யாத்திசை என்ற படம் சொல்லும் தமிழர் வரலாறு என்ன?

*யாத்திசை* படமும் தமிழர் வரலாறும் :

யாத்திசை படத்திற்கு போயிருந்தேன், படத்தின் ரணதீர பாண்டியன் சேர,சோழ,ஆறு வேளிர்கள்,கொங்கர்கள் பெரும் படையை வெற்றி கொண்டு பாண்டிய பேரரசை வலிமை அடைய செய்தான் , பாண்டியனின் படைதளபதியாக பராந்த பெரும் பள்ளி மூவேந்த வேளாண் என்ற வேளிர் அரசன் இருந்தான் என படம் கதை சொல்லியாக ஆரம்பிக்கிறது!

பாலை நில மக்களான எயினர் மற்றும் மறவர் சாதியினரில் எயினர் குல தலைவன் சோழதேசத்தில் உள்ள பாண்டிய படைகளை அகற்றி சோழனுக்கு சோழ தேசத்தை மீட்டு தருவதாகவும் அதற்கு பிரதிபலனாக சோழரின் புலிக்கொடியை எயினர்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி வேண்டும் மேலும் சோழர்கள் எயினர்களை ஒரு அரசக்குடியாக அங்கிகரிக்க வேண்டும் எனவும் சோழனின் படைதளபதியிடம் கோரிக்கை வைக்கிறான் எயினர் குல தலைவன் கொதி!

சோழத்தேசத்திற்குள் மக்களோடு மக்களாக கலக்கிறது எயினர் சாதி!

பிராமணர் வடிவில் உளவு பார்க்கிறான் எயனர் குல தலைவன் கொதி, அப்பொழுது சோழதேச பிராமணனுக்கும் கொதிக்கு ஒரு சின்ன உரையாடல் :

பிராமணன் : சேர தேச அந்தணருக்கு உடம்பில் வெட்டு காயங்கள் எப்படி வந்தது, அந்தணனா உங்களுக்கு உடல் எப்படி வலுவாக உள்ளது!

கொதி : நாம் பரசுராமர் வழிவந்த சேர தேச அந்தணர்!

பரசுராமர் Note this point.!

படத்தில் தேவரடியாள் பெண்களை தேவதாசிகளாக காண்பித்துள்ளனர்!

சேரனை யவண கப்பலில் நாடு கடத்துகிறான் பாண்டியன், பாண்டியனுக்கு ஆதரவாக யவண படைகள் உள்ளது, யவணம் என்பது இன்றைய ஐரோப்பாவினர்!

சோழ தேச மக்களோட கலந்த எயினர் சாதியினர் சோழ தேசத்தில் உள்ள பாண்டிய கோட்டையை கைப்பற்றுகின்றனர், ரணதீர பாண்டியன் உயிர் தப்பிகிறான்!

பராந்தக பெரும் பள்ளி மூவேந்த வேளாண் என்ற வேளிர் குடியில் திருமணம் செய்கிறான் ரணதீர பாண்டியன்!

கடைசியில் ரணதீர பாண்டியன் வென்றானா? அல்லது எயினர்கள் வென்றர்களா? என்பது தான் மீதி கதை


வரலாற்றுக்கு வருவோம் :

எயினர்கள்,மறவர்கள், வேட்டுவர்கள் பாலை நிலத்திற்கு உரியவர்கள், வேட்டையாடுவது, வழிப்பறி செய்வது,ஆநிறை கவர்தல் இது தான் தொழில்!

படத்தில் வரும் பாண்டியனுக்கு ஆதரவான பெரும்பள்ளி மூவேந்த வேளாண் என்ற வேளிர் வெள்ளாளர்கள்! திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த இவர்களை பற்றி கல்வெட்டு கிடைக்கிறது!

சேர,சோழனுக்கு ஆதரவாக இருந்த ஆறு வேளிர்கள் வெள்ளாளர்கள்!

உண்மையில் ரணதீர பாண்டியன் ஆய்வேளிருடனான போரில் ஆய்வேளிரை வென்றுயிருப்பான், யார் இந்த ஆய்வேளிர் என்ற பார்த்தால் கேரளா கம்யூனிஸ்ட் அரசின் Archeoloical Series of Tiruvandram Department சொல்கிறது ஆய்வேளிரும் வெள்ளாளர் தான் என்று!

கொங்கர்கள் வெள்ளாளர்கள்!

பரசுராமர் வழி வந்த அந்தணர் என்போர் நம்பூதிரிகள், அரசனாக ஆசைப்படும் பிராமணர்கள்! பரசுராமர் பாரத தேசத்தில் இருந்த சத்திரியர்கள் அனைவரையும் கொன்று ஒழித்து விட்டதாக புராணங்கள் உண்டு, ஆனால் பரசுராமர் புராணத்தை ஏற்போரும் உண்டு,ஏற்காதவரும் உண்டு!

கொற்றவைக்கு பலி கொடுக்கும் போது பூசாரி பேசும் வசனங்களில் அகுதை சாதி வருகிறது, இதை வேள்பாரி நாவலில் சு.வெங்கடேஷன் குறிப்பிட்டுள்ளார், கொற்கை பாண்டியர்கள் மதுரையில் இருந்த அகுதைகளை ஒழிச்சு கட்டிவிட்டு தான் மதுரையை பாண்டிய தலைநகரமாக்குவர் என்கிறார் சு.வெங்கடேசன்!


அதாவது சீர்பழங்குடிகளான உடை உடுத்தவே இயலாத வறுமையில் பாலை நிலத்தை வேட்டையாடி உண்ணும் எயினருக்கும் நதி நாகரீக விவசாய பேரரசான பாண்டியருக்கும் நடக்கிறது போர்

சோழ மண்டல,பாண்டிய மண்டல பூர்வீக ராஜ சரித்திர ஒழுங்கு என ஓலைச்சுவடியில் பாண்டியனை வெள்ளாளன் என்றும், பாண்டியர்களின் பேரரசை முடிவுக்கு கொண்டுவந்தது,பாண்டியனை ஓட ஓட விரட்டியது மறவர் சாதியினர் என்றும் குறிப்புகள் உள்ளது,இந்த ஓலைச்சுவடியை Published செய்துள்ளது தமிழக தொல்லியல் துறை!

கொங்கர்களுக்கு என்றுமே எதிரி தான் பாண்டியன்,கொங்கர்கள் சேரனோடும், சோழனோடும் சேர்வார்கள், ஆனால் பாண்டியனோடு இணைய மாட்டார்கள்!

தமிழ்நாடு மற்றும் இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள பாண்டியர் செப்பேடுகள் பத்து என்று செப்பேடுகள் நூல் பாண்டியர்கள் மனுநீதி ஆசாரங்களை பின்பற்றியவர்கள்,வேதம் படித்தவர்கள்,சத்திரியர்கள் , சந்திர குலத்தில் தோன்றியவர்கள் என்கிறது! ஆனால் இந்த பாண்டியர் செப்பேட்டு ஆதாரங்களை எல்லாம் புறக்கணித்து விட்டு தான் தமிழ்தேசியவாதிகள் பாண்டியனை கொண்டாடுகிறார்கள்!

வேளிர்கள் யது குலத்தினர் என்கிறார் மு.இராகவயங்கார் தனது வேளிர் வரலாறு என்ற நூலில்!

மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 

9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *