வேளாண்மாந்தரும் அரசர் ஆகலாம்… அரசரும் வேளாண்மாந்தர் ஆகலாம்…
– தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை / லக்ஷணத்தை விளக்கும் புறத்திணையியல் (புற வாழ்வு மரபு உரைக்கும் பகுதி) 2 ஆம் சூத்திரம், பொருளதிகாரம், தொல்காப்பியம்…
_ _ _
தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் 2 ஆம் சூத்திர உரையில் 1000 வருஷங்களுக்கு முன்னர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த உரையாசிரியரான இளம்பூரணர் வெட்சித்திணைக்கான ஒரு சூத்திரம் கூறுகிறார்…
ஆநிரைகளை கவரும் வெட்சிக்கு வேந்தர் ஏவும் சாராரில் நால் வருணத்தாரிலும் எவரும் (வேந்தனாற்) சிறப்பு பெற்றால் அரசர் ஆகலாம், அப்படி ஆனவர்கள் மாற்றரசரை வென்று திரை கொள்ளலாம் என்றும், ஆநிரை கவரலாம் என்றும் கூறுகிறார் இளம்பூரணர்…
ஆக அரசரல்லாத வாணிகரும் வேளாண் மாந்தரும் மன்னராற் சிறப்பு பெற்று அரசர் ஆகலாம் என்பது தெளிகிறது…
மன்னனால் பெரும் சிறப்புகள் என்பன மாராயம், காவிதி – ஏனாதி பட்டங்கள் & ஊர், நாடு முதலியன எனவும் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் புறத்திணையியல் 7 ஆம் சூத்திரத்திற்கு உரை எழுதுகிறார்…
அதாவது வேந்தனால் செய்யப்படும் சிறப்பு என்பது ஊர் நாடு முதலியவற்றில் அரசாளும் உரிமை என தெரிய வருகிறது… இதற்கு காணி பெறுதல் என்றும் பெயர் என நடைமுறையில் இருந்த வரலாறு கூறுகிறது…
மேலும் வேளிர்கள் வீழ்குடி ஆகும்போது வேளாளர் ஆகிறார்கள் என்று, பட்டினப்பாலைக்கு நச்சினார்க்கினியர் பல்ஒளியர்க்கு ஆண்ட உரையால் தெரிய வருகிறது…
ஆக அரசரும் வேளாளர் ஆகலாம் & வேளாண் மாந்தரும் அரசர் ஆகலாம் என்றும், இவை அதிசயமன்று எனவும், இதுதான் தமிழர் வரலாறு என்றும் தெரியவருகிறது…
மேலும் அந்தணர், அரசர், வணிகர், வேளாண் மாந்தர் என்ற நாற்பால் தான் பிராமண க்ஷத்ரிய வைஷ்ய சூத்திர வருணங்கள் என்றால், தெளிவாக அரசனால் சிறப்பு பெற்ற சூத்திரரும் க்ஷத்ரியரே என்றும், வீழ்குடி ஆன க்ஷத்ரியரும் சூத்திரரே என்றும் தான் தமிழ் இலக்கணமே உள்ளது என்பதும் தெளிவு…
மேலும், அந்தணர் அரசர் வணிகர் வேளாண்மாந்தர் என்பன வெறும் வருண பேதமையே ஒழிய குடிபேதம் அன்று எனவும் தெளிவாக பெறப்படும்…
இன்றைக்கு வேளாளராக இருக்கும் சாதியினர்கள் சங்க காலத்தில் அரசர்களாகவும் இருந்திருப்பர்கள்… சங்க காலத்தில் வேளாளர்களாக இருந்த பலர் இன்று அரசர்களாகவும் இருப்பார்கள்… அதுதான் வரலாறு…
சில வரலாற்று தரவுகளில் ஏன் வேளிர் வேளாளர் பிரித்து காட்டப்பட்டுள்ளனர் என வைக்கப்படும் கேள்விக்கு இதுவே பதில்… பெயரிலேயே வேள் ஆளர் என்று தான் உள்ளது… வேளிர் வம்சத்தவர்கள் வீழ்ந்த போது வேளாளர் என்றும், பிறகு மீண்டெழுந்த போதும் வேளாளர் என்ற பெயரே தொடர்ந்து என்பதும் கண்கூடு… இவர்களில் ஊராளும் & நாடாளும் வேளாளர் அரசரே எனவும், வருணத்தாலும் அரசரே எனவும் மேற்கண்ட இளம்பூரணர் & நச்சினார்க்கினியர் உரைகள் தெளிவாக எடுத்துரைக்கிறது சிறப்பாகும்…
கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர்
கொங்கு வேளாளர்
ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர்
மேலும் தொடர்புக்கு :
ஒட்டப்பிடாரம்
சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை
9629908758