ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்????

15

ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்? 

 ஏமாளிகளா ரெட்டியார்கள்?
தமிழ்நாட்டில் ரெட்டியார் என்பது சாதியா? என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான்!!!

தமிழகத்தில் வெள்ளாளர்களும் (கொந்தள வெள்ளாளர்கள், துளுவ வெள்ளாளர்கள், வீரகொடி வெள்ளாளர்கள் ) மற்றும் வன்னியர்களும் கூட ரெட்டியார் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்!!!
தமிழக ரெட்டியாரில்

1.கொங்கு ரெட்டியார் (OC அதாவது FC Forward Community)

2.தேசூர் ரெட்டியார் (OC அதாவது FC Forward Community)

3.அயோத்தி ரெட்டியார்
(OC அதாவது FC Forward Community)

4.காப்பு ரெட்டியார் (OC அதாவது FC Forward Community)

5.பண்ட காப்பு ரெட்டியார்
(OC அதாவது FC Forward Community)

6.ஒரு குண்ட ரெட்டியார்
(OC அதாவது FC Forward Community)

7.பண்டா ரெட்டியார் (OC அதாவது FC Forward Community)8.கஞ்சம ரெட்டியார் (BC)

9.கொண்டா ரெட்டியார்
(ST பழங்குடியினர்)
ஆகமொத்தம் இத்தனை ரெட்டியார்களில்

ஒன்று BC (பிற்படுத்தப்பட்டோர்)

ஒன்று ST (பழங்குடியினர்)
மீதியுள்ள ஏழு ரெட்டியார்களும் OC (Forward Community) முற்படுத்தப்பட்டோர்

இந்திய விடுதலைக்கு பின்னர் தமிழக அரசு தமிழகத்தில் சாதிவாரி இடஒதுக்கீடு கொண்டு வந்து அதில் 7 ரெட்டியார் பிரிவுகள் OC யில் இருப்பதால் நமக்கு இடஒதுக்கீடே கிடையாது!!!

அதற்காக நாம என்ன செய்தோம் கஞ்சம ரெட்டியார் என்று ஏமாற்றி BC சாதி சான்றிதழ் வாங்கி தமிழக அரசு வேலைக்கு சென்றோம்!! மிகசொற்பமாக
ஒரு காலத்தில் ரெட்டியாரில் டாக்டர், வக்கீல், தாசில்தார், கலெக்டர், Police Inspector, DSP, SP நீதிபதி என பல்வேறு அரசு வேலைகளில் இருந்தோம் 1980 க்கு முன்னர்!!! ஆனால் தற்பொழுது என்னவானது?
பிச்சையெடுக்காத குறையாக சென்னை, பெங்களூர், மும்பை, வெளிநாடு என வேலைதேடி ஊர் ஊராக சுற்றி வேலைதேடி போன ஊரிலே குடிபெயர்ந்தும் விட்டோம்!!!
இதனால் ரெட்டியார்கள் இழந்தவை என்ன :

 

இடஒதுக்கீட்டிற்காக அயோத்தி ரெட்டி – கஞ்சம ரெட்டியாக மாறி போனான்!!!
கஞ்சம ரெட்டி — கொண்டா ரெட்டியாக மாறிபோனான்!!

 

ஆக மொத்தம் நமது ரெட்டியார்களின் உட்பிரிவுகளை எல்லாம் இழந்து நமது கோத்திரங்களான

1.வீரசவல்லியார் கோத்திரம்

2.மிதுனபால கோத்திரம்

3.விசுவநாத கோத்திரம்
4.சிந்துபால கோத்திரம்5.பல்லமலா கோத்திரம்
6.இரணயலக் கோத்திரம்

7.அனுபாலக் கோத்திரம்

8.மதுராந்தக் கோத்திரம்

9.பிரமல கோத்திரம்

10.கனகமள்ளா கோத்திரம்

11.விஷ்ணுபால கோத்திரம்

 

இவற்றையெல்லாம் ஊர் ஊராக சுற்றியதால் மறந்து, கோத்திரம் தெரியவில்லையெனில் அல்லது மறந்து விட்டோம் எனில் ரெட்டியாரெல்லாம் அக்கா, தங்கச்சியையே கல்யாணம் பண்றோம் என்று அர்த்தம், சொந்த ஊருக்கு போகாமல், ஊர் கோவிலுக்கு வரி கொடுக்காமல், குலத்தெய்வ கோவிலுக்கு வரி கொடுக்காமல், ஊர் கோவில் கொடைக்கு வரமுடியாமல், குலத்தெய்வ கோவிலுக்கு வருடம் ஒரு முறை கூட போக முடியாமலும், ஊரில் உள்ள பூர்வீக நிலத்தை விற்று, ஊரில் உள்ள பூர்வீக வீட்டை விற்று, நமது கோவில்களை எல்லாம் நம்மிடம் இருந்து மற்ற சாதிக்காரர்கள் சண்டை போட்டு, ஏமாற்றி புடுங்கிவிட்டார்கள், சொந்த ஊரில் அல்லது பக்கத்து ஊரில் அல்லது சொந்த மாவட்டத்தில் தொழில் பார்க்க தெரியாமல், வியாபாரம் பார்க்க தெரியாமல், வணிகம் பார்க்க தெரியாமலும், தமிழக அரசு வேலைக்கு போகமுடியாமலும், ரெட்டியாரின் பொருள் என்ன நிலவுடமையாளர் இன்று எந்த ரெட்டியாரிடம் அதிக விவசாய நிலம் உள்ளது எல்லாத்தையும் இழந்து, கொத்தனாராக, சித்தாளாக, கூலியாக, ஆட்டோ ஓட்டுநராக, லாரி ஓட்டுநராக, மூடை சுமப்பவனாக,
அனாதையாக, அகதியாக ஊர், ஊராக சுற்றி கொண்டு திரிகிறோம்!
இதற்கு பெயர் என்ன உள்நாட்டு அகதிகள் என்று பெயர்!!!

 

சிலருக்கு கோவம் வந்தாலும் இது தானே உண்மை!! நாம் அகதிகள் தானே அல்லது நாம் நாடோடி சாதியினரா?

நாடோடி சாதிகள் தான் சொந்த ஊரே இல்லாமல் ஊர் ஊராக குறவர்கள் மாதிரி பயணிப்பார்கள், ரெட்டியார்கள் அப்படி தானே ஊர் ஊராக சுற்றி கொண்டு உள்ளோம்!! நமக்கு நிலையான வாழ்க்கை எங்கே உள்ளது?இதில் ஆண்ட பரம்பரை ரகு வம்சம் என பிதற்றி கொண்டு சுற்றி வருகிறோம், ஆண்ட பரம்பரை தான் சித்தாள் வேலையும், கொத்தனார் வேலையும் பார்ப்பார்களா? ஆனால் இன்று நாம் பார்க்கிறோமே!!!

இதில் ரெட்டியார்களுக்கு அரசியல் கூட புரியவில்லை!! என்ன செய்வது அவ்ளோ முட்டாள்கள் ஆகி போனாம்!!

மத்திய அரசு OC (FC ) சாதியினருக்கெல்லாம் சேர்த்து 10% பொருளாதார இடஒதுக்கீடு என்ற ஒன்று கொண்டூ வருகிறது அரசு வேலையிலும், கல்லூரி படிப்புகளிலும்!!

ஆனால் தமிழகத்தில்
இந்த 10% பொருளாதார இடஒதுக்கீட்டின் மூலமாக ரெட்டியார்கள் தமிழக அரசு வேலைக்கு போக விடாமல், கல்லூரி படிப்பில் இடஒதுக்கீட்டை நாம் பெறுவதையெல்லாம் தடுப்பது யாரு?
இந்த சாதி ஒழிப்பு திக, திமுக, கம்யூனிஸட், விசிக தான்

காங்கிரஸ் கூட 10% பொருளாதார இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறது!!!
ரெட்டியார்களுக்கான இடஒதுக்கீட்டை தடுப்பதே திமுக தான்!! ஆனால் ரெட்டியார்கள் யாருக்கு சொம்பு அடிக்கிறோம் ரெட்டியார் என்பதற்காக திமுக கட்சியை சார்ந்த

 

கே.என்.நேரு அவர்களுக்கும்

அருப்புக்கோட்டை KKSSR அவர்களுக்கும்
தான்!!!

ஏன் திமுக வில் இவர்கள் நினைத்திருந்தால் திமுக தலைமை ஸ்டாலின், கனிமொழியிடம் பேசி அந்த 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தியிருக்கலாமே?

