இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பெற்றுதர மறுக்கின்றனவா? இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள்!!
இஸ்லாமியர்களின் உரிமைகளை பெற்று தர மறுக்கின்றனவா? இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள்?
1.இந்திய யூனியன் மூஸ்லீம் லீக்
2.தமிழ்நாடு மாநில மூஸ்லீம் லீக்
3.மனித நேய ஜனநாய கட்சி
4.மனித நேய மக்கள் கட்சி
5.SDPI – சோஷியல் டேமாக்ரேட்டிக் ஃபார்டி ஆப் இந்தியா (Social Democratic Party of India )
6.காயல்பட்டிணம் அப்பாஸ் தலைமையிலான ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கட்சி
7. இந்திய சமூக ஜனநாயக கட்சி
8.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
9.தமிழ்நாடு மூஸ்லீம் முன்னேற்ற கழகம்
10.தப்ளிக் ஜமாஅத்
11.இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக்
12.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
13.பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா
14.ஜமாத்&இ&இஸ்லாமி
15.தேசியலீக் கட்சி
16.மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
17.இந்திய தேசிய லீக்
இந்திய விடுதலைக்கு முன் ஒன்றிணைந்த இந்தியா முழுக்க இஸ்லாமியர்கள் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கத்தில் பல்வேறு அரசு பணிகளில் கீழ்மட்ட பதவிகள் முதல் நீதிபதிகள், IAS அதிகாரிகள், அரசாங்க வக்கீல்கள், டாக்டர், தாசில்தார்கள், IPS அதிகாரிகள் என நீதித்துறை, சட்டத்துறை, காவல்துறை, வருவாய் துறை, இராணுவம், உள்துறை, வெளியுறவுத்துறை, பத்திரப்பதிவுதுறை, விவசாய துறை, ஆராய்ச்சி துறை, சயின்டிஸ்ட், மத்திய பாதுகாப்பு துறை, பொதுப்பணிதுறை, இரயில்வே துறை, வங்கி துறைகள், வருமான வரிதுறை என பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் அங்கம் வகிக்காத அரசு, அரசாங்க துறைகளே கிடையாது என சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய பிரிட்டிஷ் இந்தியா அதிகார மட்டத்தில் இருந்தோம்,
இந்திய விடுதலைக்கு பின் சாதி ரீதியான இடஒதுக்கீடு என்ற ஒரு முறையை கொண்டு வந்து இஸ்லாமியர்களின் அறிவு திறமை என்பது முழுவதும் மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை!!
விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கத்தில் இஸ்லாமிய நீதிபதிகள், காவல்துறையினர் இருந்தோம்!!
தற்பொழுது தமிழ்நாட்டில் இஸ்லாமிய நீதிபதிகளின், SP, DSP என இஸ்லாமிய IAS, IPS அதிகாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த அளவுக்கு தமிழக, இந்திய அரசுகளில் இஸ்லாமிய அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை என்பது மிகவும் கீழே சென்று விட்டது!!
ஆனால் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறோம், இஸ்லாமிய உரிமைகளுக்காக செயல்படுகிறோம் என்ற சொல்லக்கூடிய நமது இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் இஸ்லாமியர்களுக்கான உரிமை பெற்று தந்தனவா என்றால் கிடையாது, மாறாக இந்துக்களுடன் பகையை மட்டும் அதிகளவில் வளர்த்து விடுகின்றன நேரடியாகவோ, மறைமுகமாகவோ!!!
நமது தமிழக இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் அரசு பணிகளில் என்ன இடஒதுக்கீடு எங்கே இருக்கிறது?
கேட்டால் BC (M) பிற்படுத்தப்பட்ட மூஸ்லீம்களுக்கு 3% தனி இடஒதுக்கீடு இருக்கிறது என்கின்றன, ஆனால் தமிழக பெரும்பான்மை மக்கள்தொகையுடைய மூஸ்லிம்கள் அனைவரும் தமிழக சாதி பட்டியலில் முற்படுத்தப்பட்ட (FC) பிரிவில் அல்லவா வருகிறோம்!!
கீழே குறிப்பிட்ட நமது இஸ்லாமிய சமூகங்கள் தமிழகத்தில் முற்படுத்தப்பட்ட சாதி பட்டியலில் வருகிறோம் :
1.தாவூத் (608)
2.கட்ஸு (சைத்)(609)
3.மீர் (610)
4.மைமன் (சைத்) (611)
5.நவாப் (612)
6.(அன்சார், தெக்காணி, துதிகுலா, லப்பை, இராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக், சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
7.கதுப்பத்தான் (720)
8.காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)
9.பத்தான் (பட்டானி),
10. கான் (747)
11.ராவுத்த நாயுடு (750)
இந்த நமது இஸ்லாமிய சமூகங்களுக்கு இந்திய விடுதலைக்கு பின் இடஒதுக்கீடு என்பதே கிடையாது!!
இந்திய யூனியன் மூஸ்லீம் லீக், தமிழ்நாடு யூனியன் மூஸ்லீம் லீக் போன்ற கட்சிகளில் தலைமை பொறுப்பில் இருப்பதே நமது தாவூத் சமூகத்தார் தான்!!
இந்த மேலே குறிப்பிட்ட 11 இஸ்லாமிய சமூகங்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பிலும் சரி, தமிழக அரசு கல்வி நிறுவனங்களிலும் சரி இடஒதுக்கீடே கிடையாது,
இதுபோக தமிழகத்தில் அரசியல் கட்சிகளில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என்பது அளப்பறியது, ஆனால் என்ன புண்ணியம்?
பெரும்பான்மை இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடே இல்லையே,
இந்திய யூனியன் மூஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்றவை திமுக பக்கம்,
தமிழ்நாடு மாநில மூஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாய கட்சி அதிமுக பக்கம்
SDPI அமமுக பக்கம்
இதுபோக திமுக, அதிமுக பக்கம் சில பல MLA, MP அமைச்சர் இருந்து என்ன புண்ணியம்?
இஸ்லாமிய இடஒதுக்கீடு பூஜ்ஜியம்!!
தமிழ்நாடு சில ஏழு பிரிவு தமிழை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமிய சமூகங்களுக்கு மட்டுமே அந்த பிற்படுத்தப்பட்ட (BCM) பிரிவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இந்த 3% இடஒதுக்கீடு !!
சில தாவூத் சமூக இஸ்லாமியர்கள் தெக்கானியாக மாற்றி அரசாங்கத்தை ஏமாற்றி BCM வாங்கி கொண்டு பாரம்பரிய தாவூத் சமூகத்தை நமக்கு நாமே இழிவுப்படுத்துகிறோம்!!
சில நவாப் சமூக இஸ்லாமியர்கள் சேக், ஷையது என்று வாங்கி மன்னர் பரம்பரை நவாப் சமூகத்தையே கேவளப்படுத்தி கொள்கிறோம்!!
மீர் சமூகம் ராவுத்தராக மாறிபோகிறோம்,
பத்தான் லெப்பையாக மாறி BCM வாங்கி கொள்கிறோம்!!
நமக்கே இது அசிங்கமாகப்படவில்லையா?
ஆனால் மத்திய அரசு சார்பாக 10% பொருளாதார இடஒதுக்கீட்டை இந்தியா முழுக்க கொண்டு வந்தது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு விட்ட இந்த 10% பொருளாதார இடஒதுக்கீடு (EWS) ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அதிமுக அரசை அமல்படுத்தவிடாமல் நாம் தமிழர், அமமுக, திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, இஸ்லாமிய மார்க்க மறுப்பை பேசும் திக, பெரியாரிய கோஷ்டிகள் பெரும்பான்மை இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையை தடுக்கின்றன!!
பெரும்பான்மை இஸ்லாமியர்களுக்கான இந்த 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு எதிராக பேச கூட, குரல் கொடுக்க கூட திரணி போனதா இஸ்லாமியர் பெயர் சொல்லி நடத்தும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள்,
இந்த EWS எனப்படும் 10% பொருளாதார இடஒதுக்கீடு என்பது தமிழகத்தில் அமல்படுத்தினால் TNPSC, தமிழக காவல் துறை, Group1, Group 2 பணிகள், தமிழக பொதுபணிதுறை, தமிழக விவசாய துறை, தாசில்தார், நீதிபதிகள், வருவாய் துறை, போக்குவரத்து துறை போன்றவற்றில் எளிதாக பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வேலைக்கு செல்லலாமே
மேலும் தமிழக அரசு மற்றும் தனியார் கல்விதுறைகளில் மருத்துவ படிப்பு, பொறியியல், கிண்டி அண்ணா University, தமிழக அரசு நடத்தும் பாரதியார், பாரதிதாசன், காமராஜர், தமிழ்நாடு மாநில கல்லூரி, தமிழக சட்டக்கல்லூரிகள் எளிதாக உயர்கல்வி படிக்க செல்ல இந்த 10% பொருளாதார இடஒதுக்கீடு (EWS) என்பது உதவுமே! !!
ஆனால் நமது இஸ்லாமிய கட்சிகள் அவர்களின் சொந்த சுயநலத்திற்கும், அரசியல் லாபத்திற்கும், அவர்கள் சொத்து சேர்க்கவும் தான் இந்த பெரும்பான்மை முற்படுத்தப்பட்ட (FC) இஸ்லாமிய சமூங்களை இஸ்லாமிய கட்சிகள் பயன்படுத்தி கொள்கின்றனர்!!!
ஒற்றுமையாக இருந்த இந்துகள் – மூஸ்லீம்களிடையே பகையை தான் அதிகமாக வளர்த்துள்ளனரே தவிர
தமிழக இஸ்லாமியர்களுக்கு தமிழக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எதை இந்த இஸ்லாமிய கட்சிகள் பெற்று தந்தன ?
அதிலும் இந்த திமுக கனிமொழி MP இருக்காங்களே, இவங்க தான் இஸ்லாமியர்களுக்கான 10% பொருளாதார இடஒதுக்கீட்டை பெரிய அளவில் எதிர்த்தது, இஸ்லாமியர்களுக்கு துரோகத்தை தான் அதிகளவில் திமுக தான் செய்கிறது!!
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% பொருளாதார இடஒதுக்கீட்டை அமல்படுத்த இனியாவது இஸ்லாமிய அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் குரல் கொடுக்குமா? என்று பார்ப்போம்!!