இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதின் அவசியம் என்ன? தர்ப்பணம் கொடுக்கவில்லையென்றால் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் என்ன?

👆🏽🌏🌝🌞🌚🙏🏼 *முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணத்தின் அவசியம்*

ஆத்மா *64 உறுப்புகள்* கொண்ட ஸ்துல சரீரத்தை அடைந்து அறிவு, அனுபவம், இயக்கம் பெற்று *கர்மாவை* கடக்கிறது.

ஆத்மா சரீரத்தை விடுத்து கிளம்பியதும் அதன் பெயர் *பிரேதம்*.

ஆத்மாவானது அடுத்த இலக்கை நோக்கி பயணித்து *மோக்ஷமோ, சொர்க்கமோ, நரகமோ, மீண்டும் பூமியோ* அடைகிறது கர்மத்திற்கு ஏற்ப.

இந்த ஆத்மாவின் அடுத்த இலக்கை நோக்கிய பிரயாணம் செவ்வென நடக்க *பரமாத்மாவால் நியமிக்கப்பட்ட தேவர்களே பித்ருக்கள்*.

இவர்கள் வேறு யாரும் அல்லர்,
*நம் குல முன்னோர்கள்*.

நம் மூதாதையர்களில்,
யார் ஒருவன் பூலோகத்தில் வாழ்ந்த போது *அனைத்து தர்மங்களையும் கடைப்பிடித்து தேகத்தை விடுக்கிறானோ*,

அவனுக்கு பித்ரு லோகத்தில் தற்காலிக இடம் *கர்மத்திற்கு ஏற்ப*.

இக்காலத்தில் *அவனது குலத்தை காப்பதே அவனுக்கான பணி*.

ஆத்மா தேகத்தை விடுத்தபின் *சூக்ஷ்ம சரீரமே*,

இந்திரியங்கள் இல்லாததால்

*இன்பத்தையோ*,
*துன்பத்தையோ*

அனுபவிக்க இயலாது.

ஆனால் *பூர்வ ஜென்ம வாசனை உண்டு*.

இந்த வாசனையை கொண்டு தேகத்தை விடுத்த பின்னும் *உற்றார், உறவினர்களையே சுற்றி இருக்கும்*.

இதன் பரிணாம வெளிப்பாடே
*பசி, தாகம்* போன்ற எண்ணங்கள் ஆத்மாவிற்கு ஏற்பட காரணம்.

ஆத்மாவின் இந்த பசி, தாக *எண்ண ஓட்டமே* அதற்கான அடுத்த இலக்கை நோக்கிய *பிரயாணத்தை* தடைப்பட செய்கிறது.

இது ஆத்மாவிற்கு நிற்கதியான *நிலை*,
*போக்கிடமற்று*,
*உடல் இல்லாமல் பசி*,
*தாகத்தை*

தீர்த்து கொள்ள தன் வாரிசுகளை நம்பி, அவர்கள் நம்மை *கரை ஏற்றிவிடுவார்கள்* என்று *காத்துக்கொண்டிருக்கும்*.

இதன் பொருட்டு *அனுஷ்டிக்கப்படுவதே அபர காரியங்கள்*.


கர்த்தா வார்க்கும்

*பிண்டம்*,
*எள்ளு*,
*நீரை கொண்டே*

ஆத்மாவின் எண்ணத்தில்

*சாந்தி நிலவி, சபிண்டிகரணம் முடிவில்* அதன் அடுத்த கட்ட பிரயாணத்தை தொடங்கும்.

*அபர காரியம் தடைப்பட்டால்* ஆத்மாவிற்கு பிரயாணம் இயலாமல் போகக்கூடும்.

அவ்விதமான ஆத்மா *துர்வாசனைகளுடன் கர்த்தா மற்றும் உற்றாரை சுற்றியே இருக்கும்*.

அபர காரியத்தின் முக்கியமான *அங்கம் துக்கம் விசாரிப்பது*.

துக்கம் விசாரிப்பது என்றால் அபர காரியம் நிறைவேற *வசதி வாய்ப்பை (பொருள், பணம், பிராமணர்) விசாரித்து ஏற்படுத்தி கொடுப்பது*.

ஆகையால் தான் *துக்கம் எவ்வளவு சீக்கிரம் விசாரிக்க முடியுமோ*, செய்து விட வேண்டும்.

இந்த அபர சம்ஸ்காரத்தை கண்காணிப்பதே *பித்ருக்களின் கர்மம்*.

இங்கே தான் நாம் தவறிழைத்து, நம் *முன்னோர்கள் தானே என மெத்தனத்துடன் இருந்துவிடுகிறோம்*.

*பித்ருக்களின் பலம்* நம்மைவிட 1000 பங்கு அதிகம்.

அவர்கள் *அனுக்ரஹித்தாலும் 1000 பங்கு, சபித்தாலும் 1000 பங்கு*.

தன் வம்சாவழியான தேகத்தை விடுத்த ஆத்மாவிற்கு *தர்ப்பணம், சிரார்த்தம்* போன்ற அபர காரியம் நடைபெறாமல் பசி, தாக எண்ணத்தோடு திக்கு தெரியாமல் இருந்தால் *அங்கே நிகழும் பித்ருக்களின் சாபம்*.

தேகத்தை விடுத்த ஆத்மா,
*ஜீவித்து இருந்தபொழுது* யாரெல்லாம் *எந்தெந்த விகிதத்தில் உறவு கொண்டிருந்தனரோ* அதற்கேற்ப அமையும் 1000 பங்கு சாபம்.

*பகவன் நின்று கொல்லும்*,

*பித்ரு அன்றே கொள்வான்*.

அபர காரியம் தடைப்பட்ட அந்த நொடியே சாபம் உருபெரும்.

*பித்ருக்களின் 👥சாபம் இருப்பதை எப்படி அறிந்துகொள்ளலாம்*.

திருமண தடை,
வியாதி,

குழந்தையின்மை,
குடும்ப சண்டை,

எல்லாம் இருந்தும் விளங்காமல் இருப்பது,

கரை தேறாத *ஆத்மாவை 🕉️சாந்தி* செய்து அதன் *இலக்கை நோக்கி பயணிக்க உதவும் வரை*,

*வம்ச வழித்தோன்றல்களுக்கு பித்ருக்களின்* சாபம் தொடரும்.

இந்த சம்ஸ்காரம் நடைபெறுவதற்கு உறுதுணையாக *யார் இருந்தாலும்* அப்பொழுதே நிகழும் பித்ருக்களின் 1000 பங்கு *அனுக்ரஹம்* அவர் மற்றும் அவர் வம்சத்திற்கு.

பசி, தாகம் எண்ணம் – 1000 பங்கு சாபம். 🌞🌚🌝🌏🪐🕉️🙏🏼

 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *