கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி Vs ரிலையன்ஸ் என்ன சம்பந்தம்?
>> காட்சி 1: கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஒரு காட்சியை தாங்கள் பார்த்து இருப்பீர்கள். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து வ.உ.சிதம்பரம்பிள்ளை கப்பல் விடும் முயற்சியை முறியடிக்க, பிரிட்டிஷ் கப்பலில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என பிரிட்டிஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிடும். மக்கள் எதையும் யோசிக்காமல் அப்படியே அங்கு செல்ல முனைவார்கள். அப்போது வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் வெள்ளைக்காரனின் வியாபார யுக்தியை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு செய்து தன்னுடைய கப்பலில் பயணம் செய்ய வைப்பார்.
>> காட்சி 2: இந்த யுக்தியை ரிலையன்ஸ் நிறுவனம் 2002 ஆண்டு பயன்படுத்தி, ரூ.500 மதிப்பிலான மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. ஆரம்பத்தில் இலவசம்/சலுகை என்ற பெரும் விலையை கொடுத்து மற்ற போட்டியாளர்களை அழித்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுப்பதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் நோக்கம்.
>> காட்சி 3: 2005 ஆண்டு தினகரன் நாளிதழை சன் நெட்ஒர்க் நிறுவனம் கையகப்படுத்திய உடன் இரண்டு ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்தது. போட்டியாளரை அழிக்கும் அதே தந்திரம்.
>> காட்சி 4: 2006 தமிழக சட்டமன்ற தேர்தலில் தொலைக்காட்சி தருவோம் என்ற மாயையை மக்களிடம் அறிமுகப்படுத்தி திமுக வெற்றி பெறவும் இலவசம் என்பது காரணமாகிறது.
>> காட்சி 5: 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் திரைப்படத்தில் வரும் சத்யன் கதாபாத்திரம், தான் முதல் மதிப்பெண் பெற, மற்ற மாணவர்களுக்கு ஆபாச புத்தகங்களை வழங்கி, மற்றவர்களை அழித்து தான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.
>> காட்சி 6: 2017 ஆம் ஆண்டு, மறுபடியும் ரிலையன்ஸ் JIO இன்டர்நெட் சேவையை இலவசம் என்ற மாயை உருவாக்கி போட்டியாளரை ஒழிக்கும் நோக்கில் பலியானது ஏர்செல்.
>> காட்சி 7: இதே பாணியை பாஜக அரசு செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகளை அழித்து தான் வெற்றி பெற வேண்டும் என்பது. ஒரு கட்சியோடு கொள்கை அடிப்படையில் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் மற்றவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்பது மேல் குறிப்பிட்ட அனைத்திலும் கருவாக உள்ளது.
இலவசம், பணம், தந்திரம் போன்றவற்றை வைத்து மற்றவரை அழித்து தான் வெற்றி பெற வேண்டும் என மேற் கூறிய காட்சிகள் விளக்குகிறது. அன்று கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம்பிள்ளை போல, இன்றைய நிலையில் விழிப்புணர்வு செய்து மக்களை நல்வழி படுத்த யாரும் இல்லையே என்று நினைக்கும் போது மனம் வருந்துகிறது.
சிந்திப்போம். விழிப்புணர்வோடு இருப்போம். நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.