பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை

தேனி மாவட்டம் மட்டுமல்ல தென்மாவட்டத்திற்காக கட்டப்பட்ட முல்லைபெரியார் அணை இருக்கும் இடத்தை ஆராய்ந்து இவ்விடத்தில் அணை கட்டினால் தென் மாவட்டங்கள் வளம் பெறும் என ஆலோசனை வழங்கி அணை கட்ட முயற்சி எடுத்தவர் மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை ஆவார்.அவருடைய புகைப்படங்கள் கிடைக்கவில்லை.



 

இன்று தென் தமிழ்நாட்டு மக்களின் பசிபோக்கும் உயிர் காக்கும் தண்ணீராக விளங்குவது முல்லைப் பெரியார் அணையாகும்.இந்த அணை உருவாவதற்கு 1789ம் ஆண்டே திட்டம் தீட்டியவர்  இராமநாதபுரம் சேதுபதியின் மந்திரி ,நமது வெள்ளாளர்  இனத் தோன்றல் முத்து இருளப்ப பிள்ளை ஆவார்கள்.

வேளான் குடிகளுக்கு மட்டுமே விவசாயத்தை பற்றி எந்நேரமும் சிந்தித்து கொண்டு இருப்பார்கள்.

ராமநாதபுர சமஸ்தானத்தில் திவானாக பணியாற்றிய முத்து இருளப்ப பிள்ளை வெள்ளாளர் இனத்தில் பிறந்தார். இவருடைய சிந்தனையில் 1789-ம் ஆண்டு இங்கு அணை கட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

தென் தமிழகத்தில், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களின் வீடு முழுக்க நிறைந்திருந்தது பட்டினியும் வறுமையும்தான். ஆடைக்கும் கோடைக்கும் வாடாத பனை மரங்களேஅசந்துவிட்டன. அப்பகுதி மக்களின் ஒரே நீராதாரமாய் இருந்த வைகையிலும் வருடத்துக்கு மூன்று மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். அதுவும் நிலையில்லாதது. தண்ணீரைப் பகிர்வதில் சிவகங்கைக்கும், ராமநாதபுர சமஸ்தானத்துக்கும் தகராறுகள் நடந்து மக்களை மேலும் சோதித்தது.

அதேவேளையில் பெரிய அளவில் விவசாயம் இல்லாத திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு, மேற்கு மலையில் உருவான ஆறுகள் மூலம் கடல் வணிகம் கைகொடுத்தது.இதை நன்கு அறிந்திருந்த முத்து இருளப்ப பிள்ளையின் மனதில் மேற்கே உருவாகி வீணாக கடலில் கலக்கும் ஆற்றினை கிழக்கே திருப்பி வைகையோடு இணைத்தால் வேளாண்மை பெருகும் அதோடு மக்களின் பசிப்பிணியும் நீங்கும் என்ற யோசனை உதித்தது.

உடன் இந்த யோசனையை சேதுபதியிடம் தெரிவித்தார் மந்திரி முத்து இருளப்ப பிள்ளை.இதைக் கேட்டவுடன் தன் சமஸ்தானத்தின் நீண்ட நாளைய பிரச்சனைக்கு தீர்வு கண்டுப்பிடிக்கப்பட்டதை உணர்ந்த மன்னர் தனது அமைச்சரான முத்து இருளப்ப பிள்ளையோடு ஒரு குழுவினை அனுப்பி  முழு விவரம் அறிந்துவரச் சொன்னான்.


அதுவரை மனித காலடிகளே படாத, சூரிய கதிர்களே உட்புக முடியாத, மிகப்பெரிய ராணுவம்போல அணிவகுத்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் உதவியாளர்களோடு சென்ற முத்து இருளப்ப பிள்ளை, சொல்லெண்ணாத் துயரத்துக்கும் விஷக்கடிகளுக்கும் இடையே, அங்கிருந்த ஆறுகளின் ஊற்றுகளைத் தேடினார். அவற்றை தன் கற்பனை திறனுக்குள் கொண்டுவந்து  முல்லை ஆறு,பெரியாறு ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரு அணைகட்டிட திட்டம் வகுக்க கட்டுமானத்துக்கான சாத்தியங்களை வழிவகுத்தார்.

அந்த மகிழ்ச்சியோடு மன்னனிடம் வந்தார். அங்கேதான் விதி விளையாடியது. ஏற்கெனவே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமஸ்தானத்துக்குப் புதிதாக அணைகட்ட போதுமான நிதி இல்லை என்பதால், இருளப்ப பிள்ளையின் திட்டம் கைவிடப்பட்டது. அவருடைய உழைப்பும் வீணானது. அதற்கடுத்த வருடங்களில் மீண்டெழுந்த தாது வருடப் பஞ்சமும் மக்களை மேலும் இம்சித்தது

மீண்டும் கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழித்து ஆங்கில ராணுவ பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் தலைமையில் முயற்சி செய்து 1896 ஆம் ஆண்டு கட்டி முடித்தார் என்பது வரலாறு.

இவ்வாறு முல்லைப் பெரியார் அணை உருவாவதற்கு 1789ம் ஆண்டே திட்டம் வகுத்த முத்து இருளப்ப பிள்ளை வெள்ளாளர் இனத்தைச் சார்ந்தவர் என்பது வெள்ளாளர் அனைவரும்  பெருமைப்பட வேண்டிய விடயம் ஆகும்.

இவருடைய சமாதி இராமநாதபுரம் நீலகண்டி ஊரணியின் வடகரையில் இடிந்த நிலையில் சிறிய கோவில் போல உள்ளது.

இவரின் சமாதி தற்போது பாராமரிப்பின்றி உள்ளதாகவும், இவரின் வாரிசுகள் இச்சமாதி ஆலயத்தை புதுப்பிக்க விரும்புகிறார்கள் என்பது நமக்கு தெரியவரும் செய்தி!

பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த முத்து இருளப்ப பிள்ளை மன்னர் சேதுபதியின் அமைச்சர் அவர்களுக்கு முதல் வணக்கம், கர்னல் பென்னிகுக் அவர்கள் அணை கட்ட அடிப்படை திட்டம்  முத்து இருளப்ப பிள்ளை அவர்களுடையது .இருந்தலூம் நம் அனைத்து மக்களுக்காக அவருடைய சொத்துகள் அனைத்தையும் விற்று நமக்கு அணை கட்டி தந்த கர்னல் பென்னிகுக் அவர்கள்  உணமையில்  மனித கடவுள் தான்.

 


தென்மாவட்ட மக்களுக்காக முல்லை பெரியார் அனைகட்டிய எம் மக்களின் கடவுள் கர்னல்.ஜான் பென்னிகுக் அவர்களின் வாரிசு Dr.டயானா ஜிப் அவர்கள் தமிழக மக்களை சந்திக்க வந்த போது எடுத்த படம்

 

1 Comment

  1. Siva

    பிள்ளை என்ற பட்டம் வந்தாலே அது வெள்ளாளர் என அர்த்தமா???
    அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த முத்து இருளப்பன் பிள்ளையே வெள்ளாளர் என்று எந்தவொரு சான்றும் இல்லாமல் சொன்னால் எப்படி??

    இராமநாதபுரம் ஜெகன் தியேட்டர் உரிமையாளர் முத்து இருளப்பன் பிள்ளை வாரிசு தான்.
    வேண்டுமென்றால் விசாரித்து கொள்ளுங்கள்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *