முதல்வரை மிஞ்சிய கூட்டத்தைத் திரட்டிய டி.டி.வி. தினகரன்மீது பாய்ந்தது வழக்கு

23658807_1794785030556043_6892894581657183374_nமுதல்வரை மிஞ்சிய கூட்டத்தைத் திரட்டிய டி.டி.வி. தினகரன்மீது பாய்ந்தது வழக்கு!

நெல்லையில் நடந்த வ.உ.சி குருபூஜைக்கு வருகைதந்து சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நெல்லையில் கடந்த 12-ம் தேதி தமிழக அரசு சார்பாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாலைகளை மறித்து பிளக்ஸ் பேனர்களும் கட்-அவுட்களும் வைக்கப்பட்டன. அரசு சுவர்களில் அனுமதியின்றி வரவேற்பு விளம்பரங்கள் எழுதப்பட்டன். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த விழா நடந்த ஒரு வார காலத்தில் அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன் நெல்லைக்கு வருகை தந்தார். வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 81-வது நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த அவருக்கு சிறப்பான வகையில் வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவு செய்திருந்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வந்த கூட்டத்தை விடவும் அதிக கூட்டத்தைத் திரட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.அதன்படி, தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு வந்த தினகரன் வாகனத்துடன் சுமார் 500-க்கும் அதிகமான வாகனங்கள் அணிவகுத்து வந்தன. ஏராளமான தொண்டர்கள், அவர் வந்த சாலையின் இருமருங்கிலும் நின்று வரவேற்பு அளித்தனர். அத்துடன், சாலை நெடுகிலும் வரவேற்பு பேனர்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், அவரது வருகையின்போது நெல்லையே ஸ்தம்பித்தது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், அனுமதி இல்லாமல் வரவேற்பு பேனர்கள் வைத்ததற்காகவும் டி.டி.வி.தினகரன், நெல்லை மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா உள்ளிட்ட 100 பேர்மீது நெல்லை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர்மீது இரு பிரிவுகளில் போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

விகடன் செய்தி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *