வெள்ளாளன் சிறப்பே சிறப்பு

வெள்ளாளன் சிறப்பே சிறப்பு :

வேளாளன், மந்திரியும் ஆவான் வழிக்கும் துணை ஆவான் அந்த அரசே அரசு என்று அவ்வையார் சோழ அரசனுக்கு நல்ல அரசு வேளாளன் துணையாகத்தான் நடக்கும் என்றார். “ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு ” என்கிறது குறள். “நல்லவர் எல்லாரும் ஆனாநாளையும் வல் உழவு அன்றி ஓர் வாழ்வு உண்டாகுமோ ” என்கிறது வேளாளர் புராணம் மேலும் “மானமே குலம் கல்வி வண்மையே தானமே ஊக்குணர்தாண்மை ஆகிய ஆனநாரியர் மயலாம் சிறார் இவர் வானன் நீள் பெளத்திரர் உழவர்மைந்தர்கள் ” என்று வேளாளர் இளைஞர்களைப் பற்றி அப்புராணம் கூறும். “அறம் தரும் உழவர்கள் ஆக்கும் தண்டுலம் மறந்தவர் இருமையும் மறந்த மாந்தரே ” உழவுத்தொழில் செய்யும் வேளாளர் இம்மை மறுமைக்கான அறந்தருபவர்கள். ஏர் எழுபதில் கம்பர் வேளாளரின் சிறப்பையெல்லாம் தொகுத்துக் கூறியுள்ளார் . கொங்கு வேளாளக் கவுண்டர் சிறப்புரைக்க வேறுநூல் தேவையில்லை . உழுகின்ற வேளாளளின் எல்லா உயிர்க்கும் உயிராவான் . “கலையிட்ட மறைவேந்தர் கனல் வேள்வி வளர்ப்பதுவும் நிலையிட்ட வேளாளர் உலையிட்ட நீராலே ” (ஏர் எழுபது 41 ) அரசனது மணிமகுடமும் ,வணிகர்தனமும் , நிலையான வேளாளர்தம் உலையிட்ட நீர் என்ற சிறப்பு பெருமைக்குரியது.




“அருள்பரவும் வேளாளர் பயிர்வளத்தால் நீதி
அந்தணர் வேள்வி வளரும்
அன்பினோடு இவர்கள் படைவாளேடுத்தால் @@@@
அரசர் படைவாள் எடுக்கும்
கருது தானியராசி இவர் குவித்தால் வணிகர்
கனகராசியெலாம் குவிப்பர்
காதலுடன் ஏர்த்தொழில் நடத்தினால் மற்றுள்ளோர்
கைத் தொழில் எல்லாம் நடக்கும்.
உரிய வள்ளத்தில் இவர் அளந்த பின் நாரணன்
உயரிக்கெல்லாம் படி அளப்பான்
ஓதரிய வேளாளர் பெருமையால் அன்றிமற்று
உலகில் ஒரு பெருமையுண்டோ?”




பேரூர்பட்டீசர் புராணம் கூறும். இதற்கு மேல் யாரும் சொல்ல இயலாது . அறநெறிச்சாரம் அறக்கதிர் விளைவிப்பர். வெள்ளாளர் என்பதற்குச் சான்று கூறுகிறார்.
“இன்சொல் விளைநிலமாய் ஈதலேவித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டீ
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனுமோர்
பைங்கூர் சிறுகாலைச் செய் “.
எப்படி உழுதொழிலைச் செய்யவேண்டும் என்று கூறுகின்றார்.
வேளாளர் புராணமும், ஏற் எழுபதும்:
வீராச்சிமங்கலம் கந்தசாமிக் கவிராயர் வேளாளர் சிறப்புரைக்கவே வேளாளர் புராணம் பாடினார். கம்பன் காவியத்தையும், ஏர் எழுபதையும் உரைத்தார் கம்பர் சடையப்ப வள்ளலிடம் உணவுண்ட நன்றிக் கடனுக்காக ஏர்எழுதைப் பாடினார். சடையப்பவள்ளலும் கொங்கு வெள்ளாளரே.
“பார்பூட்டும் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணாப்
போர் பூட்டும் காமனும் தான் பொருசிலை மேற்சரம் பூட்டான்
காற் பூட்டும் கொடைத்தடக் கைக்காவேரி வளநாட்
ஏர் பூட்டின் அல்லது மற்று இரவியும் தேர் பூட்டானே” .
(ஏர் எழுபது 18 )
கொங்கு வெள்ளாளன் ஏற்பூட்டாவிட்டால் காமனும் சரம்பூட்டான். கதிரவனும் தேர்பூட்டி வரமாட்டான் என்பார் கம்பர் . கந்தசாமிக் கவிராயர் “ஈட்டால் இவன் ஏர் பூட்டினால் அல்லால் இரவியும், தேர்பூட்டான்” என்று அதே சொல்லால், கருத்தால் பாடியுள்ளார் கொங்கு வெள்ளாளன்.
“உழவுக்கு அஞ்சியன் ஏர் உள்ளான், ஆள்உளான் இயற்றும்
தொழிலுக்கு அஞ்சியன் சுறுங்கலான்,வரவினில் தோலான்
நிழலுக்கு அஞ்சுவான் நிலத்தினுக்கு உரியவன் நீரை
விழலுக்கு உபத்தலாம் விளைவின் கண்போற்றலா வினையே”

என்று புராணம் கூறும். ஏர் உளான் உழவுக்கு அஞ்சான்.சும்மா நிழலிருக்க அஞ்சுவாணாம்.

பிங்கல நிகண்டு வேளாளர் தம் சிறப்பைக் கூறுகிறது.

வேளாளர் தம் குண இயல்புகள் பத்து என்று கூறுவர்




“ஆணை வழி நிற்றல் மாண்வினை தொடங்கல்,
கைக்கடன் ஆற்றல், கரில் அகத்து இன்மை
ஒக்கல்போற்றல், ஓவா முயற்சி
மன்னிறை தருதல், ஒற்றுமை கோடல்
திருந்திய ஒழுக்கம், விருந்து புறந்தருதல்
வேளாண் மாந்தர் செய்கை ஈரைந்தே”
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பார்ப்பது `பழமொழி` இந்தப் பழமொழிக்குரியோர் கொங்குப் பெண்களே.

ஏர் எழுபதிலும், வேளாளர் புராணத்திலும் கூறப்பட்ட சிறப்பெல்லாம் எடுத்தால் தனி நூலாகிவிடும்.
“கொங்கு நாட்டில் முதற்குடி மக்கள்
கொங்கு வேளாளர் கொள்கை மறவர்
சங்க நூல்கள் சாற்றும் இவர் புகழ்
இங்கும் இன்றும் இவர்களே உயர்ந்தோர்”
வேளாளக் கவுண்டர்களே வெள்ளைமனப் பண்பாளர்.
தாளாது மானமதில் உயிர்வைத்து ஒழுக்கமுடன்
கோளாண்மை கொண்டவர்கள். உழைப்பினிலே
மீளாது உயிர்வாழ்வார் மார்புகழை விதைத்தவர்கள்.






Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *