தேவேந்திர குல வன்னியர் என்ற ராமதாஸ் உங்களுக்கு வேளாளரின் சில கேள்விகள்?

வேளாள சமூகத்தின் துரோகியே கொங்கு வேளாள சமூகத்தில் பிறந்த பாமக மாநில துணை தலைவர் பொங்களுர் மணிகண்டா!

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த மொழி – நமது தமிழ் மொழி

என்ற மூத்தோர் சொல் நெடுங்காலமாக புழகத்தில் இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட தமிழினத்தின் ஆதி கால தொழில் வேளாண்மை என்பதை அனைத்து தரப்பு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையாகும். இவ்வளவு பெருமை மிகு வேளாண் தொழில் செய்து வந்தவர்கள், தங்களுக்குள் பல பட்டங்கள் இருப்பினும், வேளாளர்கள் என்ற அடைமொழியோடு வழி வழியாக வாழ்ந்து வந்த உறவுகளுக்குள் ஒரு கட்டமைப்பை உருவாக்கி, அதன் பண்பாடு, காலாச்சாரத்தை விட்டு கொடுக்காமல் இன்றளவும் அதை கட்டுக் கோப்பாக பாதுகாத்து வருகின்றனர். இப்படிப்பட்ட கட்டமைப்பை சிலர் சாதி என குறித்து வருவதையும் பார்க்க முடிகிறது.
தமிழ் சமூகம் சாதிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்லாண்டுகளாக ஆரியர் படையெடுப்பு, களப்பினர் காலம், வடுகர்கள் படையெடுப்புகள், ஆங்கிலேய ஆட்சி, திராவிட கோட்பாடு என எவ்வகை எதிர்ப்புகளையும் தாங்கி கொண்டு, இன்றுவரை தமிழனின் சாதி கட்டமைப்பை உடைக்க முடியவில்லை என்பதை பார்க்குபோது, அதன் அணி வேர் எவ்வளவு வலுவானதாக உள்ளது என்பது கண்கூடு. ஆதி தமிழனிடம் சாதிய வேறு பாடுகள் இருக்கவில்லை. எல்லா தமிழ் சாதிகளும் சமமாகவே பார்க்கப்பட்டன. அந்தந்த சாதிக்குரிய மதிப்புகளும், மரியாதைகளும் இருந்தே வந்துள்ளது என்பதை தமிழ் இலக்கியங்கள் நிருபிக்கின்றன.

இடைப்பட்ட காலங்களில் சாதி ஏற்றத்தாழ்வு வேற்றுமைகளை உருவாக்கி அதில் குளிர் காய்ந்து வந்தனர் எதிரிகள். காலப்போக்கில் சாதி ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்து, அதில் அரசியலும் புகுந்து கொண்டது. சாதியை வைத்து அரசியல்வாதிகள் குளிர்காயத் தொடங்கினர். காலம் செய்த கோலம், அது இன்றளவும் நடைமுறையில் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டாக சாதியை மையமாக வைத்தே ஓட்டு அரசியல் நடைபெறுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. இதனால் சாதி அதி முக்கியத்துவமடைந்துள்ளது. சாதியத் தலைவர்கள் தங்களது சாதியை உயர்த்திப்பிடித்ததன் விளைவு கலவரபூமியாக தென்மாவட்டங்கள் காட்சியளிக்கின்றன. இதனால், சாதியே வேண்டாம் என அறிவார்ந்தவர்கள் சிலர் முழக்கமிடத் தொடங்கினர். ஆனால், சமூக ஆணி வேராக சாதி இருந்ததால் அவர்களது குரல் எடுபடவில்லை. அதுவே அரசியல்வாதிகளுக்கு சாதியை வைத்து பிழைப்பு நடத்துவது தவிர்க்க முடியாத காரணியாக அமைந்தது. இந்த போக்கை வைத்து, அரசியல்வாதிகள் தங்களது சாதி ஓட்டுகளை தக்க வைக்க பல்வேறு உத்திகளை கையாள தொடங்கினர். தங்களது சாதிப் பெயர்களின் மாற்றமே உயர் இடத்திற்கு வழிகாட்டு என்று பொய்யான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். சரி அவர்களது நம்பிக்கை அப்படியெனில் பெயர் மாற்றம் செய்து கொள்ள அவர்களுக்கு உரிமையுள்ளது. அதை மறுக்க முடியாது. ஆனால், தமிழர்களிடையே ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் பயன்பட்டு வரும் வேறு இனத்தவரின் ஒரு பெயரை களவாடி தங்களுக்கு சூட்டிக் கொள்ள நினைப்பது எவ்வகையில் ஏற்றுக் கொள்ள இயலும்.

இன்றைய சமகாலத்தில், தமிழர்களின் மற்றைய சாதியான தேவேந்திரர் குலத்தார், தங்களது சாதிப்பெயரோடு வேளாளர் என்ற பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கையை வைக்கின்றனர். ஆனால், இவர்களது கோரிக்கையை, தமிழகத்தில் உள்ள இரண்டரைக் கோடி வேளாள சமூகத்தினர் – பெயரருக்கான சொந்தக்காரர்கள், விட்டு தர மறுக்கின்றனர். இது அவர்களது உரிமைக்கான போராட்டமாக கருதுகின்றனர். பொதுவாக இது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். இலகுவாக ஒரு நிறுவனமே தங்களது பெயரை பிறர் பயன்படுத்தினால், அதற்காக நீதிமன்ற படியேறும் காலமிது. காலங்காலமாக தங்களால் பயன்படுத்தி வரும் ஒரு பெயரை எப்படி உடனே விட்டு விட்டு ஒரு சமூகத்தால் அமைதி காக்க முடியும். இப்படிப்பட்ட சூழலில் பெயரை பறிகொடுக்க ஒருவரும் முன்வர மாட்டார்கள். இந்தப் பெயரை கேட்டு அரசியல் செய்ய நினைக்கும் அரசியல் வாதிகள், சுழலைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களது சுயலாபத்திற்காக, தமிழ் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குழைக்கும் நோக்கோடு செயல்படுவார்கள் எனில், அதை முறியடிக்க அரசு வேடிக்கை பார்க்கலாகாது.
ஆனால், வேளாளர் பெயருக்குரியவர்களிடம் கேட்காமலேயே, இங்கிருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் ஓட்டு வேட்டைக்காக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெயர் மாற்றத்திற்கு வழி வகை செய்வோம் என உறுதியளிக்கின்றனர். இந்த அரசியல் வாதிகள் தங்களின் உறுதிமொழிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த போகின்றனர் என்பதைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் பெயரளவில் பேசுவதாகவே தெரிகிறது. அப்படி ஒருவேளை உறுதிமொழி கொடுப்பவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்களேயானால், வேளாளர் பெயருக்குரியவர்களின் எதிர்ப்பை எவ்வகையில் தீர்க்கப் போகின்றனர் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. பெயர் மாற்றம் வருமேயானால், சீர்குழையப்போகும் தமிழக சட்டம் ஒழுங்கு பற்றி சிறிதேனும் சிந்தித்தனரா என்பதும் தெரியவில்லை. தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற எவரும் தயாரில்லை. அதனை பொது மக்களும் விரும்ப மாட்டார்கள். இந்த நிலைப்பாட்டிற்கு தக்க பதிலடியை தமிழகத்தில் வாழும் இரண்டரைக் கோடி வேளாள சமூகத்தினரும், அமைதியை விரும்புவோரும் தேர்தலில் பதிவு சொல்வார்கள் என்பதை இந்த அரசியல் வாதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஐயா இராமதாஸ், தன்னை ஒரு தமிழ் குடியாக காட்டி கொள்ளவே விரும்புகிறார். அவரது கட்சியில் தமிழ் சமூகத்தைச் சார்ந்த பலர் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட போகும் வேளாளர் சமூகத்தைச் சார்ந்த கட்சி நிர்வாகிகளிடம் கலந்து தான் இந்த அறிக்கையை விட்டாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

குறிப்பாக கட்சியின் துணைத்தலைவராக இருந்து வரும் பொங்களுர் மணிகண்டனிடம் இந்த அறிக்கை குறித்து ஏதேனும் கலந்து கொண்ட பின்னரே அறிக்கை வெளியிடப் பட்டதா, அல்லது யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை என தான்தோன்றித்தனமாக அறிக்கை வெளி வந்ததா என்பதை தெளிவு படுத்த வேண்டிய கடமை உள்ளது. அல்லது பொங்களுர் மணிகண்டன் ஏதேனும் பணம் பெற்றுக் கொண்டு வெட்கமே இல்லாமல், தான் பிறந்து வளர்ந்த வேளாள இனத்தின் துரோகத்திற்கு துணை போனாரா என்பதை வேளாள இன மக்களும், பிற தமிழின மக்களும் தெரிந்து கொள்ளப்பட வேண்டும்.

ஐயா கோவை செழியனின் வழி வந்த, பொங்களுர் மணிகண்டன் தன்னுடைய கட்சியின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிர்வினையை இதுவரையாற்றவில்லை என்பதை பார்க்கும் பொழுது ஐயம் வலுக்கத்தான் செய்கிறது. ஐயா கோவை செழியனின் நினைவு தினம் இம்மாதம் 14ம் வருகிறது.

அந்த பெரியவருக்கு உண்மையாக பொங்களுர் மணிகண்டன் இருப்பாரேயானால், இனியும் அமைதி காத்தால், வேளாள சமூகமும், பிற தமிழின மக்களும் அவரை மன்னிக்க மாட்டார்கள் என்பதை நாம் இங்கு எச்சரிக்கிறோம்!

– அக்னி சுப்ரமணியம்

உலக தமிழர் பேரவை

நிறுவன தலைவர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir