துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு!!! எப்படி?

துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு!!! எப்படி?

8

துளுவ வேளாளர் வேறு!!! அகமுடையார் வேறு! எப்படி?

 

 

ஏற்கனவே நாம் பலமுறை வரலாற்று ஆதாரங்களோடு எடுத்து கூறியும், துளுவ வேளாளர்களின்  பெயரிலே  வேளாளர் என்று உள்ளது, பின்னர் எப்படி துளுவ வேளாளர்களை அகமுடையார் என்று மடை மாற்றம் செய்து தவறான வரலாறு திரிபுகளை அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தவர்கள் செய்கிறீர்கள் என்று  பலமுறை கேட்டும் நாலு சங்கத்துக்காரர்கள் 40 வருடத்தில்  பேசியதை மட்டும் ஆதாரமாக கொண்டு ஒட்டுமொத்த துளுவ வேளாளர்களையும், அகமுடையார்களையும் கலப்பு சாதியாக மாற்றும் முயற்சியில் அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தோர் செயல்படுகின்றனர்!!

 

 துளுவ வேளாளர்கள் Purely வேளாளர்கள் தான் என்பதற்கு ஒரு மாபெரும் வரலாற்று ஆதாரத்தோடு உண்மையை எடுத்துக்கூறுவோம் இந்த கட்டுரையில் 

 

அகமுடையார் அரண் அமைப்பை சார்ந்தோர் தங்களது முகநூல் பக்கத்தில் ஒரு இமேஜ் பதிவிடுகின்றனர், அந்த இமேஜ் யாழ்பாண சரித்திரம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது 

 

 

அதில் நரசிங்கதேவன் என்ற துளுவ வேளாண்மண்டல தலைவன் என்ற உள்ளது, அதை எடுத்து போட்டு துளுவ வேளாளர்கள் அகமுடையார் தான் என்று சொல்ல வந்துள்ளனர், அந்த இரண்டு இமேஜீம் மக்கள் பார்வைக்கு கீழே 

 

 

இந்த இமேஜில் என்ன வருகிறது,

 “”காவிரிபூம்பட்டிணத்தை தனது பிறந்த ஊராக உடையவனும், துளுவ வேளாண்மண்டதலைவனும், குவளை மாலை உடையவனும், பெரும் பண்டிதனும், வித்தியாவினோதனும், உலகெங்கும் பரந்த புகழ் படைத்தவனும், கற்றவருக்கு பெரும் நிதி வழங்கும் தியாகியுமாகிய நரசிங்க தேவனை மயிலம்பட்டியில் இருந்தினான் “”

என உள்ளது  

 

இதில் நரசிங்க தேவன் துளுவ வேளாளர் என்கிறார்கள் அகமுடையார் அரண் அமைப்பினர் 

 

இப்பொழுது இந்த மேலே உள்ள வரிகளில் வரும் வார்த்தைகளை கூர்ந்து கவனித்தால் அதில் நரசிங்கதேவன் குவளை மாலை உடையவன் என வரிகள் வருகிறது,

 

துளுவ வேளாளர்கள் Purely வேளாளர்கள் தான் என்பதற்கு இந்த குவளை மாலையை கணக்கில் எடுப்போம், 

 

இந்த குவளை மாலை யாருடையது? என்பதை இங்கே கவனிப்போம்,

 இந்த குவளை மாலை என்பது வேளாளர்கள் உடையது என்பதற்கு கொங்கு வேளாளர்களின் காணிப்பாடல்களே மிகப்பெரிய எடுத்துக்காட்டு 

அதுபோக கொங்கு பொன்னேர் பூட்டுதல் என்ற நிகழ்வின் போது பாடப்படும் பாடலிலும்,

குவளை மாலையை ஏர்கலப்பையில் சூட்டிய பின் பொன்னேர் பூட்டுகின்றனர்,

 

 

சிலப்பதிக்காரத்திற்கு உரையெழுதிய அடியாருக்கு நல்லாரும் கூட குவளை மாலை வேளாளர்களுக்குரியது என்கிறார்!! சிலப்பதிக்காரத்திலும் வேளாளர்கள் பொன்னேர் பூட்டும் நிகழ்வு  பாடலாக வருகிறது,

சிலப்பதிக்காரம், அகநானூறு, ஐங்குறுநூறு, கார்நாற்பது போன்ற தமிழ் இலக்கியங்களிலும் கூட வேளாளர்கள் பொன்னேர் பூட்டும் நிகழ்வு வருகிறது,

 

சோழத்தேச டெல்டா  பகுதியில் உள்ள வேளாளர்களும், தென்மாவட்டங்களில் உள்ள சைவ வேளாளர்களும் பொன்னேர் பூட்டுதலை 

 

“”நல்லேர் பூட்டுதல்”” என்ற பெயரில் சித்திரை ஒன்றாம் தேதி அன்று அந்த ஊரின் வேளாள தலைவன் முதல் ஏர் பூட்டுதலை செய்து துவக்கி வைக்கிறான்!!!

 

 

ஆக குவளை மாலையும், சித்திரமேழியும், பொன்னேர் பூட்டுதலும்  வேளாளர்களுக்கு உரியது என்பது ஆதாரபூர்வமாகவும், கல்வெட்டு மூலமாகவும் நிறுவிக்கப்பட்ட ஒன்று!!!அதற்கான ஆதார Blogspot link கீழே இணைத்துள்ளேன்!!!

 

https://kundrudayan.wordpress.com/blog-feed/

http://www.karikkuruvi.com/2016/03/blog-post_8.html?m=1

எனவே “”யாழ்பாண சரித்திரம் “” என்ற நூலில் வரும் “”துளுவ வேளாண் மண்டல தலைவன், குவளை மாலையை அணிந்தவனான நரசிங்க தேவன்”” என்பான் துளுவ வேளாளன் தான் என்பதையும் துளுவ வேளாளர்கள் Purely வேளாளர்கள் என்பதும் குவளை மாலை என்பதை வைத்தே ஆதாரத்தோடு நிறுவிக்கப்பட்டது!!!

 

 

அகமுடையார்கள் எங்கே பொன்னேர், நல்லேர் பூட்டியுள்ளார்கள்?  அகமுடையார்களுக்கு ஏது குவளை மாலை?  அகமுடையார்களுக்கு விவசாயம் என்ற வேளாண்மைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதையும் யாராலும் மறுக்க முடியாத ஒன்று!! நாங்கள் அகமுடையார்களை தவறாக பேசவில்லை, ஆனால் துளுவ வேளாளர்களையும், அகமுடையார்களையும் ஒன்று என பேசி வரும் , தமிழர் சாதிகளில் கலப்புகளை ஏற்படுத்த , யாரிடமோ பணம் பெற்று கொண்டு போலி வரலாறு பேசி திரியும்,  அகமுடையார்கள் கண்டிக்க தவறிய அகமுடையார் அரண் அமைப்பை தான் நாங்கள்  கண்டிக்கிறோம்!! 

துளுவ வேளாளர்கள் Purely வேளாளர்கள் தான்!! அகமுடையார்களுக்கும் துளுவ வேளாளர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது!!!

 

மேலும் தொடர்புக்கு 

 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

 

8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *