வெள்ளாளர் யார் யார் ? எப்படி உருவானர்கள்? அனைவரும் படிக்க….

மரபாளர் மகத்துவம் 1முதல் நாகரிகத்தை தோற்றுவித்த வேளாளர்கள் (பிள்ளைமார், முதலியார்)  வேளாண்மைக்கு உரிமை பூண்டவர்கள், காவலுரிமை உடையவர்கள், முதன்முதலில் நிழங்களை உழுதும், உழுவித்தும் வேளாண்மை தொழில் செய்ததனால், காடுகெடுத்து நாடாக்கி வேளாண்மைக்கு தலைமை ஏற்று உழுவித்தவர்கள் என்பதனாலும், வேளாண்மையை அறிமுகப்படுத்தியவர்கள் என்பத னாலும், ஈகையுடையார் எனும் இவர்களின் பண்பின் படியும், வேளாளர் குலத்தவர் என்று திராவிட சிந்து சமவெளி நாகரிக காலம் முன் தொட்டே தங்களை அடையாள மிட்டும். பிறராலும் இவர்கள் (பிள்ளைமார், முதலியார்) வேளாளர்கள் என அழைக்கப்பட்டும். மேலோர் என மதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். மதிக்கப்படுகின்றனர்.அருளொழுக்கம் உடைய இக்குடியினர் போற்றப்படு கின்றனர். எனவே முதல் நாகரிக காலத்திலிருந்து தொன்று தொட்டு இன்றுவரை வேளாளர் சாதியார் பிள்ளைமார், முதலியார் என அழைக்கப்படும் இவர்களே. வேளாளர் (பிள்ளைமார்,முதலி யார்)களுக்கு  கடமைப்பட்டும், கூலிக்காகவும் விவசாய பணிசெய்தவர் எல்லாம், தற்சமயம் விவசாய தொழில் செய்பவர் எல்லாம் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) அல்ல.  மேலும் தமிழ்க்கடவுளான விநாயகர், முருகப்பெருமான் பரம்பொரு ளான சிவபெருமானின் பிள்ளை கள் என்பதனால்  பிள்ளையார் எனகுறிப்பிடப்பட்டனர். தற்போது  இப்பெயர் விநாயகருக்கு மட்டும் உரியதாக காணப்படுகிறது. இதன் படியே வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் சக்தியின் மைந்தர்கள் என பிள்ளையார் என குறிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். பின்னர் அரசின் உயர்பதவிப் பட்டமாக வேளாளர்களுக்கு பிள்ளை, முதலி என்பது வழங்கப்பட்டிருக்கிறது. முதலி – முதலியார் என்றும் பிள்ளையார் என்பதே பிள்ளைமார் என்றாகி யிருக்கிறது. வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் கங்கை மைந்தர்கள் என குறிப்பிடப்படுவதைப் போல முருகப்பெருமானும் கங்கை மைந்தர் என குறிப்பிடப்படு கிறார் வேள் – மண், நிலம்  ஆளர் – ஆள்பவர்   வேள் – மன்னன், தலைவனாக ஆள்பவர் (முருகப்பெருமான் திருப்பெயர்களில் ஒன்று) நீண்ட புகழுடையவன், யாவருக்கும் பிடித்தமானவர், மதிப்பிற்குரியவர்,  என்பதே வேளாளர் குலப்பொருள். எனவே தொழில் முறையைக் கொண்டு மட்டும் வேளாளர் இனத்தோர் என அழைக்கப்படவில்லை என்பது விளங்கும். மேலும் இவ்வேளாளர்கள் (பிள்ளைமார், முதலியார்)கள் அரசராவதற்கும், அரசாங்கத்தை வழி நடத்தவும் தகுதி படைத்தவர்,  அரசாளும் உரிமை பூண்டவர்கள் என இலக்கியங்களில் வேளாளர் வரலாறு குறித்த நூட்களில் கூறப்பட்டிருப்பதனிலும் காணலாம். பழைய ஷத்திரிய வகுப்பினர் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதனையும் காணலாம்.

வஉசி பாடல்கள் DOWNLOAD செய்ய

வேளாண்மைக்கென பாய்ந்து வரும் வெள்ளத்தை அடக்கியாண்டதனால் வெள்ளாளர் என்ற சிறப்பு பெயர் பெற்றனர். வெள்ளாளர் எனும் சிறப்பு பெயர் வார்த்தை திரிபு தான் பட்டப் பெயரல்ல  மற்றவரெல்லாம் பெற்ற தாக பயன்படுத்த. வேளாண்மை என்பதனை சில பகுதிகளில் வார்த்தை திரிபாக வெள்ளாண்மை என்பர் இரண்டிற்கும் அர்த்தம் ஒன்று தான். இது போல வேளாளர் என்பதன் திரிபே வெள்ளாளர் இவ்விரண்டிற் கும் பொருள் ஒன்றே. அன்றைய காலங்களில் வேளாளர் இனகுழு தலைவர்கள்  (பிள்ளைமார், முதலியார்) உழுவிப்போர்  என்றும் அவர்களின் ஆலோசனையின் படி உழவுத்தொழில் மேற்கொண்ட வேளாளர் (பிள்ளை மார்,முதலியார்)கள் உழுதுன்போர் என்றும் அழைக்கப் பட்டனர். பிள்ளைமார், முதலியார் என்று தங்களுக்கே உரிய குலவிருது பெயர்களுடன் மேலும் ஓரிரு பட்டப்பெயர் கொண்ட வீரக்குடியினமான வேளாளர்கள், கிழவன், கிழார், கிழான், வேளார், வேளிர், வேள், வேண்மார், குட்டுவன், கோன், வர்மன்,தேவர், நாகர், மார்தாண்டன், பிள்ளை, உடையார் இது போன்ற பட்டங்களை தரித்து அரசர்களாக, குறுநில மன்னர்களாக ஆட்சிசெய்துள்ளனர்.  இவை வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களுக்கே உரியன. வேள், வேளிர், என்பன வேளாளர் என்பதன் திரிபே. இது வேளாளர்கள் தங்களுக்கு தாங்களே தரித்துக் கொண்ட பட்டங்கள்.ஈசனின் நெற்றிகண் தீப்பொறியினில் தோன்றியவரான வேலவர் வழிவந்தவர்கள் என வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) களுக்கு வேலவ வம்சத்தினர், வேலன் வம்சத்தினர், அக்னி குலத்தவர் என்றும் பெயருண்டு எனக்கூறப்படுகிறது. முருகப் பெருமான் வேளாள (பிள்ளைமார், முதலியார்)குலத்தவரும் இக்குலத்தின் வேளிர் தலைவனுமான உப்பூரிகுடி கிழார் மகனாய் தோன்றினார் எனவும் கூறப்பட்டுள்ளது. சிலர் வேளாளர்(பிள்ளைமார், முதலி யார்) என்பதனை மனுதர்மம் எனும் ஆரிய நூலில் செட்டியார் என தவறாக குறிக்கப்பட்டிருப்பதை கொண்டு பெரும்பிழையாக  முகப்பெருமான் செட்டியார் குலத்தில் தோன்றியவர் என உண்மைக்கு புறம்பாக எழுதி வருகின்றனர். இவ்வாறே இவ்வேளாளர்கள் துளுவ எனும் மொழி பேசுவோர்  என தவறாக கூறப்படுகிறது.துளுவ என்பது மொழியல்ல ஓர் நாடு துளுவ நாட்டின் மீது வேளாளர்கள் படையெடுத்து வெற்றிக்கொண்டு தாய்நாடு(செந்தமிழ்நாடு) திரும்பிய வேளாளர் (பிள்ளை மார், முதலியார்)கள் துளுவ நாடு வென்ற வேளாளர் என்றவாறு துளுவவேளாளர்(பிள்ளைமார்,முதலியார்) என்றழைக்கப்பட்டனர்.நாகரிக வாழ்க்கையில் சிறந்த தமிழ் மக்களில் முதன்மையானவர்களான இவ்வேளாளர்கள் (பிள்ளை மார், முதலியார்)  தென்னாட்டின் கண் மட்டுங்குடியாண்டு  வாழ்ந்தவர்கள் அல்ல.  இவர்கள்  தமிழ் நாட்டின் மேல்கடற்கரைப் பக்கமாக வடக்கு நோக்கியும்,  அதே போல் குமரிமுனையை கடந்து (கடல் சீற்றத்திற்கு முன்பும் பின்பும்) கடற்சீற்றத்தில் மூழ்கி தனி தீவாகிய இலங்கை முதல் இமயமலைச்சாரல் வரையிலுள்ள வடநாடெங்கும் பரவி ஆங்காங்கு நாடுநகரங்கள் அமைத்து தமது நாகரிகத்தைப் பெருக்கி வந்தனர். தம்மை சார்ந்த பிற சமுதாய தமிழ் மக்களையும் வாழ்வித்தனர். இதனால் தமிழினத்தைச் சார்ந்த வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) அல்லாத மற்றோர் இவர்களை மரியாதை நிமித்தமாக ஆண்டை என்றழைத்தனர்.  வடக்கே  மேல்கடற்கரையைச் சார்ந்த பல ஊர்களும், நகர்களும், கீழ் கடற்கரையைச் சார்ந்த தெலுங்கு நாட்டு ஊர்களும்  அங்கு அரசாண்ட ஆந்திர சாளுக்கிய அரசர்களும் வேள்புலம், வேளாபுரம், வேளகம், வேள்காம், வேள்பட்டி, எனவும் வேளிர், வேண்மார் எனவும் முறையே வழங்கப்பட்டு வந்தமையே இதற்கு சான்று. வடக்கே கீழ்கடற்கரையிலுள்ள நாடுகளை அரசாண்ட சாளுக்கியர்களும் வேளாளர்களே (பிள்ளைமார், முதலியார்) ஆவர்.இவ்வாறு வடநாடுகளில் அரசாண்ட வேளாளர்குல வேளிர்களும் அவரினத்தவரான வேளாளர் (பிள்ளைமார் முதலியார்) கள் தென்னாட்டிலிருந்து தம்முன்னோரின் பிறப்பிடமான தமிழ் நாட்டையும், முன்னோரையும் பிரிந்து போனவரேனும் மறந்தவரல்லர். காலம் வாய்த்து ழியெல்லாம் அவர்கள் தென்னாட்டிலுள்ள தம் உறவினரோடு உறவுகலந்தும், நேரிமலைக்கு தெற்கேயுள்ள காடுகளையழித்து அவற்றின் கண் நாடுநகரங்கள் அமைத்து அரசுபுரிந்தும் வந்தனர். நடுநாடாகிய மைசூரில் இப்போது துவார சமுத்திரம் என வழங்கும் துவரை நகரை வேளாளர் வேளிர் அரசர் நாற்பத்தொன்பது தலைமுறை செங்கோல் செலுத்தி வந்தனரென்பது கபிலர் புறநானூற்றில் கூறுவதனை வைத்தும் அறியலாம். இதனைக் கொண்டு பண்டைய நாளில் தென்னாட்டிலும், வடநாட்டிலும் பரவியிருந்த வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களும், அவர்களில் அரசராக இருந்த வேளாளர் குல வேளிரும், நாகரிகத்திற் தலைச்சிறந்தவரா இருந்தமையால், தாம் ஒருவரை யொருவர் மறவாது, வடநாட்டிலுள்ளார் தென்னாடுவந்தும், தென்னாட்டிலுள்ளார் வடநாடு சென்றும் இடையே உறவு கலந்து வந்தமை என்றென விளங்கும்.சிலரால் இவ்வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் கங்கை நதிகரையிலிருந்தும், 15 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு தேசத்திலிருந்தும் வந்தவர்கள் எனவும், வட நாட்டிலுள்ள பண்டிட் என்னும் ஆரிய சாதியினர் தமிழகம் வந்து வேளாளர் என்றாயினர். என்றெல்லாம் ஆராய்ச்சி நோக்கமின்றி எந்த சாட்சியமும் இல்லாமல் கூறப்பட்டுள் ளது. உண்மையில் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் செந்தமிழ் நாட்டின் பூர்வக்குடிகள், தமிழை தாய் மொழியாக கொண்டவர்களில் தொன்மையானவர்கள். தமிழக மண்ணின் மைந்தர்கள், மரபாளர்கள். இதற்கு வரலாற்று மூலங்களான சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. சங்க கால, இடை கால இலக்கி யங்கள் இலக்கியச் சுவையுடன் உண்மை நிகழ்ச்சிகளை, வரலாற்று உண்மைகளை உள்ளது உள்ளவாறு படம் பிடித்துக்காட்டியுள்ளன. தொல்காப்பியம் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்கிறார்கள். அதில் மக்கள் வாழ்வியலுக்கு இலக்கணம் கூறப்பட்டுள் ளது. அதற்கு இலக்கியமாக திகழ்ந்தவர்கள் வேளாளர்(பிள்ளைமார், முதலியார்)கள் தாம். வேளாளர்  களின் குடியியல், வாழ்வியல், மொழியியல், செல்வாக்கு, அதிகாரம், பண்பாடு, மருத்துவ அடிப்படையிலான சடங் குகள், குணவியல் பண்புகள், ஆகியவற்றை கூறு கின்றன.தொல்காப்பியம் தமிழர்களின்  வரலாற்றைப் பிரதி பலிப்பதாகும். வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்) கள் தொல்காப்பிய காலத்திற்கு பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே பாரம்பரியம்மிக்கவர்களாக, நாகரிக வாழ்விலும் அருளொழுக்கத்திலும் சிறந்தவர்களாக,  தமிழினத்தின் முதன்மையானவர்களாக திகழ்ந்ததனால் வேளாளர்களுக்கு தொல்காப்பியத்தில் முதன்மை ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்)கள் தமிழினத்தின் தொன்மை யானவர்கள் என்பதுடன் முதன்மையானவர்கள் எனவும்  விளங்கும். எனவே பண்டிட் எனும் ஆரிய சாதியினர் தமிழகம் வந்து வேளாளர் என்றாயினர். என்பதும் தமிழகத்தின் பிறபகுதியிலிருந்து தமிழகத்திற்குள் வந்து குடியேறியவர்கள் என்பதும் ஆராய்வு நேக்கமின்றி சொல்லப்படும் பொய்யான செய்திகளாகும். ஏரெழு பதில் வேளாளரை (பிள்ளைமார், முதலியார்) கங்கை குலத்தவர் என கம்பர் குறிப்பிட்டுள்ளாரே என கேள்வி எழும்பலாம். கங்கைகுலத்தவர் என்பது கங்கை நதிகரையில் தோன்றிவளர்ந்தவர்கள் என்றோ கங்கை நதிகரையிலிருந்து வந்தவர்கள் என்றோ பொருள்படாது. வேளாள அரசர்கள் வடக்கே கங்கையாறு பாயும் இடங்களிற் பெருந்தொகையினராகிய தம்மினத்தவர் ஒருபகுதியினரோடு அரணமைத்து அதிகாரம் செலுத்தி வாழ்ந்து வந்தமை பற்றியும் கங்கை மிக புனிதமானதாக கருதப்படுகிறது. வேளாளர்கள் புனிதமானவர்களாகவும், உயர்வானவர்களாக மதிக்கப்பட்டு வந்ததனைப் பற்றியும் கம்பர் வேளாளரை கங்கை குலத்தவர் எனகூறியிருக்கலாம். கங்கை மைந்தர்கள் என்பதனையே கங்கை குலத்தவர் என கம்பர் குறிப்பிட்டுள்ளார்.அன்று இந்தியா முழுவதும் தமிழர்கள் அவர்களுள் தொன்மையானவர்களும்  முதன்மையானவர்களுமான வேளாளர்(பிள்ளைமார், முதலியார்) குலத்தவரைப் பின்தொடர்ந்து அவர்களைச் சார்ந்து இந்தியா முழுவதும் பரவி நாகரிக வாழ்வு வாழ்ந்திருந்தனர் என்பது புலப்படுகிறது. இந்திய நாட்டின் வட எல்லையாய் உள்ள இமயமலைக்கும் வடக்கே நெடுந்தொலைவில்  இருந்த ஆரியர் அந்நாடுகளில் வரவரக்குளிர் மிகுந்து உயிர் வாழ்வதற்கு ஏற்றதன்றாய் மாற அவர்களுட் பலர் தாம் இருந்த இடத்தை விட்டு தெற்கு நோக்கி வந்து இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையிலுள்ள பெலுசித்தானத் தின் வழிபுகுந்து பஞ்சாபிலுள்ள சிந்து நதிகரையிற் குடியேறினார்கள். அப்போது அங்கு அரசாண்ட தமிழர்களான வேளாளர்  (பிள்ளைமார், முதலியார்) குல வேளிர்கள் பல நகரங்கள் அமைத்து வலியக் கோட்டை கள் கட்டி வலிமையும் நாகரிகமும்உடையவர்களாக விளங்கினர். என்பதனை இங்கு குடியேறிய ஆரியரே தம்முடைய ரிக்வேத பாட்டுகளில் கூறியிருக்கின்றனர். ஆய்வுகளும் அவ்வாறே தெளிவுபடுத்தியுள்ளன. மேலும் குடியேறிப் பிழைக்க வந்த ஆரியரை அன்பாக வரவேற்று அவர்கள் இருக்க இடங்கொடுத்து, பலன்பாராது அவர்கள் உண்ணச்சோறும், உடுக்கவுடையும் வழங்கி, நூல்கற்க உதவிகள் புரிந்தும் வந்த தமிழ் நன்மக்களில் முதன்மையானவர்களாக வேளாளர்களுக்கு திரும்ப நன்றி செய்தற்கு மாறாக தீட்டின மரத்திற் கூர்பார்த்த செயலை செய்தனர். இவர்களின் வேண்டுதல் பாட்களாக ரிக்வேதத்தில் வேளாளர்களின் அரச வாழ்வினையும், செல்வாக்கினை, செல்வச்செழிப்பினையும் உயர்வாக மதிக்கப்படுவதனையும் கண்டு பொறாமை கொண்டு வயிற்றெரிச்சலாக வேளாளர்களை பலித்தே இயற்றப்பட்டுள்ளது.பண்டைய நாளிலிருந்தே ஆரியர் முழுமுதற்கடவுளின் (சிவபெருமான்) உண்மையை உணர்ந்தவரல்லஅதனை உணராமையினால் அம்முதற்பொருளை வழிபடுமாறும் உணராது  ஆயினர். தமக்காக தம்பகைவரோடு போர் இயற்றவும், மழை பெய்வித்து தமக்கு உணவுப் பண்டங்களை விளைவித்து தரவும் தம்மால் வல்லவனாக கருதப்பட்ட இந்திரன், வருணன், உள்ளிட்டோரையே பெருங்கடவுள் என்றனர் பெரிதும் வேண்டி வணங்கினர். சோமப்பூண்டின் சாற்றினாற் சமைத்த களிப்பான பானகத்தை (மது) ஆரியர் தெய்வமாக கருதிய இந்திரன், வருணன், மித்திரன் ஆகியோருக்கு பருக கொடுத்தலாலும், ஆடு,மாடு, குதிரை முதலிய விலங்கினங்கினங்களை வெட்டி அவற்றின் இறைச்சியை உணவாகக் கொடுத்துத் தாமும் உண்பதாலும் தாம் இந்நிலவுலகத்திற் பெற வேண்டிய எல்லாச் செல்வங்களை பிழையாமல் எளிதில் பெறலாம். என்று நம்பி வந்தார்கள். இந்நம்பிக்கையாற் சோமபானத்தையும் விலங்கினிறையையும் ஆவியாகக் கொடுக்கும் பொருட்டு அளவிறந்த வேள்விகளையும், வேள்விச்சடங்குகளையும், நாடோறும் பெருக்கி வந்தனர். இக்கொலை வெறி வேள்விகளால் தம்மை தேவர்கள், சுரர், ரிஷிகள் என்று கூறிக்கொண்டனர். வெள்ளாடுக ளும், செம்மறிகிடாய்களும், எருதுகளும், ஆக்களும், குதிரைகளும், ஆரியரால் அளவின்றிக் கொல்லப்பட்டன. தம்மையொத்த மக்களையும் கூட ஆரியர் கொலை புரிந்தனர். கொலை புலை தவித்த அருளொழுக்கத்தில் நிலை பெற்று நிற்கும் வேளாளர்(பிள்ளைமார், முதலி யார்) கள் கொலைபுலை கட்குடி முதலிய தீவினைகளைப் பெருக்கி ஆரியர் கொண்டாடிய வெறியாட்ட வேள்விகளில் மிக வெறுப்பு கொண்டு அவ்வேள்விகளை அழித்தும், இக்கொலை வெறி வேள்விகளை செய்வதனில் முனைப்பாயிருந்த ஆரியர்களை அடக்கி ஒடுக்கினர். இதனால் ஆரியர் பெரிதும் சினம் கொண்டு வேளாளர்(பிள்ளைமார், முதலியார்) களையும் இக்குடியினரான வேளிர் அரசர்களையும் அசுரர், இராஷசர், இராக்கதர், அரக்கர்கள், தாசியர் என்று இகழ்ந்து கூறி வேளாளர்களை தாழ்த்தும் பொருட்டுப் பொய்யான பல புராணக்கதைகளையும் எழுதி வைப்பாராயினர். அத்தோடு மட்டுமல்லாமல் தொன்று தொட்டு வேளாளர்களுக்கு (பிள்ளைமார், முதலியார்) உரித்தான சிவ வழிபாட்டையும் இகழ்ந்துரைத்தனர். அசுரர்கள் வணங்கும் கடவுள் என்றனர்.  