அல்லது 10% பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்காமல் இருந்துயிருக்கலாமே?
இரண்டையும் செய்ய மாட்டார்கள்!!!

நாமும் எதிர்த்து கேள்வியே கேட்க மாட்டோம்!!!

தற்பொழூது கே.என்.நேரு அவரது மகனை திருச்சி திமுக அரசியலுக்குள் வளர்த்து விடுகிறார்!!!
ஆனால் இவர்களால் ரெட்டியார் சாதிக்கு என்ன பயன்?

ஒரு வெங்காயமும் கிடையாது!!

KKSSR ரூம், கே.என்.நேரு வும் அவங்க அவங்க வீட்டுக்கு சொத்து சேர்த்து கொண்டது தான் மிச்சம்,

கோவில் கொடை, ஊரில் திருவிழா, கோவில் கட்டனும், ரெட்டியார் சங்க விழா என்று அப்படி இப்படி என்று ஏதாவது உதவி கேட்டால் பிச்சை காசு ஒரு 5000 அல்லது பத்தாயிரத்தை தூக்கி போடுவார்கள்!!

அந்த பத்தாயிரத்தை நமக்கு சம்பாதிக்க தெரியாது? நாம தான் கொத்தனார் வேலைக்கும், வெளிநாட்டில் கூலி வேலைக்கும் போறோமே!!

திமுக வில் இருந்து கொண்டு சாதி ஒழிப்பை பேசி ரெட்டியார் உட்பிரிவுகளை, கோத்திரங்களை அழித்து, ரெட்டியார்களை நாடோடியாக, அகதியாக, அனாதையாக ஊர் ஊராக, மாநிலம் விட்டு மாநிலம் சொந்த ஊரை விட்டு சுற்றி கொண்டு இருக்கிறோம்!!!
இந்த 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தினால் கூட ரெட்டியார்கள் தமிழக அரசு வேலைக்காவது போயி அவங்க அவங்க சொந்த மாவட்டத்திற்குள்ளாவது இருந்து கொள்ளலாம்!!!

என்றாவது ஒரு நாள் நாம் கே.என்.நேருவையும், KKSSR ரையும் நேரில் சந்தித்து 10% இடஒதுக்கீட்டை திமுக தடுக்க கூடாது என்று ஸ்டாலின், கனிமொழியிடம் எடுத்து சொல்லுங்கள் என்று கூறியிருப்போமா?ரெட்டியார்களுக்கு தான் முதுகு எலும்பு இல்லையே!!!

போராடாமல் ரெட்டியார்களுக்கு இந்த 10% பொருளாதார இடஒதுக்கீடு கிடைக்கபோவதில்லை, ரெட்டியார்கள் நாடோடியாகவும், அகதியாகவும் காலம் கழிப்பது உறுதி!!!

இதுவும் பிழைப்பாக 10% இடஒதுக்கீட்டை பெற முடியாமல் மானங்கெட்டு வாழ்கிறோம்!!

போருக்கு அஞ்சாத ரகு வம்ச ரெட்டியார், இன்று தனது உரிமைக்காக கூட போராட தயங்குகிறது!!

10% பொருளாதார இடஒதுக்கீட்டை பற்றி தெரிந்து கொள்ள, ரெட்டியார்களின் எதிர்காலம் பற்றி தொடர்பு கொள்வீர்

கட்டுரையாளர் : 

விளாத்திகுளம் கார்த்தி 9629908758

15

2 Comments

 1. Kalaiarasan

  கஞ்சம் ரெட்டி என்றால் என்ன அவர்களுக்குரிய கோத்திரம் பெயர்கள் என்ன?அயோத்தி ரெட்டி என்றால் என்ன அவர்களுக்குரிய கோத்திரம் பெயர்கள் என்ன?கழுத்தில் தாலி செயின் அணியாமல் கையால் செய்த மஞ்சள் கயிறை மூலம் காலியாக அணியும் சாதியினர் எந்த ரெட்டியார் வகுப்பை சேர்ந்தவர்?

  Reply
 2. Rajesh N

  கழுத்தில் தாலி செயின் அணியாமல் கையால் செய்த மஞ்சள் கயிறை மூலம் காலியாக அணியும் சாதியினர் எந்த ரெட்டியார் வகுப்பை சேர்ந்தவர்

  பேடகண்டி ரெட்டியார் வகுப்பை சந்தவர்களே ஆவர்

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *