#க்ஷத்திரியர்கள்_யார்? #கங்கை_குல_க்ஷத்திரிய_வேளாளர்

#க்ஷத்திரியர்கள்_யார்? #கங்கை_குல_க்ஷத்திரிய_வேளாளர்!

#மூவேந்தரும் #வேளிர் குடியில் இருந்து எழுச்சி பெற்றவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆதலால் வேளிரை சொந்தம் கொண்டாடுவதில் பல சாதியினர் சமீப காலமாக அதி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

#வேளாளர்_தான்_வேளிர் (வேள்- வேளிர்- வேளாண் – வேளாளர்) என்றுகூட புரியாத சில அறிவிலார்கள் உள்ளார்கள். #வெள்ளாளர்_தான்_வேளிர் என்பதற்கு ஆதாரங்கள் கொட்டிக்கிடந்தாலும், மூல ஆதாரங்கள் சிலவற்றை காண்போம்.

வெள்ளாளர் = வேளிர் – நச்சினார்க்கினியர்

தொல்காப்பிய உரையில் பொருளதிகாரம் 30 இல் பின்வருமாறு கூறுகின்றார்.

“…மண்டில மாக்களுள் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும்




வல்லமும் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமை எய்தினோரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்ட மெய்தினோரும், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்கு உரிய வேளாளராகுப.”

அதாவது, வெள்ளாளர்தான் வேளிர் என்றும் பிடவூர்,

அழுந்தூர் வேள்,

நாங்கூர் வேள்,

நாவூர் வேள் (நாகப்பட்டினம்), ஆலாஞ்சேரி, வல்லநாட்டு வல்லங்கிழான், பெருஞ்சிக்கல் வேளிர் போன்ற வேளிரும், #பாண்டிய நாட்டில் #எட்டி (செட்டி) #ஏனாதி (சேனாதிபதி) & #காவிதி பட்டம் பெற்றவர்கள் குறுமுடி வேந்தர் எனவும், #அரசு எனவும் #வேள் எனவும் உரிமை பெற்றவர்கள். எனவும், இவர்களே இவர்களின் வேளாளர் குலத்தை சேர்ந்த முடியுடை வேந்தர்க்கு மகட்கொடை கொடுக்கும் வேளாளர் எனவும் அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார். இன்றளவும் கூட, பாண்டிய நாட்டில் இந்த எட்டி (செட்டியார்,), ஏனாதி(சேனாதிபதி, முதன்மையாளர் (முதலியார்)) என்ற வேளாளர்களுக்கே உரித்தான பட்டம் வழக்கில் உள்ளது.

காராளர் = வேளிர் – பாரதி தீபம் நிகண்டு நிகண்டுகளே #காராளர்_தான்_வேளிர் என்கிறது.

“வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே” (தொல் மரபியல். 81)

என்பவற்றால், நாட்டுவாணராகிய வேளாளர் வேந்தராற் படைத்தலைவராய் அமர்த்தப்பெறுவர் என்பது பெறப்படும்.

– தேவநேயப் பாவாணர்

இளம்புல்லூர்க் காவிதி – வெள்ளாளன்:

காவிதிப்பட்ட முடைமையால் பாண்டி நாட்டு வேளாளரென்று கொள்ளத்தகும்.

– அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையும் விளக்கமும்

சோழ மண்டல சதகம் – தஞ்சை தமிழ் பல்கலை:

நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாக வேளாளர் வாழும் ஊர்களில் ‘நாவூர்’ என ஒன்றைச் சுட்டுகிறார். அது நாகூரே




நாகை வேளாளர்

“இசைக்கா தமிழுக்கு எல்லாரும்

ஈந்தார் ஈந்தார் என்பதல்லால்

திசைக்கா விருது கொடிகட்டிச்

செலுத்தும் கீர்த்தி சகத்துளதோ

நசைக்கா யிரம்பொன் கொடுத்ததலால்

நாகைப் பதிவாழ் வேளாளர்

வசைக்கா யிரம்பொன் கொடுத்ததன்றோ

வளம்சேர் சோழ மண்டலமே”

ஆலாஞ்சேரி மயிந்தன் – சோழ மண்டல சதகம்:

“பயந்த மழைநீர் பெய்யாது

பன்னீ ராண்டு பஞ்சமெல்லாம்

வியந்த சங்கத் தமிழோர்க்கு

வெவ்வே றுதவி விடிந்தவுடன்

நயந்த காலை யெனும் தமிழை

நாட்டும் துரைஆ லஞ்சேரி

மயிந்தன் உயர்பாண் டியன்புகழ

வந்தோன் சோழ மண்டலமே

பன்னீராண்டு மழை பெய்யாது பஞ்சம் வந்த காலத்துத் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன் ஆலஞ்சேரி மயிந்தன் என்பான்.

பன்னீ ராண்டு பாண்டிநன் னாடு மன்னுயிர் மடிய மழைவளம் இறந்தது”

என மணிமேகலையும் இப்பஞ்சத்தைக் கூறும் (14:-55-56) ஆலஞ்சேரி இன்று ஆலங்குடிச்சேரி என்று வழங்கப் பெறுகிறது.

வேளாளர், மண்டல மாக்களும் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும் ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும், முதலிய பதிகளில், தோன்றி வேள் எனவும் அரசு எனவும் பட்டம் எய்தி ஆண்டு வந்தனர். இவர்கள் குலத்தை சேர்ந்த சோழனுக்கும் இவர்கள் உறவினராவர்.




கொங்குவேளிர் வரலாறு #கொங்குவேள் இயற்றிய பெருங்கதைக்கு உரை எழுதிய சோமசுந்தரனார்:

வேளிர்குடி என்பது பண்டைநாள் தமிழகத்திற் சிறந்து திகழ்ந்த பெருங்குடிகளில் ஒன்று. வேளிர் என்பதன் பொருள் வேளாண் மரபினர் என்பதாம். இம்மரபினர் அவர்கள் குலத்தினரான முடியரசர்க்கு மகட்கொடைக்குரியராகவும் குறுநில மன்னராகவும் இருந்து கோலோச்சி வந்தனர் என்றும் அறிகின்றோம். அழுந்தூர் வேள், நாங்கூர்வேள், இருங்கோவேள் என்பாரும் இவ் வேளிர் குடித்தோன்றல்களே. இவ்வேளிர்குடி நாட்டினைப் பற்றிப் பதினெண் வகைப்படும் என்பர். அப்பதினெண் வகையுள் ஒன்றாகிய #கொங்குவேளிர் குடியிற் பிறந்தமையால் இவர் குடிப் பெயராலேயே வழங்கப்பட்டனர்.

வேளிர் = வேந்தர்: – 5ஆம் நூற்றாண்டின் பெருங்கதை:

—முதற்பெருங் கோயின் முந்துதனக் கியற்றி

மணிப்பூண் கண்ணியர் மரபறி மாந்தர்—

மணியணிகலன் உடையவரும், ஏனாதி, காவிதி என்னும் பட்டங்களைப் பெற்று அவற்றிற்கு அறிகுறியாகப் பொற்பூங்கண்ணி அணிந்தவரும்

கண்ணத்தை – காவிதி – பட்டம்பெற்ற வேளிர் – கொங்கு வெள்ளாள கவுண்டர் கோத்திரம்:

“ஏனாதி நல்லுதடன் காவிதி கண்ணந்தை” – நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரை

சோழனின் திருவிந்தலூர் செப்பேடு: – கண்ணந்தை காவிதி (அமைச்சர்)

சிலப்பதிகார காலத்திலேயே (சமணத்தின் வீழ்ச்சி – பௌத்த வணிகத்தின் எழுச்சி – கி.பி 5ஆம் நூற்றாண்டு) காவிதி பட்டம் எய்திய அரசானை எழுதும் அதிகாரிகள் குறிக்கப்படுகிறார்கள்.

”ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்

காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு”

இதன் தொடர்ச்சியாக பாண்டிய நாட்டில் சைவ வேளாளர், கார்காத்த வேளாளர்,

பெரும்பாலும் பாண்டியனுக்கு அமைச்கர்களாகவும், இருந்ததால் இவர்கள் காவிதி பட்டம் பெற்றோரே எனவும் நச்சினார்க்கினியரின் உரையில் இவர்கள் வேளிர் என்பது நிரூபணம். ஆனால் கண்ணந்தை கோத்திரம் கண்ண கோத்திரத்தில் இருந்து பிரிந்த கோத்திரம் என்பது கன்னிவாடி பட்டயத்தில் தெரிய வருகின்றது. ஆதலால் 8ஆம் நூற்றாண்டில் சோழர் எழுந்தபின்னர், சோழிய தேசத்தை சிறப்பிக்க சென்ற கவுண்டர்களில் கன்னந்தை, மணியன், செம்பன் போன்ற கோத்திரத்தார் முக்கிய பங்கு வகித்து பின்னர் நாடு திரும்பினர் என அறிய முடிகின்றது

வேளிர் வரலாறு – ராகவ ஐயங்கார் எழுதியது வேளாளர் பேரினம் தான் வேளிர் என சிறப்புற சொல்கிறது.

