பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :
👆🏽🌾🎋🌏🎋🌾👆🏽 பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன்.
ஆடி 19 – பௌர்ணமி
(ஆவணி அவிட்டம்)
தமிழகத்தில் பலராமர் பெயரில் உள்ள ஊர் – வெள்ளக்கோயில்(வெள்ளையனக்கு கோயில்).
தங்கை பெயர்- சுபத்ரையை.
ரக்ஷா பந்தன் — அண்ணன் (பலராமர் ), தங்கை(சுபத்ரையை) உறவு.
பலராமன்– நீலாம்பரன் என்றும் நீல🇳🇷 உடை அணிபவன்.
கிருஷ்ணன் — பீதாம்பரன் என்றும் மஞ்சள் 🇻🇦உடை அணிபவன்.
*பலராமன்* – வெள்ளை🌖 நிறம் கிருஷ்ணன் – கருநீல 🌚வண்ணன்.
*பலராமன்* – பனைக்கொடி🌴 ஏந்தியவன்.
*கிருஷ்ணன்* – கருடக்கொடி🦅 ஏந்தியவன்.
*பலராமன்* – விவசாயத்தில் விருப்பம்🌾🎋 உள்ளவன்.
*கண்ணன்* – அரசியலில் 🤝🏽விருப்பம் உள்ளவன்.
*பலராமன்* – கலப்பை உலுக்கை⚓ வைத்திருப்பவன்.
*கிருஷ்ணன்* – சங்கு சக்ரதாரி ⚙️(பஞ்சஜன்யம்).
*பலராமன்* – பலதேவன் வெள்ளைச்சாமி.
*கிருஷ்ணன்* – மாயவன் கோமாளி ஐயன் , கருப்பண்ண கருப்பராயன், கருப்பச்சாமி.
*பலராமன் புள்ளிவிவரம்*
1. *ஆதிசேஷன்* அவதாரம்.
2. *புரி* தேர்த் திருவிழாவில் நீல நிற *பனைக்கொடி* பொறித்த தேரில் பவனி வருவான்.
3. *மனைவி பெயர்* – ரேவதி.
4. *வளர்ப்புத் தாய்* – ரோகிணி.
5. *தாய் தந்தை* – தேவகி, வசுதேவன்.
6. *தம்பி பெயர்* – கள்ளக் கிருஷ்ணன்.
7. *கையில் இருப்பது* – கலப்பை.
8. *கொடியில் திகழ்வது* – பனை மரம்.
9. *குடிக்கப் பிடிப்பது* – மது.
10. *எடுக்கப் பிடிப்பது* – முசலி எனும் உலக்கை.
11. *காதல் விவகாரத் தொடர்புகள்:* ருக்மினி- கிருஷ்ணன் காதலுக்கு ஆதரவு; சுபத்ரா- அர்ஜுனன் காதலுக்கு எதிர்ப்பு; லெட்சுமனா- சம்பா காதலில் நடுநிலை.
12. *மகன்கள் பெயர்:* உள்முகன், நிஷதன்.
13. *பிடித்த பொழுது போக்கு* – ஊர் சுற்றல் (தல யாத்திரை).
14. *தம்பியுடன் சேர்ந்து செய்த துஷ்ட நிக்ரஹம்:* தேனுகாசுரன், கம்சன், முஷ்டிகன், ரோமஹர்ஷணன், த்விவிடன், ருக்மின், ப்ரலம்பன்.
15. இதில் ரோமஹர்ஷனன் கொலை மட்டும் முன்கோபத்தில் தெரியாமல் செய்தது — அந்தப் பாவத்தைத் தீர்ப்பதற்காக தீர்த்த யாத்திரை சென்றார். இவன் மிகுந்த பலசாலீ. பெயரில் பல தேவன், பல பத்ரன், பல ராமன் என்பதில் இருந்தே புலப்படும் — நல்ல மல்யுத்த வீரன் — எதிரிகளின் காலைப் பிடித்து சுழற்றி மரத்தின் மீது எறியும் வல்லமை படைத்தவன்.
16. *பலராமனின் பெயர்கள்*
பலபத்ரன், ப்ராலம்பக்னன், பலதேவன், அச்யுதக்ரஜன், காமபாலன், ஹலாயுதன், நீலாம்பரன், ரோகிணேயன், தாலங்கன், முசலிஹலி, சங்கர்ஷனன், க்ஷீரபாணி, காளிந்தி பேதனன், காளிந்தி ஹர்ஷணன், ஹல ப்ரித், லாங்கலி, குப்த சரன் (ரகசிய நடமாட்டம்).
இவை அனைத்தும் மேற்கூறிய அவனது சாதனைகளை விளக்கும் வடமொழிச் சொற்கள் ஆகும்.
*வெள்ளைப் பாண்டி* என்று யாதவ குல மக்களிடையே பெயர் உண்டு. இதுவும் பலராமன் பெயராக இருக்கலாம்.
*மல்யுத்தம்* தோன்றியது எங்கே?
தமிழ் மற்போர் சான்றுகள்
*”சங்கத் தமில் நூலகளில் நிறைய மற்போர் சான்று ள் உள.* புற நானூற்றின் பாடல் 80-ல் ஆமூர் மல்லனுக்கும் கிள்ளிக்கும் நடந்த மற்போரை சாத்தந்தையார் வருணிக்கிறார். பரணர் என்னும் பெரும்புலவர் மிக மிக விரிவாக நமக்கு மற்போர் செய்திகளைப் பல பாடல்கள் வழியே தருகிறார்.”
“ஒரே ஒரு எடுத்துக் காட்டை மட்டும் காண்போம். அகநானூறு 386-ல் *பாணனுக்கும் ஆரியப் பொருநனுக்கும் நடந்த சண்டை பற்றிப் பாடுகிறார்.”*
“பரிபாடல் 12-72, சிலப்பதிகாரம் (16-198, 16-73), பெருங்கதை (52—3115) ஆகிய இடங்களில் முறையான — பறை அறிவித்து நிகழ்த்தப்பட்ட — மல்யுத்தப் போட்டிகளை விரிவாகக் காணலாம். இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டு மல்யுத்தச் சான்றுகள்.”
*கண்ணன், பலராமன் செய்த மற்போர்*
“கலியுகம் துவங்கும் முன் (கிமு.3121) வாழ்ந்த கண்ணனும், அவன் அண்ணன் பலராமனும் பல மல்லர்களுடன் மோதி அவர்களை வானில் சுழற்றி எறிந்ததை புராண இதிஹாசங்களில் படிக்கிறோம் கம்ச சானூர மர்த்தனம் என்று கம்சனையும் சானூரனையும் அவர்கள் கொன்றதை இன்று வரை மேடைகளில் கர்நாடக சங்கீத பாகவதர்களும் பஜனைப் பாடகர்களும், சின்னக் குழந்தைகள் சொல்லும் ஸ்லோகங்களிலும் கேட்கிறோம்; பாடுகிறோம்.” ஆயினும் இவைகள் எல்லாம் வரலாறு அல்ல, வெறும் புனைக்கதைகள் என்ற விஷ விதையை வெள்ளைக்காரர்கள் பரப்பிவிட்டனர். *யாதவ குல வீரர்கள் இருவரும் பல மல்லர்களை வென்றனர்;* கொன்றனர்.
*நக்கீரனும்* சங்க காலப் புலவர் பலரும் *காளிதாசனும்* பாடியது போல நாமும் பலராமன் புகழ் பாடுவோம்.
*பலராமருக்கு ஜெய் !!!*
🔱🐅🦅🌞🐁🦚