இந்திரன், வருணன் உள்ளிட்டோரே பெருங்கடவுள் என்று நம்பியும், பரப்பியும் வந்தனர்.ஆரியர்களின் பொருந்தாச் செயலும், ஆரிய நூட்களின் பொய்மையையும், எல்லோர்க்கும் விளக்க வேண்டி அவர்களுக்குரிய ஆரிய மொழியை தமிழர்களான வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் தாமுங் கற்றுக் கொலை புலை கட்குடி மறுத்த தமதுயர்வை, தாம் வழிபடும் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் அருட்சிறப்பும், அவனையடைவ தற்குரிய  மெய்யுணர்வின் மாட்சியும் தெளித்து வேதப்பாட்டுகள் சிலவும், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், யோகம், வேதாந்தம் முதலிய ஐந்து மெய்யுணர்வு ஆராய்ச்சி  நூல்களும் இதிகாசங்கள், புராணங்கள், சிலவும் இயற்றயிட்டார்கள். (தமிழரும் வேளாளர் குலத்தில் தோன்றியவருமான அகத்திய மகரிஷி வடமொழிகளையும் அறிந்திருந்தார் என்பது இதற்கு சான்றாகும் ) இதனை உணரா ஆரியர் அருட்பெருஞ்ஜோதியான சிவத்தை இகழ்ந்தனர். பிற்காலத்தில் வேளாளர்கள் (பிள்ளைமார்,முதலியார்) இயற்றிய உபநிடதம் நூட்களை தாங்கள் இயற்றிய தாகவும், நாம் கற்று தந்த இறைவழிபாட்டு முறைகளை தங்களுக்குரியது என்றும் கொலை புலை கட்குடி மறுத்த அருளொழுக்கத்தை வேளாளர்களுக்கு ஆரியர்கள் கற்று தந்ததாக கூறிக்கொண்டனர். பண்டைய காலங்களில் வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்) வீட்டில் யாவரும் உணவுண்பர் (பிராமணர்களையும் சேர்ந்து) ஆனால் வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்) கள் தம் குலத்தவர் தவிர யார் வீட்டிலும் உணவுண்ணவோ, நீரோ அருந்தமாட்டார். மேலும் பிராமணர்களை தமது குரவர்களாக கொண்டு சடங்குகள் நடத்துவது தவறானது எனவும் தீட்டு என்றும் தவிர்த்து வந்தனர். ஆரியரின், பிராமணர்களின், வருகைக்கு முன்னரே வேளாளார்(பிள்ளைமார்,முதலியார்)கள் இறைவழி பாட்டு ஆராதனையினை தாங்களே நடத்தி வந்தனர். மேலும் தங்களிலிருந்து ஓர் பிராமண அங்கத்தினரை வகுத்திருந்தனர். இதனை திருஞானசம்பந்தர் திருவாக்கூர் தேவாரத்திருப்பதிகத்தில் குறிப்பிட் டுள்ளார். அவர்களேகுருக்கள், ஆதிசைவர், பட்டர், நம்பியார், வேதியர், என அழைக்கப்படும் வேளாளர் குல அங்கத்தினர். இவர்களில் சிலர் ஆரிய பார்ப்பனர்க ளோடு உறவுகலந்து திரிந்து போயினர். இன்றைய காலங்களில் வேளாளர்களும், பிராமணர்களும்  சம அந்தஸ்துடைய ஒரே சமூக தட்டுமக்களாக காணப்படு கின்றனர்.சிவபெருமானும், திருமாலும் பண்தொட்டுத் தமிழ்மக்களால் வணங்கப்பட்டு வந்த தமிழ் தெய்வங்களாவர் முழுமுதற்கடவுளே தந்தை வடிவிற் சிவபெருமான், தாயுள்ளம் உடையோன் வடிவில் திருமால் எனவும் வைத்து வணங்கப்பட்டது. இவ்விரு தெய்வங்களும் பிறவாதவர், இறவாதவர், இத்தெய் வங்களைவயும் பழைய ஆரியர் சிறிதும் அறியார்.  ஆரியரால் ரிக்வேதத்தில் வணங்கப்பட்ட விஷ்ணுவோ ஆரியர்களின் தலைவனே தவிர உலகங்களைப் படைத்துக் காக்கும் எல்லாவல்ல தாயுள்ளம் கொண்ட திருமால் அல்ல. தமிழர்களின் வழிபாட்டு ஆராதனை யினை ஓரளவு பின்பற்ற ஆரம்பித்த பின்னாளில் ஆரியர் தமிழர்களின் சமய அமைப்புகளிலிருந்து புதிய வகுப்பினை புகுத்தினர் தாயுள்ளம் வடிவாகிய தமிழர்கள் வணங்கிய திருமாலை அவ்வகுப்பின் இறைவனாக கொண்டு  வைணவம் என பெயர்வைத்து   பிற்காலத்தில் தெற்கு நோக்கி நகர்ந்த ஆரியர்கள் தங்கள் கொலை வெறி வேள்விகளை தடுத்து வந்த வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களையும் இக்குடியி னரானவேளிர் அரசர்களையும் எதிர்த்துப் போரிட்ட ஆரிய தலைவர்களை எல்லாம் திருமாலின் பல்வேறு பிறவிகளாகக் கொண்டு பொய்புராணக்கதைகளை வடமொழியில் கற்பணைக் கலந்தெழுதுப் பரப்பினர். இவ்வாறு நூட்களின் வாயிலாக வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களை அசுரர்கள், பயங்கரமானவர்கள் என்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களை  தாழ்த்தியும் பல கயமத்தனத்தை செய்தனர் ஆரியர்கள். கி.பி470 தையடுத்து  தங்களை உயர்நிலைக்குரியவர்களாக கற்பித்து ஆரிய பிராமணர்கள் வைணவம் எனும் புதிய சமய முறை மூலம் அவர்களின் வரணாசிரம தர்மம் கற்பிக்கப்பட்டது. நால்வகை வருண பாகு பாட்டினை புகுத்தினர். ஆனால் இவர்களின் நால்வகை வருணபாகு பட்டிற்குள் வேளாளர்(பிள்ளைமார்,முதலியார்) அடங்கார்.திராவிட நாகரிக தொடக்க காலத்திற்கு முற்பட்டேவேளாளர் (பிள்ளைமார், முதலியார்) குலத்தவர் எனத் தங்களை தனித்துக் குறிப்பிட்டும், பிறராலும் அவ்வாறே அடையாளம் காணப்பட்டு வந்துள்ள வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் மனுநூல் கூறும் நால்வகை வருணப்பாகுப்பாட்டின் வகைப்பாடுகளுக்குள் அடங்கார். சூத்திரர்கள் அல்ல வேளாளர்கள் மேலானோர்கள் ஆவர். ஆனால்எந்த சாட்சியமும் இல்லாது 19 நூற்றாண்டு இறுதியில் நீண்ட நெடிய பாரம்பரியமிக்க  வரலாறும் பண்பாடும் உடையவர்களான வேளாளர்களை இழிவுப் படுத்தும் நோக்கிலும், உயர்குடியான வேளாளர்களின் நிலைக்கு தங்கள் சமுதாய அந்தஸ்தினை மிகைபடுத்தி, தமிழகத்தின்  முதன் மக்கள் அவர்கள் தான் என யாவரும் கொள்ள வேண்டுமென்ற சாதிய உணர்வினில் கள்ளர், மரவன்(பிற்கால திரிபு மறவன்) கணத்தொரு அகமுடையார்(அகம்படியார்) பின் மெல்ல மெல்ல பிள்ளை என முக்குலத்து மக்களில் சிலர் கூறினர். அவர்களில் சிலர் அவ்வாறு  எழுதியும் வந்தனர். அதாவது மெல்ல மெல்ல தமிழகம் வந்தவர்கள், முக்குலத்து சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என இருவேறாக கூறினர். இதனை தற்சமயம் நவீனப் படுத்தி மெல்ல மெல்ல வேளாளர், வெள்ளாளர் என்கின்றனர். முதலில் பிள்ளை என்பதனை சாதி பெயர் என அவர்கள்  நினைத்திருக்கலாம். இது கல்வெட்டுகளிலோ, பட்டயங் களிலோ, முக்கால இலக்கியங்களிலோ, காணப்பட வில்லை. மேலும் இதனை கம்பர் கூறினாரா, திருவள்ளுவர் கூறினாரா, அல்லது  கபிலர் கூறி யிருக்கிறாரா. இல்லவே இல்லை. அச்சமுதாய மக்களில் சிலர் மாத்திரம்  தமிழக சாதிய அமைப்பு இப்படி தான் என அவர்களாக நினைத்துக் கொண்டு சொல்லியும் எழுதியும் வந்தனர்.இவ்வாறு கூறிவருகின்றனர்.  இது வேளாளர் அடக்கு முறைச் சட்டம் செயல்படுத் தப்பட்டிருந்த காலத்தில் நிகழ்ந்தது. எனவே இம்மடமை பேச்சுகளுக்கு சாதிய வெறியாளர்களின் பொய்யான கூற்றுகளுக்கு செவி சாய்க்க வேண்டாம். முக்குலத்தோருக்கும், வேளாளர்களுக்கும் தமிழினத் தவர் என்பதனை தவிர வேறு சாதிய ரீதியான தொடர்புகள் ஏதுமில்லை. சங்க காலம் முதற்கொண்டு முதற்குடியாக உயர்குடியாக காணப்படுபவர்கள் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள்,  அவர்கள் கடைச்சாதியாளராக காணப்பட்டவர்கள் என்பதனை நினைவில் கொள்க.சேர்வை என்பதற்கு வேலை செய்வோன், சேவை புரிபவன், சேர்வைகாரன் என்றால் தொண்டூழியம் புரிபவர்கள், சிப்பாயாக காவல் பணி புரிபவர்கள். என்றும் இவ்விரண்டிற்கும் கடைநிலை ஊழியர் என்று அபிதான சிந்தாமணி அர்த்தம் சொல்கிறது. பல வரலாற்று இதனை தெளிவுப்படுத்துகிறது. மேலும் இவையாவும் சிறப்பு பட்டம் இதனை இடையர், வலையர், வன்னியர், முக்குலத்தோரில்சிலரும், இப்பட்டம் பெற்றவர்களும் அகமுடையார்(அகம்படியார்) ஆவர். அகமுடையார் என்பதும் ஒருசிறப்பு பெயர் அரண்மனை பணிக்காரன், அரண்மனை பணியினைச் சாந்தவர்கள் என்பதே அதன் பொருள். இதனை தலைமை தளபதி, அமைச்சர், சேனாதிபதி, தலைமை கணக்கர், நிதிய மைச்சர், நீதிபதி, சேணைத்தலைவர், தலைமை காவலர் போன்ற உயர் பதவிகள்வகித்த வேளாளர்(பிள்ளைமார், முதலியார்) பிறபணியிலிருந்த உடையார், நாயக்கர், ரெட்டியார், உள்ளிட்டோரும் அகமுடையார் (பட்டம்) சிறப்பு பெயர் உடையவர்கள். இன்று அகமுடையார் என்பது சாதிய பெயராக உருவெடுத்து முக்குலத்தினை சார்ந்த ஒரு பிரிவினராக அடையாளம் காணப்படுகிறது இவர்களுக்கு வேறு ஏதேனும் காரணமாக கூட அகமுடையார் என வழங்கப்படலாம். ஆனால் இச்சிறப்பு பெயர் (பட்டம்) கொண்ட மற்றோர் தத்தம் குலப்பெய ருடன் அகமுடையார் என சேர்த்து  பயன்படுத்தினர். வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் வெறும் அகமுடையார் என்று பயன்படுத்துவது முறையற்றது எனவும் பிழை எனவும் உணர்ந்து உயர்குடியாக காணப்படும் வேளாளர் எனும் தம் குலப்பெயருடன் சேர்த்து அகமுடைய வேளாளர் என்று பயன்படுத்தினர். ஆனால் தற்சமயம் அகமுடைய முதலியார், அகமுடைய பிள்ளை என்று பயன்படுத்திவருகின்றனர் இவர்கள் வேளாளர்கள். அகமுடையார் சேர்வை முக்குலத்தினர் எனவே அகமுடையார் சேர்வை வேறு அகமுடையவேளாளர் (பிள்ளைமார், முதலியார்) வேறு எனவே இவர்களுக்குள் சாதிய ரீதியான எந்தவித தொடர்போ, உறவோ கிடையாது. வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் இதனை குழப்பிக்கொள்ள வேண்டாம்.அகமுடையார் சேர்வை சமுதாயத்தினர் சிலர் தங்களின் சுயநலத்திற்காக சாதிய அரசியல் ஆதாயம் தேடி வேளாளர் சமுதாயத்திற்குள் குளறுபிடியை ஏற்படுத்தி வருவதும், முக்குலத்திலிருந்து தங்களை தனித்து காட்டிக் கொள்ள முனைந்து தங்களின் எண்ணிக்கையை அதிகப்படியாக காட்டிக் கொள்ள நீண்ட நெடும்பாரம்பரிய வரலாறும் பண்பாடு மிக்க உயர்குடியான வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) பேரினத்தவர்களை தங்களது உயர்குலப் பெயரான வேளாளர், வெள்ளாளர் என்பதனை துறந்து அகமுடையார் சேர்வை என பயன்படுத்துங்கள் என்று முறையற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோரின் செயல்  பாடுகள் கண்டிக்கதக்கது. சங்க காலம் முன்தொட்டே முதற்குடியாக, உயர்குடியாக காணப்பட்டு வரும் வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்)கள் கடைச்சாதி யாளராக காணப்பட்ட சமுதாயத்தினராக இருக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறாக தன்னை தாழ்த்திக் கொள்ளவும் மாட்டார்கள் இவ்வுயர்குடிமக்கள்.மேலும் முக்குலத்தவர்களில் சிலர் முற்பட்ட உயர்குடியான  வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களை சூத்திரர்கள் என உண்மைக்கு புறம்பாக கூறியும், எழுதியும், இணையதள பக்கங்களில் உலவவிட்டிருப்பதும் கண்டிக்கதக்கது. வேளாளர்கள் சூத்திரர்கள் அல்ல என்பதுடன் நால்வகை வருணபாகுபட்டின் வகைப்பாட்டு களுக்குள் அடாங்கார். என்பதனையும்  தமிழினத்தின் பழைய ஷத்திரிய வகுப்பினர் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் என்பதனையும் பல வரலாற்று ஆய்வா ளர்கள், தக்க ஆதரங்களுடன் கூறியுள்ளனர். இதனை முன்னரே நாம் கூறியுள்ளோம். வேளாளர்களை விவரமறியாது சூத்திரர் என கூறி, எழுதிவரும் அவர்கள் சத்திரியர் அல்ல அவர்கள் சூத்திரர்களாகவே குறிக்கப்பட்டிருக்கின்றனர். சூத்திரர்களின் கடவுளான  இந்திரனை, மன்மதனை வழிபடுமாறும் பணிக்கப் பட்டனர். ஆனால் வேளாளர்கள் இந்திர வழிபாடு மேற்கொண்டவரல்ல. சைவ சமய கோட்பாட்டினையும் சிவவழிபாட்டினை பரப்பியவர்கள், சிவவழிபாட்டினை மேற்கொண்ட மேன்மக்கள்.  இதுயார் மனதையும் புண்படுத்துவதற்காகவோ, பிற சமுதாயத்தினை இழிவுப்படுத்தும் நோக்கிலோ இதனை குறிப்பிட வில்லை. அந்த எண்ணமும் எங்களுக்கில்லை. தமிழர் என்ற முறையிலும் இந்தியர் என்ற முறையிலும் யாவருடனும் ஒற்றுமையுடன் சகோதரபண்புடன் திகழ்வதில் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் முன்னிருப்பர் என்பதனை நாடே அறியும். ஆனால் வேளாளருக்குள் குளறுபிடியை ஏற்படுத்தி இலாபம் அடைய நினைப்பவர்களும், வேளாளர்களை இழிவுப் படுத்தும் நோக்கிலும், அவர்தம் நீண்ட நெடிய பாரம்பரிய வரலாற்றை, குல பெயரை கலவாட நினைக்கும் கயவர்களும் கட்டவிழ்த்து விட்ட ஆதாரமற்ற பொய்வாக் கியங்களை வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்)கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

13 Comments

 1. சக்திவேல்சிங்காரம்பிள்ளை

  வெ ள்ளாலர் பற்றிய தகவல்மேலும் பலர் அறியஉதவியாக உள்ளது நன்றி

  Reply
  1. admin (Post author)

   உங்கள் அதரவு எப்போதும் தேவை

   Reply
 2. குமார்

  அருமை ஐயா என்போன்ற இளையதலைமுறைக்கு நம் இனத்தைப் பற்றி அறிந்து கொள்ள பேருதவியாக உள்ளது தங்களின் இக்கட்டுரை.

  Reply
 3. Johnson Christuraj

  It is rally very good information to know more about Vellaler.
  Good work!

  Reply
 4. நரேன்

  என் இனத்தின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இணையத்தில் தேடிப்பின் கண்டேன் தங்கள் பதிவு மிக அருமையாக கூறியுள்ளீர். என் இனம் நினைக்கையில் பெருமை கொள்கிறது மனம்.

  Reply
 5. Kru

  கெடிக்கால் வேளாளர்கள் , மூப்பனார் என்று அழைக்கபடும் சேனைத்தலைவர் சாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் உயர்வு வேண்டி பிள்ளை என்றும்(தேனி வட்டத்தில்), முதலியார் என்றும்(செங்கோட்டை வட்டத்தில்) பேட்டுக்கொள்கின்றனர். இவர்களுக்குப்

  Reply
 6. Kru

  கெடிக்கால் வேளாளர்கள் இலை வாணியர் என்று பழைய நூல்கள் கூறுகின்றன .இவர்கள் எண்ணெய் வாணியம் செய்யும் வாணிய செட்டியாருடன் தொடர்புப்படுத்துவதே சரி. இவர்களுக்கும் ஜாதி வெள்ளாளர்களுக்கும் எந்த தொடர்பு ம் கிடையாது.

  Reply
 7. விசுவநாதன்

  சேனைத்தலைவர் வேளாளர் என்று 17 நூற்றாண்டுவரை இவர்கள் குலப்பெயருள்ளது இவர்கள் வேளாண்குடி போர்த்தளபதிகளாகிய பின்பே சேனைத்தலைவரானர்

  Reply
 8. Indumathi

  துளுவவெள்ளாளர் அசைவம் சாப்பிடுவார்களா?

  Reply
  1. admin (Post author)

   சாப்பிடுவார்கள், சைவ வெள்ளாளர் மட்டுமே புலால் உண்ண மாட்டார்கள்

   Reply
  2. Bala

   துளுவ வெள்ளாளா் பிள்ளைமாா் கிடையாது

   Reply
 9. Sannyric

  Make a more new posts please 🙂
  ___
  Sanny

  Reply
 10. தமிழன்

  துளுவ வேளாளர் தமிழர் தானே

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

 php shell indir