வேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :

Like
Like Love Haha Wow Sad Angry
4

வேளாளரிலே சைவ வேளாளர் குலத்திலே  உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :

 

வேளாளர் குலத்தில் பிறந்த சிவனோடு ஐக்கியமாகிய அப்பர் என்ற திருநாவுகரசர் பெருமானின் குருபூஜை இன்று 

பிறந்த ஊர் : சோழநாட்டின் கடலூர் அருகே திருவாமூர் பிறப்பு : வேளாளரில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்

 

கோத்திரம் : குறுக்கைய்யர் கோத்திரம்

 

இயற்பெயர் : மருள்நீக்கியார் 

 

தந்தை, தாயார் : புகழனார், மாதினியார் 

 

அக்கா : திலகவதியார் 

 

அத்தான் (மச்சான் ) : பல்லவனின் படைதளபதி கலிப்பகையார்

 

சிவனோடு ஐக்கியமானது : சித்திரை மாதம் சதய நட்சத்திரம்

 

திருநாவுக்கரசு நாயனார்

 

அப்பர் என்றழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனார் கிபி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் சைவ சமய வழிபாட்டு முறையை வளர்த்த 

சிவனடியார்களில் 

ஒருவரும் 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பத்தி செலுத்துதலில் தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் (தாச மார்க்கம்) என்றும் புகழ்கின்றனர்.இவரை திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால் *”அப்பர்”* என்றும் தமது நா வன்மையால் இறைவனை புகழ்ந்து பாடி, அவருக்காக இறைவன் பல அற்புதங்களை நிகழ்த்தியதால் *”நாவுக்கரசர்”* என்றும்  இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் இவரை *”தாண்டகவேந்தர்”* என்றும் அழைக்கின்றனர்.

 

 

இளமைக் காலமும் வாழ்வும்:

 

திருநாவுக்கரசர் சோழ நாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள 

திருவாமூர் எனும் ஊரில் சைவ சமயத்தையும், தமிழ் மொழியையும் தமது மூச்சாக போற்றி கொண்டிருக்கும் சைவ வேளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினியார் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தவர். இவருக்கு திலகவதியார் என்று மூத்த சகோதரி ஒருவர் உண்டு. 

 

இவருடைய இயற்பெயர் மருள்நீக்கியார் ஆகும். 

இளமையில் சைவ சமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.

தருமசேனரின் தமக்கையார் திலகவதியார் சிறந்த சிவபக்தையாக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார்.

அதனால் தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் “கூற்றாயினவாறு விலக்ககலீர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.

இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார்.

 

பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், “உழவாரத் தொண்டர்” என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். 

 

இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை (தாச மார்க்கம்) குறிப்பிடத் தக்கதாகும்.

சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களை திருநாவுக்கர் இறைவன் அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டும், இறைவன் அருளால் மீண்டதை “கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே” எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். 

 

இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தை தழுவினான்.

தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில்சித்திரைச் சதயத்தில் இறைவனடி கலந்தார்.

திருநாவுக்கரசருக்காக இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள்:

 

சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்.

 

சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்.

 

சமணர்கள் விடுத்த கொலை யானைவலம் வந்து வணங்கிச் சென்றது.

 

சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.சிவபெருமானிடத்தே 

படிக்காசு பெற்றது.

 

வேதாரணியத்திலே 

திருக்கதவு திறக்கப் பாடியது.

 

விஷத்தினால் இறந்த அப்பூதி அடிகளின் மூத்த புதல்வன் மூத்த திருநாவுக்கரசை உயிர்ப்பித்தது.

 

காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேமகறியது.

குரு பூஜை:

 

திருநாவுக்கரசு நாயனாரின் குருபூஜையானது சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது,

 

திருநாவுக்கரசர் புராணம் யாழ்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்திய ரூபமாக செய்தது!!! 

 

 

—— இவண் சைவன் 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

Like
Like Love Haha Wow Sad Angry
4

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 Kamagra jel php bypass shell shell indir php shell indir tempobetshort hairstylestuzla escortsex hikayeleri evden eve nakliyat jigolo caddecilingir elektrikciii jigolo ajansi evden eve nakliyatfullhdfilmizlesentempobettempobet