கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல்
கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் அவர்கள் இறந்ததும் கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில்
பாஜக நிற்பதா, அதிமுக நிற்பதா என்ற வாதம் பரவலாக பேசப்பட்டு வருகிறது,
இடை இடையே பாஜக சார்பாக விக்டோரியா கௌரி பாஜக தேசிய மகளிரணி செயலாளர் என்ற நாடார் பெண்மணி பெயரும்
விமர்சகர் ரவீந்திரன் துரைச்சாமி என்ற இந்து நாடார் பெயரும்
மோடிக்கு நெருக்கமான இராமநாதப்புரத்தை சார்ந்த ஜெகதீஸ் பாண்டியன் என்ற கிறிஸ்த்துவ நாடார் பெயரும்
கன்னியாகுமாரி பாராளுமன்ற தேர்தலில் தலைமை அறிவித்தால் நானும் நிற்க தயார் என *பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனும்*
என மாற்றி மாற்றி பாஜக வில் பேசி வர
பாஜக சார்பாக பொன்னார் நின்றால் கண்டிப்பாக தோற்கடிப்போம் என வெள்ளாளர்களும் போர்கொடி தூக்கியுள்ளனர்,
காரணம் என்னவென கேட்டால்
கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள இந்துகள் மக்கள் தொகையில் 60% பேர் வெள்ளாளர்கள், ஆனால் பாஜக வில் இந்து வெள்ளாளர்களுக்கு எவ்வித பெரிய பதவியும் வழங்கப்படவில்லை
முற்படுத்தப்பட்ட பிரிவில் 25 க்கும் மேற்பட்ட வெள்ளாள உட்பிரிவுகள் உள்ளோம், ஆனால் தமிழக பாஜக தமிழகத்தில் 10% பொருளாதார இடஒதுக்கீட்டை அமல்படுத்த எவ்வித வலுவான பெரிய நடவடிக்கையும் பாஜக தமிழகத்தில் எடுக்கவில்லை என மனகுமுறலை வெளிப்படுத்துகின்றனர் வெள்ளாளர்கள்,
மேலும் *மீனவர் சமுதாயத்தை சார்ந்தவரை நிறுத்தினால் அவரை வெற்றி பெற செய்வோம் என்று தீர்மானம் போட்டுள்ளனர் மீனவர் சங்கங்கள், காரணம் என்னவென்று கேட்டால் கன்னியாகுமாரி மாவட்டத்தில் கிறிஸ்த்து நாடார், இந்து நாடார் என பிரிந்து இருப்பது போல் நாடார்கள் காட்டி கொண்டு அஇஅதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளிலும் பெரிய பெரிய பொறுப்புகளை நாடார்கள் லாபி செய்து பெற்று கொண்டு கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை வெள்ளாளர்கள் (பிள்ளை,செட்டியார், ஓதுவார், தேசிகர், குருக்கள் பட்டங்கள்) மீனவர்களின் அரசியல் அதிகாரத்தையும் குழிதோண்டி புதைக்கின்றனர் நாடார்கள் என்கின்றனர் நம்மிடம் தொடர்பில் உள்ள கன்னியாகுமாரி மாவட்ட மீனவர்கள் மற்றும் வெள்ளாளர்கள்*
ஆனால் காங்கிரஸின் வசந்தகுமார் மகனை இடைத்தேர்தலில் நிற்க வைத்து அனுதாப ஓட்டுகள் மூலம் வென்று விடலாம் என ஒருசிலர் நம்புகின்றனர்,
ஆனால் காங்கிரஸில் பிரச்சனை என்னவென்றால் நாங்குநேரியில் MLA வாக இருந்த வசந்தகுமாரை MLA பதவியை ராஜினாமா செய்ய வைத்து அவரை கொண்டு போயி கன்னியாகுமாரி பாராளுமன்ற தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற்றதும் அவர் இறந்து தற்பொழுது நாங்குநேரி சட்டமன்றமும் காங்கிரஸீக்கு கை விட்டு போனது, கன்னியாகுமாரி பாராளுமன்ற தொகுதியும் காங்கிரஸ் கைவிட்டு போக போகிறது என காங்கிரஸ் வட்டார நிர்வாகிகள் முனுமுனுக்கின்றனர்!!
காரணம் கேட்டால்
பெரும்பான்மை காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுவது அனுதாப ஓட்டுகள் விழுவதற்கு வசந்தகுமார் என்ன சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று இறந்து போனாரா ? அல்லது மக்கள் நலத்திட்டங்கள் செய்யும் போது தீவிரவாதிகளின் கைளால் இறந்தாரா?
பாதுகாப்பாக இல்லாமல் கொரோனோ வில் சிக்கி இறந்தவருக்காக எப்படி மக்கள் அனுதாப ஓட்டு அளிப்பார்கள் என கன்னியாகுமாரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் முனுமுனுக்கின்றனர்!!!
அதேவேளையில் விளவங்கோடு MLA வாக உள்ள மூத்த காங்கிரஸ் நிர்வாகி, சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்
*விஜயதாரணியும் கன்னியாகுமாரியில் காங்கிரஸ் சார்பில் நிற்க MP சீட் கேட்டுவவருவதாகவும் தகவல்*
விஜயதாரணிக்கு காங்கிரஸ் சார்பில் சீட் வழங்கினால் இவர் இந்து, இறந்து போன இவரது கணவர் ஒரு கிறிஸ்த்தவர் என இந்து மற்றும் கிறிஸ்த்துவ மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளவர் விஜயதாரணி!!!
ஆகையால் இந்து மற்றும் கிறிஸ்த்துவ என இருபக்க ஓட்டுகளும் விஜயதாரணிக்கு விழும் என்கின்றனர் சில காங்கிரஸ் நிர்வாகிகள்,
மேலும் கொரோனோ காலகட்டத்தில் கேரளாவில் சிக்கியிருந்த கன்னியாகுமாரி மாவட்ட மக்களை மீட்பதிலும், கொரோனோ நிவாரணம் வழங்கியதிலும் கன்னியாகுமாரி மாவட்ட மற்ற MLA களை விட விஜயதாரணியே அதிகளவில் கொரோனோ காலகட்டத்தில் செயல்பட்டார் என்கின்றனர்!!!!
மேலும் பொன்னாரோ, வசந்தகுமாரோ கொரோனோ காலகட்டத்தில் கன்னியாகுமாரி மாவட்ட மக்களுக்கு போதிய அளவில் உதவிகள் செய்யவில்லை என்கின்றனர்,
அதுபோக கொரோனோ காலகட்டத்தில் வெளிமாநிலம், வெளிநாடுகளில் மீன் பிடிக்க சென்று சிக்கியிருந்த மீனவர்களையும் மீட்டு கொண்டுவந்ததில் முழுக்க முழுக்க காங்கிரஸ் விஜயதாரணி தான் காரணம் என்பதால் மீனவர்களின் ஓட்டும் விஜயதாரணி பக்கமே விழும் என்கின்றனர் சில மீனவ சங்க பிரதிநிதிகள்!!!
மேலும் ஒரு பெண்மணி என்பதால் சோனியா காந்தியும் விஜயதாரணியையே வேட்பாளராக அறிவிப்பார் என்ற பேச்சும் உள்ளது,
ஆக மொத்தம் கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக யாரை வேட்பாளராக நிறுத்தினாலும்