்ஜுன் நாயுடு MLA (அதிமுக)
10.சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி N.கார்த்திக் நாயுடு MLA (திமுக )
11.கீழ் பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி கு.பிச்சாண்டி நாயுடு MLA (திமுக )
12.கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கடம்பூர் ராஜுநாயுடு (அதிமுக)
13 விருதுநகர் சட்டமன்ற தொகுதி ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் நாயு MLA (திமுக )
14. திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி ஏ.வா.வேலு நாயுடு MLA
(திமுக )
15.ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி ஆர்.காந்தி நாயுடு MLA (திமுக )
16ஆம்பூர் சட்டமன்ற தொகுதி பாலசுப்பிரமணி நாயுடு MLA (அதிமுக)
17 .கும்பகோணம் சட்டமன்ற தொகுதி அன்பழகன் நாயுடு (திமுக )
ஆக மொத்தம் அதிமுக வில் நம்ம நாயுடு MLA கள் ஆறு பேரும் அதில் ஒருவர் அமைச்சர்,

 

திமுக வில் 11 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்!!
இதுபோக நாயுடு MP லிஸ்ட் எடுத்தால் அந்த பட்டியலும் தமிழ்நாட்டில் நீளும்!!
போதாக்குறைக்கு தேமுதிக, மதிமுக என நாயுடு தலைமை கொண்ட அரசியல் கட்சிகளும் உள்ளது!
ஏன் திமுக வில் இவர்கள் நினைத்திருந்தால் திமுக தலைமை ஸ்டாலின், கனிமொழியிடம் பேசி அந்த 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தியிருக்கலாமே?
அல்லது 10% பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்காமல் இருந்துயிருக்கலாமே?
இரண்டையும் செய்ய மாட்டார்கள்!!!
நாமும் எதிர்த்து கேள்வியே கேட்க மாட்டோம்!!!
இவ்வளோ MLA, MP, அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய சேர்மன், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட சேர்மன் போன்று பல்வேறு பொறுப்பாளர்கள், பதவிகளில் நாயுடுகள் இருந்தாலும் நடுத்தர, ஏழ்மை நிலைமையில் உள்ள நாயுடுகளின் வாழ்விற்கும், பொருளாதார ஏற்றத்திற்கும், உயர்நிலை கல்லூரி படிப்பில் சேர்வதற்கும்,வேலைவாய்ப்பிற்கும், மத்திய, மாநில அரசு வேலைகளிலும் நாயுடுகள் பயன்பெறக்கூடியவகையில் நன்மை அளிக்க கூடிய 10% பொருளாதார இடஒதுக்கீட்டை திமுக, திக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், விசிக, மூஸ்லீம் கட்சிகள், கம்யூனிஸ்ட், அமமுக போன்ற கட்சிகள் எதிர்க்கும் போதுநாயுடுகள் நாம் சாதியாக ஒன்றிணைந்து நமக்கான 10% பொருளாதார இடஒதுக்கீட்டு உரிமை கேட்டு இந்த கட்சிகளை எதிர்த்து கூ பேசாமல், புறக்கணிக்காமல், கோரிக்கை கூட வைக்காமல் ஆண்ட பரம்பரை நாம் அடிமையாக வாழ்கிறோம்!! வெட்கம் என்பதும், மானம்,ரோஷம், சுடு சொரணை என்பதும், வீரம் என்பதும் நாயுடுகளுக்கு மழுங்கி போனதோ? மழுங்கி போனதே உண்மை,
மேலே கூறிய நாயுடு MLA, MP, சேர்மன், தேமுதிக, மதிமுக போன்ற நாயுடு அரசியல்வாதிகளால் நாயுடு சாதிக்கு என்ன பயன் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்? ஒரு பயனும் கிடையாது, நாடோடி அகதி வாழ்க்கை தான் நடுத்தர நாயுடு குடும்பங்கள் நடத்தி வருகின்றன! சரியான வேலைவாய்ப்பு இல்லாததால் நடுத்தர நாயுடு இளைஞர்கள் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளோம்!! ஒரு வேளை இந்த 10% பொருளாதார இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டால் TNPSC மூலமாக எளிதாக அரசு வேலைக்கு சென்று நமது இளைஞர்களுக்கு விரைவாக திருமணம் நடக்கும்!! 25 வயதிற்குள் நாயுடு இளைஞர்கள், இளம்பெண்களுக்கு திருமண நடைபெறாமல் போனால் அவர்களின் ஒட்டுமொத்த சாபமும், அதனால் ஏற்படும் பாவமும் மேலே கூறிய நாயுடு அரசியல்வாதிகளையே சாரும் என்பது திட்டவட்டம்!!!
ஆனால் நாயுடு அரசியல்வாதிகளால் இவர்களால் நாயுடு சாதிக்கு என்ன பயன்?
அந்த அந்த நாயுடு அரசியல்வாதி அவன் அவன் குடும்பத்திற்கு சொத்து சேர்த்து கொண்டார்கள் அவ்வளவே!!
நடுத்தர, ஏழ்மை நாயுடு சாதி மக்களுக்கு இந்த நாயுடு அரசியல்வாதிகளால் ஒரு வெங்காயமும் பயனும் கிடையவே கிடையாது!!

 

கோவில் கொடை, ஊரில் திருவிழா, கோவில் கட்டனும், நாயுடு சங்க விழா என்று அப்படி இப்படி என்று ஏதாவது உதவி கேட்டால் பிச்சை காசு ஒரு 5000 அல்லது பத்தாயிரத்தை தூக்கி போடுவார்கள்!!
அந்த பத்தாயிரத்தை நமக்கு சம்பாதிக்க தெரியாது? நாம தான் கொத்தனார் வேலைக்கும், வெளிநாட்டில் கூலி வேலைக்கும் போறோமே!!
திமுக வில் இருந்து கொண்டு சாதி ஒழிப்பை பேசி நாயுடு உட்பிரிவுகளை, வீட்டுப்பெயர்களை, கோத்திரங்களை அழித்து, நாயுடுகளை நாடோடியாக, அகதியாக, அனாதையாக ஊர் ஊராக, மாநிலம் விட்டு மாநிலம் சொந்த ஊரை விட்டு சுற்றி கொண்டு இருக்கிறோம்!!!
இந்த 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தினால் கூட நாயுடுகள் தமிழக அரசு வேலைக்காவது போயி அவங்க அவங்க சொந்த மாவட்டத்திற்குள்ளாவது இருந்து கொள்ளலாம்!!!
என்றாவது ஒரு நாள் நாம் நமது நாயுடு அரசியல்வாதிகளை நேரில் சந்தித்து 10% இடஒதுக்கீட்டை திமுக தடுக்க கூடாது என்று ஸ்டாலின், கனிமொழியிடம் எடுத்து சொல்லுங்கள் என்று கூறியிருப்போமா?
நாயுடுகளுக்கு தான் முதுகு எலும்பு இல்லையே!!!10% பொருளாதார இடஒதுக்கீட்டை பற்றி தெரிந்து கொள்ள, நாயுடுகளின் எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்பு கொள்வீர்
*கோவில்பட்டி கார்த்தி 9629908758*
Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

İzmir Escort Hacklink #yaslikurt#1xbet зеркалоpromosyonjokerbet girişhd film izleevden eve nakliyat jigolo ajansi jigolo ajansi ugurnakliyat instagetfollower instagram takipçi satın al evden eve nakliyat