திருவனந்தபுர ஸம்ஸ்தானத்துச் சாஸன பரீக்ஷகராகிய ஸ்ரீமாந்.து.அ.கோபிநாதராயரவர்கள் M.A. “Travancore Archaeological Series No.11,12.” -களில் வெளிப்படுத்தியுள்ள கோக்கருநந்தடக்கன், விக்கிரமாதித்ய-வரகுணன் என்ற அரசரது சாஸனங்களால், அவ்விருவரும் தந்தையும் மகனுமாக

9-ம் நூற்றாண்டில் இருந்தவர்கள் என்பதும், #வேள்ஆயின்_மரபினரென்பதும், அவனாண்ட #ஆய்_குடியே தம் தலைநகராக உடையரென்பதும் விளங்குவதோடு, அன்னோர் #யதுவமிசத்து_விருஷ்ணி_குலத்தவரென்ற அரிய செய்தியும் வெளியாகின்றது. இன்னும், இவ்வாய் மரபினரின் நாடு தென் திருவாங்கூர் ராஜ்யமே எனவும், இவரது ஆய்குடி, கோட்டாறு (Kotaur) என்ற பழமை பெருமைவாய்ந்த ஊரேயாதல் வேண்டுமெனவும், சாஸனங்களில் #வேணாடு என வழங்குவது இவ்வாய் நாடே எனவும், 8-ம் நூற்றாண்டில் விளங்கிய ஜடிலவர்மன்- பராந்தகனென்ற பாண்டியனைப்பற்றிய சாஸனங்களில் இவ் வாய் மரபினர், மலைநாட்டு ஆய்வேள் (காராளர்) என்றும், #வேண்_மன்னன் என்றும் வழங்கப்பட்டுள்ளார் எனவும், ஸ்ரீமாந்-ராயரவர்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள்.

மேலும், வேளிர் வரலாற்றில் “#துவரையாண்ட_கண்ணபிரானது_வழியினரே_வேளிர்” என்றெழுதிய நச்சினார்க்கினியர் கூற்றிற்குப் பொருந்த, பிற்காலத்து ஆய்வமிசத்தரசர், அக்கண்ணனது விருஷ்ணி குலத்தவராகச் சாஸனங்களிலும், கூறப்பட்டுள்ளது.

#வேணாடு, #வேண்மன்னன்,

#ஆய்வேள் என்ற தொடர்கள் சாஸனங்களிற் பயிலுதலுடன் ஆய்குடி என்ற பழைய நகரே பிற்காலத்து ஆய்மரபினர்க்கு உரியதாயிருந்தமையும் அறியத் தக்கன. இவற்றுள், வேணாடு (வேளாளர்களுடைய நாடு) என்பது, வேளிருள் ஒரு பிரிவினராகிய ஆய்மரபினர் குடியேறி ஆண்டமைபற்றிப் பின்பு வழங்கிய பெயரே என்பதும், மகாராஷ்டிரமாகிய #வேள்புலமே அவர்களது பூர்வ தேசமென்பதற்கு, பிற்பட்ட சாஸனங்களிலன்றிப் பழைய தமிழ் நூல்களில் தென்திருவாங்கூர் வேணாடு என வழங்காமையே சான்றாதலும் ஆகும். இந்த ஆய்வேள் வம்சத்தினர் வேளாளர்கள் ஆவர். தற்கால ஆயர் என்று செல்பவர்களுடன் தொடர்புடையவர்கள் அன்று.




வேளாளர் நாகரிகம் – மறைமலை அடிகள்ச்இ எழுதியது வேளாளர் தம் பெருமையினல வேளிர் (வேளாளர்) வரலாறு தொட்டு எடுத்தியம்புகிறது.

மேற்கண்டவை ஒரு உதாரணம் மட்டுமே. வேளிர் தான் வெள்ளாளர் என்பது வரலாற்று திரிப்புவாதிகள் தவிர அனைத்து ஆய்வாளர்களும் மூல ஆதாரங்களோடு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். ஆனால் சில அறிவிலார்கள் தான் வேளிர் பற்றி அறிவின்மையால் புரியாது பிதற்றுவது நகைப்புக்கு உரியது. அறமென்றால் என்னவென்றே தெரியாத இடங்கை சாதியனர் க்ஷத்திரியன் என்பதை விட கொடூரம் வேறுண்டோ? #க்ஷத்திரியன்_என்ற_சொல்லுக்கு_உரித்தானவர்கள்_வெள்ளாளர்_மட்டுமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *