ஸ்மார்த்த பிராமணர்களிடம் இருந்து ஆதிசைவர்களையும், சைவ ஆகமங்களையும் காக்க போராடுவோம் வாருங்கள்

சைவசமயத்திற்கு வந்துள்ள சோதனைகள்

1) சைவ முதல்வன் என்று அருணகிரிநாதர் போற்றும் திருஞானசம்பந்தப்பெருமானின் இல்லம் ஸ்மார்த்தமத சங்கரமடத்தின் நிர்வாகத்தினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளமை.

2) சைவக்கோயில்களில் சிவாகமவிரோதமாக, ஸ்மார்த்தமத ஆச்சாரியரான ஆதிசங்கரருக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை.

3) சைவக்கோயில்களை சைவசமயத்திற்கு சம்பந்தமேயில்லாத ஸ்மார்த்தமத காஞ்சி சங்கரபீடம் நிர்வாகம் செய்துவருகின்றமை.

4)திருவாசகம்,சிவஞானபோதம்,தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் என்று சைவ நூல்களுக்கு ஸ்மார்த்தமத அத்வைத உரைகள் எழுதிப்பரப்பி வருகின்றமை.

5) சைவக்கோயில்களில் வேதம்,சிவாகமம்,திருஞானசம்பந்தர் தேவாரம்,கந்தபுராணம் என்று யாவும் ஓமென்றே வேதமோத வேண்டுமென்று விதித்திருக்க, ஹரிஓம் என்று வேதம் ஓதும் ஸ்மார்த்தமத வழக்கு புகுத்தப்பட்டிருக்கின்றமை.

6) ஆகமங்கள் அபிடேகம் முதலாய ஆலயக்கிரியைகளில் பல்வேறு மொழிகளிலும் தோத்திரம் படிக்க விதித்திருக்க, அவற்றுக்கு திருமுறைகளைப் படிக்குமாறு ஊக்குவித்தால் “தமிழ்வழிபாட்டுக்காரன்” என்று முத்திரை குத்தும் வடமொழி மோகம் வளர்ந்துள்ளமை.

7) தனியே ஆகமப்பூசையாய் இருந்தால் உத்தமம், ஆகமத்தோடு வேதத்தை சேர்த்துச்செய்தால் மத்திமம் என்றும், வேதத்தினை மாத்திரமே கொண்டுசெய்வது அதமம் என்றும் சிவபூசைகளைக் கூறுகின்றது. இந்த உண்மை இப்படியிருக்க, குபேர மந்திரங்களெல்லாம் வேதப்பிரமாணமென்று இட்டுக்கட்டி பத்ததிகள் செய்து ஆலயத்தில் புகுத்தி சிவபரத்துவத்தை சிதைத்தமை. ஆகமத்தில் கூறப்பட்ட வேத சுலோகங்களைச் சுட்டிக்காட்டி வேதத்தைக் கலந்தால் அது மத்திமப்பூசையே என்பதை மறுக்கும் மாயாஜாலம் செய்வோர், மத்திமப்பூசை செய்வோர் சிவபரத்துவத்துக்கு குந்தகமான வேத சுலோகங்களை இணைத்துவிடக்கூடாதென்பதற்காகவே எந்தெந்த வேத சுலோகங்கள் பாடலாம் என்னும் அனுமதி பட்டியலை ஆகமம் தந்துள்ளதென்பதை உய்த்துணராநிலை.உத்தமப்பூசைகளைப் பற்றி சிந்திக்காத இழிநிலை.

8) சனைச்சரனை சனீஸ்வரனாக்கியமை.தென்முகக்கடவுளை வியாழன் ஆக்கியமை.தென்முகக்கடவுளை தூக்கிப்போட்டு அங்கு காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியாரை பிரதிஷ்டை செய்தமை.

9) பதிவாக்கியமான காரைக்கால் அம்மையார் அருளிய தோத்திரங்கள் முதலாய திருமுறைகள், தாயுமானவர் சுவாமிகள் அருளிய தோத்திரங்கள் என்று தமிழ்ப்பதிவாக்கிய தோத்திரங்களை ஓரங்கட்டிவிட்டு, அதிசங்கரர்பாடிய பசுவாக்கிய இலிங்காஷ்டகம்,சிவானந்தலகரி,சௌந்தரியலகரி,சுப்பிரமணிய புஜங்கம் என்பவற்றை வடமொழியில் இருக்கின்றதென்ற மோகத்தில் ஆலயத்தில் பாடிவரும் இழிநிலை.

10)இந்துவென்ற சொல்திணிப்பால் தமிழ்நாட்டில் சைவசமயம் என்னும் சொல்லே ஒழிக்கப்பட்டுவிட்டது.இன்று இலங்கையில் ஒழிக்கப்படும் நிலையை எய்தியுள்ளது.

இப்படி சைவசமயம் ஸ்மார்த்தமதத்தின் ஆதீக்கத்தால் ஒழிந்திடும் இழிநிலையில் உள்ளமை உணர்ந்து ,ஸ்மார்த்தமதத்தை வீழ்த்திட உண்மைச்சைவர் சிவாகமவேள்விகள் செய்திட வேண்டும்.

 

🙏🏾🙏🏽🙏🏿எல்லாம் திருவருட்சம்மதம்🙏🏾🙏🏽🙏🏿

முகநூல் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது 

மேலும் தொடர்புக்கு சைவன் ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *