முஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :

Like
Like Love Haha Wow Sad Angry

முஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :

 
முஸ்லீம்களுக்கான சமூகநீதியை குழித்தோண்டி புதைக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், திக, பெரியாரிய, இல்லாத தலீத்தீயம் பேசுபவர்கள்!!! 

திமுக சமூக நீதியை திமுக மட்டுமே அதிகமாக பேசுவது போல் பெரியதாக காட்டி கொள்கிறது, அப்படி காட்டி கொள்வதில் திமுக விற்கு அளாதி பிரியமும் கூட!! காரணம் அரசியல் ஓட்டு, ஆனால் திமுக உண்மையிலே சமூகநீதியை எல்லாம் வழங்க போராட, உழைக்கவில்லை என்பதே உண்மை, சாதிகளை வைத்து சுத்த சாதி அரசியலை தான் திமுக செய்தது!!
வரப்போகும் தேர்தலில் தோற்க போகிறோம் என்று தெரிந்து பயம் வந்தால் போதும் உடனே குறிப்பிட்ட சில சாதிகளை கையில் எடுத்து அந்த சாதியினர் கோரிக்கை வைக்காவிட்டாலும் திமுகவே அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க உடனே ஓடிவந்து முன்வந்து சமூக நீதியை தாங்கள் தான் முன்வந்து நிலைநிறுத்தியது போல் பிம்பத்தை உருவாக்கி கொள்ளும்!!
அப்படி தான் அருந்தியர்கள் கேட்காமலே SC பட்டியலில் அருந்தியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கி SC பட்டியலில் உள்ள பல்வேறு சாதிகளுக்கு இடையே மறைமுக சாதி சண்டையை இழுத்து விட்டது,
குறிப்பு : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அவர்களின் கட்சி சார்பாக அருந்தியர்களுக்கு 3% உள்இடஒதுக்கீடு திமுக வழங்கியதை திரும்ப பெற கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது, ஏழு ஆண்டுகளுக்கு மேலாக
அதுபோக தற்பொழுது 2021 தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் பாமக விற்கு செக் வைக்க MBC மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவோம் என பேசி மறுபடியும் இடஒதுக்கீடு அரசியலை கையில் எடுத்து MBC பட்டியலில் உள்ள கள்ளர், மறவர், முத்தரையர், குயவர், கோனார், கம்பளத்து நாயக்கர், தொட்டிய நாயக்கர் என பல்வேறு சாதிகளுக்கும், வன்னியர்களுக்கும் இடையே சண்டையை அல்லது பதட்ட சூழ்நிலையை உருவாக்கி MBC யில் உள்ள வன்னியர் அல்லாத மற்ற சாதிகள் வன்னியர்களை எதிரியாக பார்க்கும் சூழ்நிலையை உருவாக்கி பாமகவை வடமாவட்டங்கள் தவிர தென்மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கொங்கு மேற்கு மாவட்டங்களில் வளரவிடாமல் தடுக்க நினைக்கிறது,எப்படியென்றால் வன்னியர்களுக்கு தனிஇடஒதுக்கீடு வழங்குவோம் என்று திமுக பேசினால் அதனை பாமக வால் எதிர்க்க முடியாது சூழ்நிலை உருவாகும், வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை பாமக எதிர்த்தால் வன்னியர்களுக்கு எதிரான கட்சி பாமக என்று திமுக பிரச்சாரம் செய்யும்,
வன்னியர்களுக்கு தனிஇடஒதுக்கீட்டை பாமக ஆதரித்தால் கள்ளர், மறவர், வேட்டுவர், முத்தரையர், கம்பளத்து நாயக்கர், தொட்டிய நாயக்கர், குலாலர், வண்ணார், கோனார், பண்டாரம், குறவர் போன்ற சாதிகள் பாமக கட்சியை விட்டு விலகுவார்கள்!!! பாமக கொஞ்ச காலமாக தான் சாதி கட்சி என்ற பிம்பத்தை தாண்டி அனைத்து சாதிகளுக்குமான கட்சி என்ற அந்தஸ்த்தை எட்டவிடாமல் திமுக செய்யும் சூழ்ச்சி, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது பாமக சார்பாகவும், 2019 பாராளுமன்ற தேர்தலின் போதும், 2019 உள்ளாட்சி தேர்தலின் போதும்,
2014 பாராளுமன்ற தேர்தலின் போதும் தான் பாமக சார்பாக பிராமணர், வெள்ளாள பிள்ளைமார், வெள்ளாள முதலியார், வெள்ளாள கவுண்டர், பள்ளர், பறையர், செட்டியார், கள்ளர், மறவர், அகமுடையார், கோனார், நாயுடு, ரெட்டியார் என அனைத்து சாதி மக்களுக்கும் பாமக MLA, MP , கவுன்சிலர் சீட் வழங்கி அனைத்து மக்களுக்குமான கட்சியாக அன்புமணி ராமதாஸ் அவர்களால் கொண்டுவரப்பட்டு வரும் சூழ்நிலையில் தான் வன்னியர்களுக்கு தனிஇடஒநுக்கீடு என பேசி திமுக வானது பாமகவை அரசியலில் முடித்து விட துடிக்கிறது!!
மேலும் BC பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த இஸ்லாமியர்கள் தங்களுக்கு தனிஒதுக்கீடு கேட்டு கோரிக்கையே வைக்காத சூழ்நிலையில் BC பிரிவில் இஸ்லாமியர்களுக்கு தனிஇடஒதுக்கீடு வழங்கி நாடார், கொங்கு வெள்ளாள கவுண்டர், வெள்ளாள பிள்ளைமார், அகமுடையார், ஒக்காலிக, பரதவர், ஈழவர், செட்டியார்கள் இன்னும் சில சாதிகள் இஸ்லாமியர்கள் மேல் கோவத்தை கொப்பழிக்ககும் வண்ணம் தூண்டி விட்டது!!
இதையெல்லாம் சமூக நீதி என்ற பெயரில் மறைமுகமாக சாதி சண்டையை, மதசண்டையை இழுத்து விட்டது திமுக,
அப்படி பார்த்தாலும்
BC யில் இஸ்லாமியர்களுக்கு 3% தனிஇடஒதுக்கீடு வழங்கினாலுமே தமிழ்நாட்டில் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அது வழங்கப்படவில்லை என்பது இஸ்லாமியர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை!!தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சாதிகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஏழு பிரிவு இஸ்லாமியர்களுக்கு மட்டும் அந்த 3% இடஒதுக்கீட்டை வழங்கிவிட்டு என்னமோ ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் தான் இடஒதுக்கீடு வழங்கியது போல் பிம்பம் காட்டி பொய் பிரச்சாரம் செய்தது திமுக!!!
ஆனால் பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சாதிகளுக்கு எவ்வித இடஒதுக்கீடும் இல்லை, அந்த பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சாதிகள் முற்படுத்தப்பட்டபிரிவில் வருகின்றன!! மேலும் பல இஸ்லாமிய சாதிகள் தங்கள் இன்ன இஸ்லாமிய சாதியென்று அரசுக்கே சொல்லாமல் வாழ்ந்து வருகின்றன!!

இப்படி பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சாதிகள் இடஒதுக்கீடே இல்லாமல் இன்னலில் தவிக்கும் போது மத்திய அரசாக பார்த்து 10% பொருளாதார இடஒதுக்கீட்டை கொண்டுவந்தது, அந்த 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த விடாமல் திமுக, மதிமுக, திக, விசிக, சில மூஸ்லீம் கட்சிகள், கம்யூனிஸ்ட்கள், பெரியாரியவாதிகள், இல்லாத தலீத்தீயத்தை பேசுபவர்கள், நாம் தமிழர் கட்சி, அமமுக
போன்ற கட்சிகள் எதிர்த்து வருகின்றனர், கண்மூடித்தனமாக!!!
கீழே நீங்கள் காணும் இஸ்லாமிய சாதிகள் தமிழ்நாட்டில் முற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர், ஒட்டுமொத்த தமிழக இஸ்லாமியர்களில் இவர்களின் மக்கள்தொகை எண்ணிக்கையும் அதிகமாகும்!! இவர்களுக்கானது தான் இந்த 10% பொருளாதார இடஒதுக்கீடு!!
1.தாவூத் (608)
2.கட்ஸு (சைத்)(609)
3.மீர் (610)
4.மைமன் (சைத்) (611)
5.நவாப் (612)
6.(அன்சார், தெக்காணி, துதிகுலா, லப்பை, இராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக், சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
7. கதுப்பத்தான் (720)
8. பத்தான் (பட்டானி), கான் (747)
9. காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)
இந்த இஸ்லாமிய சாதிகளுக்கான 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தான் அதிமுக அரசை அமல்படுத்த விடாமல் திமுக அதன் கூட்டணி கட்சிகள் தடுத்து வருகின்றன!!
மேலே உள்ள இஸ்லாமியர்கள் அதிகமாக தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருண்ணாமலை, சென்னை, செங்கற்பட்டு, திண்டுக்கல், திருப்பூர், கோவை, தென்காசி, இராமநாதபுரம், மதுரை, திருச்சி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் அதிக மக்கள்தொகையில் வசித்து வருகின்றனர்!!
நவாப்பு சாதியினர் வடமாவட்டங்களில் அதிகமாக உள்ளனர்!!
தாவூத், கட்ஸீ, கான் போன்ற இஸ்லாமிய சாதிகள் டெல்டா மாவட்டங்களில் அதிகமாக வாழ்கின்றனர்!!ஆனால்
கேட்டால் அதிமுக தான் இஸ்லாமியர்களுக்கு எதிரானது திமுக இஸ்லாமியர்களுக்கானது என்ற பொய் மாய பிம்பத்தை திமுக உருவாக்கி வைத்துள்ளது!!
ஆனால் உண்மையிலே திமுக தான் இஸ்லாமியர்களுக்கான சமூக நீதி 10% பொருளாதார இடஒதுக்கீட்டை குழித்தோண்டி புதைத்தது!!!
திமுக இஸ்லாமியர்களுக்கு மறைமுகமாக துரோகம் இழைக்கிறது என்பதே உண்மை!!
இந்துத்துவா பாஜகவை வலிமையாக எதிர்ப்பது திமுக தான் என்பது போல் திமுக காண்பித்து கொள்ளும் ஆனால் பதவி ஆசைக்காக வாஜ்பாய் காலத்தில் பாஜக உடன் இணைந்தது போல் பதவி சுகம், ஊழல் வழக்கில் தப்பிக்க, ஊழல் செய்ய தீடீரென பாஜக வுடன் திமுக இணைந்தாலும் இணைந்து விடும், தங்களது பதவி சுகத்திற்காக திமுக என்னவேண்டுமென்றாலும் செய்யும்!!!
இஸ்லாமியர்களுக்கான சமூக நீதி இடஒதுக்கீடு பற்றி அறிந்து கொள்ள
தொடர்புக்கு
முகம்மது கவுஸ் கான் 9629908758
Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

İzmir Escort Hacklink #yaslikurt#1xbet зеркалоpromosyonjokerbet girişhd film izleevden eve nakliyat jigolo ajansi jigolo ajansi ugurnakliyat instagetfollower instagram takipçi satın al evden eve nakliyat