வெள்ளாள முதலியாருக்கு கருணாநிதி செய்த துரோகம்?? திமுக அன்பழகன் முதலியார் | Anbalagan Vellala Mudhaliyaar | DMK! ஆர்எஸ் பாரதி! சேக்கிழார்! ஆற்காடு! வேளாளர்

Like
Like Love Haha Wow Sad Angry

திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் முதலியார் அவர்கள் வரலாறு

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கோட்டூர் பகுதியில் திரு. கல்யாணசுந்தரம் முதலியார் மற்றும் சுவர்ணாம்பாள் தம்பதியருக்கு 1922 இல் ராமய்யா எனும் பெயரில் மகனாக பிறந்தார் அன்பழகன்.

மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தின் பால் ஈர்ப்பு கொண்ட கல்யாணசுந்தரம் முதலியார் அவர்கள் தனது பெயரை ‘மணவழகன்’ என்று மாற்றிக்கொண்டிருந்தார், தந்தையைப் போலவே தனித்தமிழ் பற்றுக் கொண்டிருந்த மகன் ராமய்யாவும் தனது பெயரை ‘அன்பழகன்’ என்று மாற்றிக் கொண்டார்.அந்நாளில் ‘பண்ணையார்’ தஞ்சை வி.எஸ். தியாகராஜர் முதலியார் மற்றும் ‘தமிழவேள்’ சர் பிடி ராஜன் தலைமையில் நடைபெற்ற தொண்டை மண்டல முதலியார்கள் மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய கல்லூரி மாணவனான க.அன்பழகன் அவர்கள், அத்தனை பெரிய பண்ணையார்கள் மற்றும் செல்வந்தர்கள் மத்தியிலயே சாதியை எதிர்த்து கடுமையாக அந்த மாநாட்டு மேடையிலயே பேசினார்; சங்க இலக்கியத்தில் சாதி எனும் சொல் இருக்கிறதா எனும் கேள்வியையும் எழுப்பினார், கடும் கோபத்திற்கு உள்ளான வி.எஸ். தியாகராஜ முதலியாரும் அங்கிருந்த சிலரும் மாநாட்டை விட்டே வெளியேறினார் என்பது வரலாறு.

அதே போல ‘அஞ்சாநெஞ்சன்’ பட்டுக்கோட்டை அழகிரியின் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அன்பழகன் அவர்கள் அழகிரியாரின் கடைசி காலங்களில் அவரை முறையாக காக்க தவறியதன் மூலம் பெரும்பிழையை இழைத்து விட்டது என பெரியாரையும் திராவிடர் கழகத்தையும் நேரடியாக சாடினார். இதனை அடுத்து இனி எந்த திராவிடர் கழக மாநாட்டிலும் பங்கேற்கக் கூடாது எனும் பெரியாரின் கட்டளையினால் தடைக்கு உள்ளானார் அன்பழகன். அப்படி அவர் தடைக்கு உள்ளான சில மாதங்களிலயே திராவிடர் கழகம் இரண்டாக உடைந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் எனும் புதிய கழகம் பிறந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் தான் திராவிட இயக்க வரலாற்றில் ‘ தவறென்று மனதில் பட்டதை யாராக இருந்தாலும் நானாக இருந்தாலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசக்கூடியவர்’ என பேரறிஞர் அண்ணாவினாலயே போற்றப்பட்டார் அன்பழகன்.

சுயசாதி விமர்சனம், யாருக்கும் அஞ்சாத திறம், கட்சி கொள்கையின் உறுதியான தொண்டன் என தான் வாழ்ந்த கடைசி காலம் வரையில் அண்ணாவின் உண்மையான தம்பியாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் பேராசிரியர் அன்பழகன் என்றால் மிகையாகாது.

அமைதி சூழட்டும்,
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா..!

வெள்ளாள முதலியாருக்கு கருணாநிதி செய்த துரோகம்:

 

திமுக என்பது முதலியார் சங்கம் என்பது அக்காலத்திலிருந்தே வந்த நம்பிக்கை, அதன் தொடக்க காட்சிகள் அப்படித்தான் இருந்தது.அண்ணாதுரை உட்பட ஏகபட்ட முன்னணி தலைவர்கள் முதலியார்களாகவே இருந்தனர், அது திராவிடர் கழகமா முதலியார் கழகமா என்றெல்லாம் கேள்விகள் இருந்தன‌
இந்த கூட்டத்தில் 10த்தோடு ஒன்றாக இருந்தார் கருணாநிதி, இந்த முதலியார் படையினை தனக்கு எங்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு தொடக்கத்திலே இருந்ததுகருணாநிதியின் பெரும் சாதுர்யம் இது, எது பலமோ அல்லது பலவீனமோ அதை தனக்கு சாதகமாக மாறும் காலம் வரை பொறுத்திருப்பார், பின் சட்டென பாய்வார், காலம் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தபொழுது வந்தது, முதலில் மந்திரி சபையில் கருணாநிதிக்கு இடமில்லை, அந்த முதலியார் படையே அமைச்சராயிருந்தது,
மிக சரியாக அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தன் சித்துவிளையாட்டுக்களை தொடங்கினார் கருணாநிதி
தாழ்த்தபட்ட.சமூகத்திற்கு மந்திரி பதவி இல்லை என்றும் அண்ணா முதலியார் பக்கம் சாதிவெறி காட்டிவிட்டார் என்றும் கட்சி உடைபட போவதாகவும் பெரும் வதந்திகள் வந்தன‌

அதை கிளப்பிவிட்டவர் யாரென சொல்ல தேவையில்லை, விஷயத்தை கேள்விபட்டு குழம்பி பதறிய அண்ணா முன்னால் அமைதிபடை சத்தியராஜ் போல் நின்ற கருணாநிதி, இதெல்லாம் எவனோ பதவிக்கு ஆசைபட்டவன் கிளப்பிய வதந்தி என்றும் காலமெல்லாம் பதவியின்றி உழைக்க கருணாநிதி போன்ற தம்பிகள் ஆயிரம் உண்டெனவும் ஆறுதல் சொல்லிகொண்டிருந்தார்,அப்படியே தாழ்த்தபட்ட.சமூகத்தை சேர்ந்தவருக்கு பதவி கொடுத்தால் காமரஜர் கக்கனுக்கு கொடுத்தது போல் கொடுத்தால் இச்சிக்கல் தீருமென்றார், தன்னைவிட தாழ்த்தபட்டவன் கட்சியில் இல்லை என்பது அவருக்கு தெரியாதா? அண்ணாவுக்குத்தான் புரியாதா?
விளைவு கருணாநிதி பொதுபணித்துறை அமைச்சரானார், அப்படியே முதலியார்களை சரித்துவிட்டு முதல்வருமானார், முதல்வரான பின் முதலியார் அல்லாதோரை வளர்த்துவிட்டு திமுகவில் முதலியார் ஆதிக்கத்தை முறித்தும் போட்டார்

 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

301 Moved Permanently

301 Moved Permanently


nginx