மூவேந்தர்களுக்கு வாரிசு உருவாக்க பெண் கொடுக்கும் உயர்குடி வேளாளர்கள் என்ற வேளிர்கள்

இருங்கோவேள், அழுந்தூர் வேள், நாங்கூர் வேள் ஆகியோர் உழுவித்துண்ணும் வேளாளரே – 14 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவராகிய மதுரை பரத்வாஜ நச்சினார்க்கினியர் உரை…
_ _ _

பிற்கால பாண்டிய வேந்தர்களின் இறுதிக்காலத்தில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் (1275 – 1325) பிற ஆட்சியாளர்கள் தலைதூக்கிய காலத்திலும் வரலாற்றை தெளிவாக பதிவுசெய்துள்ளார், குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக…

நச்சினார்க்கினியர் தனது உரையின் இறுதியில் தானே “பாரத்துவாசி நச்சினார்க்கினியர்” என்று குறிப்பிடுழதாலும், இவரின் உரைக்கான பாயிரத்தில், “மதுரை நச்சினார்க்கினியன்
மாமறையோன்” என்று கூறுவதாலும், “மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த வாசான்” என்றும் “வேதபோதன்” என்றும் பழம்பாடல்களில் சுட்டப்படுவதாலும் இவர் மதுரையை சேர்ந்த பரத்வாஜ கோத்திர பிராமணர் என தெளிவாக அறிய முடிகிறது… இவரை புலவர்கள் தலைமீது வைத்து கொண்டாடியதை “உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்ற பாடலில் வரும் புகழுரையால் அறியலாம்…

இவர் தமிழிலக்கணமாந் தொல்காப்பியம் அகத்திணையியல் 32 ஆம் சூத்திரமான “மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப” என்ற சூத்திரத்திற்கான உரையில் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நூலில் இருந்து) , பிடவூர் இருங்கோவேள், கரிகாலன் சோழனின் தாயின் தந்தையான அழுந்தூர் வேள் திதியன், கரிகாலச்சோழன் சம்பந்தம் செய்து பெண்ணெடுத்த நாங்கூர் வேள் ஆகிய வேளிர்களும், நாவூர், ஆலாஞ்சேரி, பெருஞ்சிக்கல், வல்லம் ஆகிய ஊர்களையாண்ட வேளிர்களும் உழுவித்துண்ணும் வேளாளர்களே எனவும், அவர்கள் மண்டில மாக்களும் (மண்டல முதலி / ஒரு தேசத்து அரசன்) , தண்டத்தலைவருமாய் (போர் தளபதி) ஆகியோருயாய் ஆகி மன்னர் (பேரரசன்) பக்கம் நிற்பார்கள் என்றும் தெளிவாக கூறுகின்றார்… மேலும் குறுமுடிக் குடியில் பிறந்தோரும் வேந்தர்களுக்கு மகட்கொடைக்கு (கன்யா தானம் / திருமணம்) உரிய வேளாளர் ஆவார்கள் என்றும் தெளிவாக உரைக்கிறார்…

இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் சங்க கால சேர , கொங்க தேச வேளிர்கள் அல்லாமல் சோழ தேச வேளிர்களும் வேளாளர்களே என தெளிவாக வரலாற்றை பிசகின்றி பதிவு செய்துள்ளார் என்பதாம்‌.‌..

மேலும் நச்சினார்க்கினியர் இந்த மன்னர் பாங்கின் பின்னோர் ஆன வேளாளர்களுக்கு சங்க கால இலக்கிய சான்று கொடுக்கிறார், புறநானூறு 35 இல் வரும் “பகடு புறந்தருநர்” என்பதும், பதிற்றுப்பத்து 13 இல் வரும்”குடி புறந்தகுநர்” என்பதும் உழுவித்துண்ணும் வேளாளரை குறித்ததே என்றும் விளக்குகிறார் நச்சினார்க்கினியர்… புலியூர் கேசிகன் தனது பதிற்றுப்பத்து தெளிவுரை நூலில் இவர்களை “வரிசையாள குடிகளை காக்கும் காணியாளர்” என பதிவு செய்துள்ளார்…

மேலும் “ஒளியர்” என்பார் “பிற மண்டலத்தில் அரசராதற்குறிய வேளாளர்” என்று சங்க இலக்கியமான பட்டினப்பாலைக்கு உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர்… சங்க காலத்தில் கரிகாலன் காலம் வரை செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த 12 நாடுகளில் ஒன்றான ஒளிநாட்டில் அரசோச்சிய ஒளியர்களும் கரிகாலனால் வீழ்ந்து உழுவித்துண்ணும் வேளாளர் ஆகியுள்ளனர் என அறிய முடிகிறது… அதனால்தான் சோழன் பிற மண்டலங்களில் அவர்களை அரசன் ஆக்குகிறானே ஒழிய அவர்கள் நாட்டிலேயே அவர்களை அரசராக விடுவதில்லை, எங்கே மீண்டும் சுயாட்சி செய்துவிடுவார்களோ எனக்கருதி… வேள் , ஒளி, ரஜோ என இவை ஒரே பொருள் கொண்ட சொற்களே என பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்…

கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் : 

கொங்கு வேளாளர் 

ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர் 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம்

சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 

9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *