வேளாளர்கள் வைசியரா? இல்லையா? பூ வைசியர் யார்? தன வைசியர் யார்?

வைசிகன் என்ற வர்ணம் முதன் முதலில் யாரை குறித்து நின்றது.

உடனே வணிகர்களை என்று கண்னை மூடிக்கொண்டு சொல்லி விடுவார்கள்.

சரி வைசிகன் என்ற சொல்லிற்கு என்னதான் பொருள் என்று யாருமே யோசித்திருக்கமாட்டார்கள்.

வைசிகன் என்ற சொல்லிற்கு பொருள் அறிய முதலில் அதற்கான மூல சொல் (root word) என்ன என்று அறியவேண்டும்.

வைசிகன் என்ற சொல்லிற்கு மூல சொல் “விஸ்” என்பதாகும்.

அனைத்து அகராதிகளும் இதையேதான் கூறுகிறது.

சரி அப்போ அந்த “விஸ்” என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்று பாருங்கள்

“விஸ்” என்றால் உலகம் என்று பொருள்

உலகநாதனை “விஸ்வநாதன்” என்று கூறிகிறோம் அல்லவா அதுபோல “விஸ்” என்ற சொல்லிற்கு “பூமி” என்று பொருள்

அதாவது வைசிகன் என்ற சொல்லிற்கு “பூமி” என்பதே மூல சொல்

இதற்கு உதாரணமாக சோழர்கால கல்வெட்டுகள் சிலவற்றையும் காட்டலாம்.

உதாரணமாக “பதிணென் விஷயத்தார்”, “நாற்பத்தெண்ணாயிரம் விஷயத்தார்” என்ற சொற்கள் வரும் இடங்களில்

அவற்றை “பதிணென் பூமி”, “நாற்பத்தெண்ணாயிரம் பூமி” என்று அதே கல்வெட்டுகளில் கூறும்.

ஆக இங்கு “பூமியார்” என்பதையே “விஷயத்தார்” என்று அழைக்கப்படுவது உறுதி

“விஷயத்தார்” என்ற சமஸ்கிருத வடிவின் தமிழ் வடிவந்தான் “வைசிகன்” என்பதும்.

சரி “வைசிகன்” என்ற சொல் நேரடியாகவே நிலவுடமையாளன் என்பவை கூறும் போது எப்படி வணிகர்கள் வைசியர்கள் ஆனார்கள்

புருஷனிடம் இருந்து அதாவது பெருமாளிடம் இருந்து வர்ணங்கள் தோன்றியதாக வேதம் கூறுகிறது.

அந்த பெருமாளுக்கு மூன்று தேவிமார்கள்

1.பூதேவி
2.ஸ்ரீதேவி
3.நீளாதேவி

உதாரணமாக சோழர்கால கல்வெட்டுகளில்

வெள்ளாளர்கள் : பூதேவி புத்திரர்கள்

வணிகர்கள் : ஸ்ரீதேவி புத்திரர்கள் என்று கூறும்

இங்கு ஸ்ரீதேவி என்பவள் லட்சுமி தேவியை குறிக்கிறது.

இந்த ஸ்ரீதேவி என்பவள் ஆதியில் இருந்து பெருமாளிடம் இருந்தவள் கிடையாது. இதனை பல புராணங்கள் மூலம் அறியலாம்.

லட்சுமி முதலில் இந்திரனிடம் இருந்தால் மிகவும் பிற்காலத்தில்தான் பெருமாளிடம் வந்து சேர்ந்தாள்

பூதேவி மட்டுமே ஆதியில் இருந்து பெருமாளுடன் இருந்தவள்

இதிலிருந்து நாம் அறிவது

ஸ்ரீதேவி புத்திரர்கள் என்னும் வணிகர்கள் பிற்காலத்தில்தான் வர்ணத்திற்குள் வருகிறார்கள்.

பிற்காலத்தில் புதியதாக வணிகர்கள் வைசிய வர்ணத்திற்கு வந்த பிறகு வணிகர்களை “தன வைசியர்” என்றும். வெள்ளாளர்களை “பூவைசியர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.

பிற்காலத்தில் தான் வணிகர்கள் தங்களை வைசிய வர்ணத்தில் இணைத்து கொண்டவர்களே தவிர ஆதியில் வைசியன் என்ற சொல் வெள்ளாளர்களுத்தான் இருந்தது.

இதற்கு “வைசிகன்” : “பூமியர்” என்ற சொல்லே சாட்சி.

வெள்ளார்கள் நான்கு வர்ணங்களாய் உதித்தவர்கள் என்று கூறும் சோழர் கால கல்வெட்டுகளுக்கு இவையெல்லாம் வலு சேர்ப்பவை.

“ஸ்ரீமத் பூதேவி புத்ராணாம் சாதூர் வர்ணஸ்ய குலோத்பவ ஸர்வலோ ஹிதர்தாய சித்திர மேளஸ்ய ஸசனம்”

 

சோழர் சிவபிரகாஷ் அவரது முகநூல் பதிவில்  இருந்து எடுத்தாளப்பட்ட கட்டுரை 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *