வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்

உறவுகளுக்கு வணக்கம்
நான் உங்கள் நாகவீரபாண்டியன்

மிக முக்கிய செய்தி

வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்களுக்கு மிகப்பெரிய கடைசி வாய்ப்பு ::

என்னவென்றால் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் 18/09/2018
அன்று தான் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர் (கலெக்டர்), அனைத்து தாலுகா வட்டாசியர் (தாசில்தார்) அவர்களுக்கு சுற்றறிகை அனுப்பிகிறார்,

அதன்படி தேவேந்திர குல வேளாளர் பெயருக்கு ஆதரவு /எதிர்ப்பு இருந்தால் அதனை கொண்டு விரிவான அறிக்கை அனுப்பும்படி கேட்டு கொண்டுள்ளார்,
அதனால் தான் விளாத்திகுளம் தாசில்தாரிடம் வாதிரியான் சாதியினர் நாங்கள் தேவேந்திர குல வேளாளர் பெயருக்கு கீழ் இணைய விரும்பவில்லை என்று மனு கொடுத்துள்ளனர் போன வாரம் தான்

எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சிதலைவர்களிடமும், தாசில்தார்களிடமும் வெள்ளாள /வேளாள கவுண்டர், பிள்ளை, செட்டியார், முதலியார் சங்கங்கள், அமைப்புகள், அதன் தலைவர்கள், வெள்ளாள ஊர் மக்கள், தனிப்பட்ட வெள்ளாளர் சார்பாக தேவேந்திர குல வேளாளர் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளியுங்கள் அடுத்த வாரமே!!! வாராவாரம் திங்கள்கிழமை ஒவ்வொரு மாவட்ட ஆட்சி தலைவரிடமும் Monday petition அளிக்கலாம், வரும் வாரம் திங்கள்கிழமை அனைத்து மாவட்ட கலெக்டர் ஆபிஸில் மனு அளியுங்கள், விரைவாக, கடைசி சந்தர்ப்பம், விட்டுவிட வேண்டாம்!!

அந்த தமிழக அரசு கூடுதல் செயலாளர் சுற்றறிக்கையை கீழே இமேஜ் காணவும்

பெரிய அளவில் வெள்ளாளர்களை அழைத்து போராட்டம் வேண்டாம், உண்ணாவிரதம் வேண்டாம், வீண் பேச்சுகள் வேண்டாம்!!! எதிர்ப்பு கடித மனுக்கள் மட்டும் அளியுங்கள்!!!! விரைவாக!!!

 

அனுப்புநர்

பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்

பொருள்:- வெள்ளாளர்/ வேளாளர் மரபியல் பிரச்சினைகள் தொடர்பாக
மதிப்புடையீர்!
வணக்கம்,

கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளர், மூப்பன், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், மண்ணாடி, வாதிரியன் போன்ற சமூகங்களை இணைத்து “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கும்படி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மற்றும் இன்னும் சில பள்ளர் அமைப்புகளும் அரசாங்கத்திடம் பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும், போராட்டம் செய்தும் வருகின்றனர். மேலும் தங்கள் சமுதாயம் முன்னேறிய சமுதாயமாக மாற விரும்புவதாகவும், அதனால் பட்டியல் இன பிரிவில் இருந்து தங்கள் சமுதாயத்தை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

பள்ளர்கள் தங்கள் சமுதாயத்தை மேம்படுத்த எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்காக எங்கள் இனத்தின் பெயரான வேளாளர் பெயரை கேட்பதை எங்கள் வெள்ளாள சமுதாயங்களால் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த கோரிக்கையில் எந்த வித நியாயமும் இல்லை. வரலாற்று ரீதியாகவும் எந்த அடிப்படையும் இல்லாத கோரிக்கையாகும்.

பள்ளர்களுக்குண்டான கல்வெட்டு பட்டயங்கள் போன்ற வரலாற்று ஆவணங்கள் எதிலும் அவர்களை வேளாளர் என்று குறிப்பிடப்படவில்லை. அவர்களை பள்ளு, தேவேந்திரன், பண்ணாடி, போன்ற பெயர்களால் தான் குறிப்பிடப்படுகின்றனர்.

ஆனால் வெள்ளாளர்களுக்குண்டான ஆவணங்கள் அனைத்திலும் வெள்ளாளர் / வேளாளர் பெயர்களாலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்தையும் வெள்ளாளர்/வேளாளர் என்ற பெயரிலேயே கல்வெட்டு குறிக்கிறது. (ஆதாரம்: தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுக்கள் )

வெள்ளாளர் / வேளாளர் என்பது எங்கள் இனப்பெயர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாளர்களை குறிக்க பயன்படுத்தப்படும் பெயர்.

மேற்கு தமிழகம் (கொங்கு நாடு)
கொங்கு வெள்ளாளர், பால வெள்ளாளர், நரம்புகட்டி வெள்ளாளர், பவளங்கட்டி வெள்ளாளர்

கிழக்கு தமிழகம்: (சோழ நாடு)
சோழிய வெள்ளாளர், கார்காத்த வெள்ளாளர், வீரக்கொடி வெள்ளாளர், நற்குடி வெள்ளாளர்.

தெற்கு தமிழகம் (பாண்டிய நாடு)
பாண்டிய வெள்ளாளர், சைவ வெள்ளாளர், கார்காத்த வெள்ளாளர், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்.

வடக்கு தமிழகம்: (தொண்டை நாடு)
வெள்ளாள முதலிகள், துளுவ வெள்ளாளர்.

வெள்ளாளர் / வேளாளர் என்பது மேற்கண்ட சமுதாயத்தையங்களை குறிக்கும் ஒரு இனப்பெயர். வேளாளர் என்பது நமக்குண்டான அடிப்படை அடையாளமாகும். நமது முன்னோர்கள் நாடாண்டவர்களாகவும், கொடைவள்ளல்களாகவும், சைவ, வைணவ நெறிகளை வளர்த்த மகான்களாகவும் இருந்துள்ளனர்

தமிழகத்தின் ஆட்சியாளர்களாகவும், நீதி பரிபாலனம் செய்பவர்களாகவும் எங்களின் இனம் இருந்துள்ளது. . சங்க கால கடையேழு வள்ளல்கள் அனைவரும் வெள்ளாளர்களே.

மேலும், தமிழ்நாட்டின் மிகப்பெரும் சைவ ஆதீனங்களான மதுரை ஆதீனம், திருவாடுதுரை ஆதீனம், செங்கோல் அதீனம், தருமபுரம் ஆதீனங்களில் வெள்ளாளர்கள் மட்டுமே மடாதிபதியாக வர முடியும். ஆன்மீகம், அரசாட்சி என்று நமது நீண்ட நெடிய உயரிய வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட ஒரு இனத்தின் பெயர்தான் வெள்ளாளர் / வேளாளர் என்ற பெயர். அது நமது இனத்திற்கு மட்டுமே உரிமையுள்ள பெயர். எல்லாரும் பயன்படுத்தக்கூடிய பெயர் அல்ல.
இன்று வேளாளர் என்றால் விவசாயம் செய்பவர்கள் என்று பொய்யான ஒரு பிம்பம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் பள்ளர்கள் தாங்களும் நெல்விவசாயம் செய்வதாக கூறி “தேவேந்திர குல வேளாளர்” என்று கடந்த நூறு வருடங்களாக கேட்க ஆரம்பித்துள்ளனர். இந்த பிம்பத்தை உடைத்தெறிந்து, வெள்ளாளர் / வேளாளர் என்பது எங்கள் இனத்திற்கு மட்டுமே உண்டான ஒரு இனப்பெயர் என்பதை நிலை நிறுத்த வேண்டும்.
தற்போதைய நிலவரம்:

கடந்த நான்கைந்து வருடங்களாக பள்ளர்கள் தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சிகளிடமும், அரசாங்கத்திடமும் வைத்திருக்கிறார்கள்.
இதுவரை முறையாக பதிவு செய்யப்பட்ட எந்த வெள்ளாள/ வேளாளர் சங்கங்களையும் (எங்கள் சங்கம் உட்பட) அணுகி அவர்கள் கருத்து கேட்கவில்லை. எங்களின் வெள்ளாள/வேளாளர் சங்கங்களும் இவர்களின் கோரிக்கைக்கு எந்த எதிர்ப்பையும் இதுவரை தெரிவிக்காததால் அவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கவே வாய்ப்புகள் அதிகம். வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, இது தொடர்பான முடிவினை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகிறது.

பள்ளர்கள் பட்டியல் வகுப்பை விட்டு வெளியே வருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு வைத்த கோரிக்கையான தேவேந்திரகுலத்தார் என்ற பெயரை கேட்பதிலும் நமக்கு ஆட்சேபனை இல்லை. தேவேந்திர குல வேளாளர் என்று வேளாளர் பெயரை அரசாணையாக
வழங்கினால் தமிழகத்தில் தமிழ்சாதிகளுக்கிடையே சாதிய மோதல் உறுவாகிவிடும் என்கின்ற அச்சம் எங்களுக்குள் இருக்கிறது ஆகவே தாங்களின் மேலான கவனத்தில் அவர்கள் கேட்கும் தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணை பரிசீலனை செய்து நிறுத்தி வைக்க வேண்டுமென
பனிவுடன் கேட்டுகொள்கிறோம்
நன்றி

நாள்:

கிழே இருப்பது pdf file அதை downlaod செய்து அணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பவும்

காட்டமான எதிப்பு pdf file download செய்ய clik

கிழே இருப்பது word file அதை downlaod செய்து அணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பவும்

காட்டமான எதிப்பு word file அதை downlaod செய்து உங்கள் பெயர் ஊர் போட்டு அனுப்பவும்
2 Comments

  1. S.Balaraman

    என்றுமVocஆதரவு

    Reply
  2. Muthu

    அருமை

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir