தமிழர்கள் எடப்பாடி, பன்னீர்செல்வம், ராமதாஸ் கூட்டணிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு

தமிழர் தலைமையில் செயல்படும் கட்சி தலைமைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள்

அன்புடையீர் வணக்கம்

தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியலுக்கான தேவை நாளுக்கு நாள் எழுந்து வருகிறது. தமிழ் இளையோரில் பெரும்பாலோர் தமிழ் இன நலனுக்கான அரசியலை நோக்கி நகர்ந்து வருகின்றனர். தமிழ் தேசிய அரசியலின் ஆற்றலை உணர்ந்த வை கோ தமிழ் தேசியர்களை எதிரியாக நினைத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கருத்து வெளியிட்டார்.

அத்தோடு அவரின் வாழ் நாள் பகை கட்சியான திமுக வுடன் நெருங்க துவங்கினார். இதனால் ஏற்கனவே திமுக மீது கோவம் கொண்டு தெலுங்கர் கருணாநிதி ,துரோகி கருணாநிதி என்று பேசி வந்த இளையோர் வை கோவின் திமுக பாசத்தை சந்தேகிக்க துவங்கினர்


இதற்கிடையே தமிழ் தேசியவாதிகளுக்கும் மதிமுக மற்றும் சில தெலுங்கு அமைப்பை சார்ந்தவர்களுக்கும் இணையத்தில் தீவீர கருத்து மோதல் நடக்க துவங்கிற்று .நாம் தமிழர் கட்சியினரும் வை கோ கட்சியினரும் மோதிக் கொண்ட நிலையும் உருவானது
தெலுங்கருக்கு எதிராக தமிழ் இளையோர் அணி திரள்வதை கண்ட தெலுங்கர்கள் நாங்கள் ஆண்ட பரம்பரை என்பதை பறைசாற்ற திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா வீர பாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா என விழா எடுக்க துவங்கி அந்த விழாக்களில் தாங்களே தமிழகத்தை ஆளும் தகுதி கொண்டவர்கள் என வெளிப்படையாக பேச துங்கினார்.

தெலுங்கர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி ஈ வெ ரா அண்ணாதுரை, கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நால்வரின் படங்களை வரிசையாக போட்டு “தமிழகத்தில் தமிழரை வாழ வைப்போம்” “தெலுங்கரை ஆள வைப்போம்” என தங்கள் முகநூல் முகப்பு அட்டை படத்தில் செய்தி வெளியிட்டது


ஆக திராவிடம் என்பதே தெலுங்கர் ஆதிக்கம் தான் , தெலுங்கர் ஆதிக்கத்தின் தலைமை அதிகார பீடம் திமுக கட்சியே . அந்த கட்சியை உயிரை கொடுத்தாவது ஆட்சிக்கு கொண்டு வந்து விட வேண்டுமென தமிழக தெலுங்கர் தலைமையிலான மதிமுக கட்சி மற்றும் அமைப்பு தலைவர்களான கொளத்தூர் மணி,
கோவை ராமகிருஷ்ணன் வீரமணி போன்ற அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கின்றனர் இந்த முறை திமுக வரவில்லைஎன்றால் இனி நாம் அதிகாரமற்றவர்களாக வர்களாக ஆகிவிடுப்வோம் என மிக தெளிவாக சிந்தித்து செயல்படுகின்றனர்

திராவிடம் என்ற பதுங்கு குழிக்குள் தெலுங்கர்கள் இருந்துகொண்டு இந்தியாவில் எங்கும் நடைமுறையில் இல்லாத கருத்துகளை திணித்து தங்கள் மேலாதிக்கத்தை இங்கே நிலை நாட்டி வருகின்றனர் .மேலும் விபரம் தெரிந்த ஒவ்வொரு தெலுங்கரும் நாம் திமுக வை வர வைக்கவே பாடு பட வேண்டும் என எண்ணியுள்ளனர்.

இப்படியான சூழலில் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமையை பாதுகாக்க தமிழருக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் . ஆகவே வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி மறைமுகமாகவோ நேரடியாகவோ அல்லது தெலுங்கரின் நலனுக்கு உதவும் வகையிலோ செயல்படுவது தமிழர் நலனை பாதிக்கும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

எனவே தமிழின நலன் கருதி கூட்டணி வைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் தெலுங்கர்களின் அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் திமுக என்ற தெலுங்கர் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி கொள்ள கூடாது என மிக்க பணிவன்புடன் கேட்டுக் கொள்வதோடு

இந்த தேர்தல் தமிழகத்தில் முதன்மையாக “யார் வர வேண்டும்” என்ற தேர்தலாக இருக்க கூடாது ” யார் வரக் கூடாது” என்ற நோக்கத்தை முதன்மையாக கொண்டு நடந்த தேர்தலாக இருக்க வேண்டும் தெலுங்கர் ஆதிக்க திமுக வரக் கூடாது என்ற முடிவோடு செயல்படும் தேர்தலாக இருக்க நீங்களும் புரிந்து செயல்பட என வேண்டுகிறோம்
கந்தசாமி அதியமான்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
23.2.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir