இந்திய மொழியான சமஸ்கிருதம் கற்போம்

தமிழகத்தில் சம்ஸ்கிருத வெறுப்பை தர்க்க அறிவே இல்லாமல் பரப்புகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.அதில் தலையாய பணியை ‘திராவிட செம்மல்’ சு.வெங்கடேசன் எம்.பி செய்து வருகிறார்.

ஆனால் காம்ரெட்டுகளின் உதாரண பூமியான கேரளாவில் வேறு பேசுகிறார்கள்.ஸ்ரீஆதிசங்கரர் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் பிணராயி கலந்து கொண்டு அவராற்றிய உரையை கவனியுங்கள்..👇

————————–

|| சம்ஸ்கிருதம் நமது நாட்டின் புராதன அறிவுஜீவிதப் பாரம்பரியம்,அதை ‘இது பிராமண மொழி’என்று எதிர்ப்பதோ? ஒதுக்குவதோ சரியல்ல.

சம்ஸ்கிருதம் பிராமண மொழி என்ற கருத்தே தவறானது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.ராமயாணத்தை வால்மீகியும்,மகாபாரதத்தை வேதவியாசரும் சம்ஸ்கிருதத்தில்தான் எழுதினார்கள்.எனவே இவர்கள் இருவரும் பிராமணர்களா? இல்லையே.

சம்ஸ்கிருதம் பிராமண மொழி என்றால் பிராமணர் அல்லாத வேத வியாசரும்,வால்மீகியும் இந்த இருபெரும் காவியங்களை எழுதியிருக்க முடியுமா?முடியாதல்லவா!

சம்ஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை அறிந்து வெளிநாட்டில் உள்ள அறிஞர்கள் விரிவான ஆய்வுகளை நடத்தி,சம்ஸ்கிருத பொக்கிஷங்களில் இடம் பெற்றுள்ளவற்றை எல்லாம்,ஏதோ தங்களது சொந்த கண்டுபிடிப்புகள் போல வெளியிட்டு வருகிறார்கள்.

ஆனால் நமது நாட்டிலோ,சம்ஸ்கிருதம் பிராமண மொழி என்று எதிர்த்து ஒதுக்கி வருகிறோம்.இந்த தவறால்தான் சம்ஸ்கிருதத்தின் சொந்த பூமியான இந்தியாவிலேயே அதில் ஆழ்ந்த புலமை கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இது மிகவும் வேதனையான விஷயம்.

முற்போக்குவாதிகள் சம்ஸ்கிருதத்தை பிராமண மொழி என்று தவறாக கருதி அதிலிருந்து விலகி நிற்க வேண்டாம்.அது நமது இந்திய கலாச்சாரத்தின் மொழி அவற்றில் உள்ள பொக்கிஷங்கள் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி.இவற்றை இந்தியர் அனைவருக்கும் சென்றடைய வைக்க வேண்டும்.இந்திய மொழி அனைத்திலும் அந்த நூல்களை மொழி பெயர்க்க வேண்டும்..||

————————–

மேலே உள்ளவை பிணராயி விஜயன் பேசியது.ஆனால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மிஷனரி திராவிடவாதிகளாக போய்விட்டார்கள் என்பதாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது.சு.வெங்கடேசன் தனது தாய்மொழியான தெலுங்கு மொழியை  வளர்க்க பாடுபட வேண்டும்.அதை விடுத்து தமிழின் போர்வையில் ஒளிந்து கொண்டு சம்ஸ்கிருத வெறுப்பை செய்யக்கூடாது..

எழுத்தாளர் : சைவன் ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *