தமிழர்களுக்கு சோபகிருது 5124 வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த *5124 சோபகிருது* வருடம்

*15 மாற்றத்தை*

நம்மிடம் இருந்து தொடங்குவோம்:

1. ஒரு முறையாவது *குல 🛕தெய்வ* கோயிலுக்கு சென்று வருவது.

2. காடு, தோட்டம் இருந்தால் அங்கு *கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம்* இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய காரியங்களை *(பலி 🐏கொடுத்து)* *பூஜை செய்வது* (முன்னோர்கள் வழி).

3. *தென்புலத்தார் கடன்*
(முன்னோர்களுக்கு) *பங்காளிகள் ஒன்று சேர்ந்து*, குளம் அல்லது ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுப்பது, அதை முறையே *திதி கொடுக்கும்✨🌚🌝🌞🌌 அந்தணரை* வைத்து செய்வது அனைவருக்கும் நல்ல பலனை தரும்.

4. தங்களுக்கு பாத்திய பட்ட *மாரியம்மன்🛕🛕 காளியம்மன்* கோயில்களின் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளுதல்.

5. பாத்தியப்பட்ட சிவன்,பெருமாள் கோயில் 🛕அல்லது *அருகாமையில் உள்ள சிவன் கோயிலுக்கு*, தேவையான பொருட்களை ஏதேனும் ஒன்றையாவது கொடுத்து வாருங்கள். *உதாரணம் – பண்ணீர், சந்தனம், பசுஞ்சாணத்தில் இருந்து செய்த விபூதி, குங்குமம் போன்றவை*.

6. பிறந்த நாளை *நட்சத்திரப்படி💫✨* தமிழ் மாதத்தில் கொண்டாடுங்கள். கேக் வெட்டுவதை, அசைவம் தவிர்த்திடுங்கள்.

7. *குல 👑குருவை* அழைத்து *ஆத்மாத்த சிவபூஜை* செய்யுங்கள் *பங்காளிகள் அனைவரும் சேர்ந்து*, அல்லது நாள், கிழமை பார்த்து அவரை நேரில் சந்தித்து *சஞ்சார வரி, மாங்கல்ய வரி* செலுத்தி குருவருளை பெறுங்கள்.

8. உங்களுக்கு பாத்தியப்பட்ட *மலை🏞️ கோயில்* (முருகன்🦚 கோயிலுக்கு) ஒவ்வொரு மாதமும் அல்லது 4 மதத்திற்கு ஒருமுறையாவது, படியில் பயணித்து முருகன் அருளை பெற்றுவாருங்கள்.

9. காடு, தோட்டம் இருந்தால் *ஒரு 🐂🐃நாட்டு மாட்டையாவது* வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளுங்கள்.

10. பனை விதைகளை *குறைந்தது 10🌴 ஆவது* விதையுங்கள்.

11. செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் *தர்மம், அறம் சார்ந்த🙌🏽 🕉️விஷயங்களை* செய்யுங்கள். (நல்ல பொது காரியங்களுக்கு துணை புரியுங்கள்).

12. தினமும் குறைந்தது 4மணி நேரமாவது *சூரிய 🌞ஒளி உடம்பில் படும்படி* வேலையை நிர்ணியங்கள்.

13. *செக்கு🥃 எண்ணெய்வகைகளை* பயன் படுத்துங்கள். *பாரம்பரிய அரிசி, தானிய* வகைகளை உணவில் பயன்படுத்துங்கள்.

14. டீ, காபி குடிப்பதை தவிர்த்து, மாற்றாக *சுக்கு மல்லி டீ☯️ அல்லது சத்துமாவு* குடியுங்கள்.

15. தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் அதைவிட *நிலத்தில் 🏞️முதலீடு செய்வது* நல்லது.

சனியின் 🪐ஆட்சியும்,

குருவும் 🌕ராகுவும்🧬 இணைவும்,

4 கிரகண🌞🌚🌝 நிகழ்வுகளும்

நமக்கு மேலும் மன பக்குவம் அடைய வழிவகை செய்யும்.

ஆகவே பொறுமை, நிதானம், ஆகியவை நமக்கு நல்ல பலன்களை தரும்.

திதியும், பலியும்,
குருவும், பசுவும்

நம்மை வழி நடத்தட்டும்!

வாழ்த்துக்கள்….

🔱🐅🦅🌞🐁🦚

கட்டுரையாளர்  : கொங்கு வேளாளர் திருமுருகாற்றுப்படை 

மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *