தொண்டை மண்டல சைவ வேளாளர் டி.கே.சண்முகசுந்தர முதலியார் குறித்து சிறு கட்டுரை

ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு பெரியவர் குறித்து சில ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசு வழங்கத் தொடங்கிய மறு ஆண்டு 03-12-1966 அன்று குடியரசுத்தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் திருக்கரத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதினைப் பெற்றவர் கடையம் சத்திரம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உயர்திரு டி.கே.சண்முகசுந்தர முதலியார் ஆவார்.

உயர்திரு டி.கே.சண்முகசுந்தர முதலியார் அவர்களை எல்லோரும் டி.கே.எஸ். என்றே அன்புடன் அழைத்தனர்.

குமாரசாமி முதலியார் அவர்களுக்கும் கோதை அண்ணி அவர்களுக்கும் இரண்டாவதும மகனாக 28-03-1907-ல் தென்காசியில் பிறந்தார்.

தென்காசியில் பள்ளிப் படிப்பு முடிந்ததும் நெல்லை வண்ணார்பேட்டையில் வழக்கறிஞராக இருந்த அவரது தாய்மாமா ரசிகமணி டி.கே.சி.அவர்கள் தம்முடன் தங்கி கல்லூரியில் படிக்க வைத்தார்.
நெல்லையில். பி.ஏ.பட்டம் பெற்றபின் சென்னை ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கும் டி.கேசி.அவர்களே வழிகாட்டினார்.
எல்.டி.படிப்பதற்கு மாமா எவ்வளவு உதவினார் என்று மிகவும் நன்றிப்பெருக்கோடு டி.கே.எஸ்.அவர்கள் சொல்லிக் கொண்டே இருந்தார் கடைசி வரையும்.
பி.ஏ.,எல்.டி.என்று ஆனதும் நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரி உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து பல ஆண்டுகள் சிறப்பான பணி ஆற்றினார் டி.கே.எஸ்.அவர்கள்.

03-02-1932 அன்று வி.எஸ்.ரெங்கநாயகி அண்ணிக்கும்
உயர் திரு டி.கே.எஸ்.அவர்களுக்கும் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இல்லறத்தில் இருவரும் இணைந்து உற்றார் உறவினர் மெச்ச குடும்பம் நடத்தி வந்தனர்
அவர்களுக்கு ஆறு மைந்தர்கள் பிறந்து பின்னாளில் நல்ல நிலையில் எல்லோரும் இருப்பதைக் கண்டு பூரிப்படைந்தார்கள்.

உற்றார், உறவினர், செல்வந்தர் என்றில்லாமல் சாதாரண பணியாளர் வீடுகளில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளுக்கும் ரெங்கநாயகி அண்ணியோடுதான் டி.கே.எஸ்.அவர்கள் சென்று மகிழ்விப்பது வழக்கம்.

அதே போன்று வயதில் சிறியவர்களையும் சந்திக்கும் வேளைகளில் அவர்கள் முதலில் வணக்கம் சொல்லட்டுமே என்று நினைக்காது டி.கே.எஸ்.அவர்கள் முந்திக்கொண்டு இருகரம் கூப்பி கும்பிட்டு விடுவார்.அவர் கடைபிடித்த மிக உயர்ந்த பண்பாடு இது என்பதில் என்ன சந்தேகம்?

அதிக ஆண்டுகள் ம.தி.தா.கல்லூரி உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றிய பிறகு கடையம் சத்திரம் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணிக்கு தக்க ஆசிரியர் ஒருவரை நியமிக்க எண்ணுகிறார்கள்கு
என்னும் தகவல் டி.கே.எஸ்.அவர்களுக்கு தெரியவந்தது.

தமக்கு என்றும் எப்பொழுதும் வழிகாட்டியாயும் தோன்றாத் துணையாகும் ஆலோசகராகவும் இருந்து வரும் தாய்மாமா ரசிகமணி டி.கே.சி.அவர்களை இப்பொழுதும் அணுகி தம் எண்ணத்தை பகிர்ந்து கொண்டார்.

டி.கே.சி.அவர்களும்”நீ தலைமை ஆசிரியர் ஆவதற்கு உரிய தருணம் வந்துவிட்டது ” என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தார்.

கடையம் சத்திரம் உயர்நிலைப் பள்ளி நிர்வாக குழுவின் தலைவர் ஸஸ்ரீ மாதவய்யர் அவர்கள் தம் ஆத்ம நண்பர் டி.கே சி.யின் மருகர் தான் டி.கே.எஸ்.என்று தெரிந்ததுமை மிகவும் சந்தோஷமாக டி.கே.எஸ்.அவர்களை தலைமை ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்துவிட்டார்.
ஆரம்ப நிலையில் இருந்த சத்திரம் உயர்நிலைப் பள்ளி யை வெகு விரைவில் மிகவும் சிறந்த நிலைக்கு டி.கே.எஸ் உயர்த்தி நற்பெயர் பெற்றார்.
கரஸ்பாண்டெண்ட் ஸ்ரீ மாதவய்யர் நொடிக்கொருதரம் எங்கள் ஹெட்மாஸ்டர் என்று பெருமை படம் பேசுவதை ஊரெல்லாம் கேட்கும்.

டி.கே.எஸ்.அவர்களுக்கு பள்ளி க்கூடத்தில் மட்டுமல்ல ஊர் முழுவதும் அன்பும் மரியாதையும் உண்டு.

குடியரசுத் தலைவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்று கடையம் திரும்பிய தலைமை ஆசிரியர் டி.கே.எஸ் அவர்களுக்கு பூர்ணகும்பம் கொடுத்து ஊர் எல்லையில் மக்கள் கூட்டம் வரவேற்று மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து சென்று அவர்கள் இல்லத்தில் கொண்டு சேர்தார்கள். ஒரு திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும் அந்த நிகழ்ச்சியை

கடையம் சத்திரம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து பணிநிறைவு பெற்றதும் டி.கே.எஸ்.அவர்களும் ரெங்கநாயகி அண்ணி அவர்களும் தென்காசி சம்பாத் தெருவில்‌ உள்ள பூர்விக வீட்டில் வந்து வசித்து வந்தார்கள்.
கடையம் சத்திரம் உயர்நிலைப் பள்ளி நிர்வாகம் ஊர் பொது மக்கள் யாவரும் இணைந்து பள்ளி வளாகத்தில் டி.கே.எஸ்.அவர்கள் நினைவில் ஒரு அரங்கம் அழகாக அமைத்து அன்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மரியாதை செய்து விட்டனர்.
உயர் திரு டி
கே எஸ் அவர்கள்
24-06-1998ஆம் ஆண்டு அமரத்துவம் அடைந்தார்.

இந்த குறிப்பை பதிவு உயர் திரு டி கே எஸ் அவர்களின் தங்கை மகன் தென்காசி தீப.நடராஜன் என்ற தீப
சிதம்பரநாதன்.
05-09-2019/ஆசிரியர் தினம்

 

மேலும் தொடர்புக்கு : சைவச்செல்வன். ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *