தமிழகத்தில் உள்ள சுத்த சைவ ஆதீனங்கள்

தமிழகத்தில் சைவநெறியும், செந்தமிழையும் புரந்தருள செய்து சைவ சமய பரிபாலனங்களையும் செவ்வனே சிறப்பாக செய்து வரும் சுத்த சைவ ஆதீனங்கள் 18 ஆகும். அந்த ஆதீனங்களின் குருபரம்பரை கயிலையில் இருந்து துவங்கியதால் அவற்றிற்க்கு “திருக்கயிலாய பரம்பரை” என்ற பட்டமும் உண்டு.

1) திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம்.

2) திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம்

3) திருக்கயிலாய பரம்பரை காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம்.

4) திருக்கயிலாய பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம்.

5) திருக்கயிலாய பரம்பரை ஆகம சிவப்பிரகாச ஆதீனம் (சிதம்பரம்)

6) திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் (பெருங்குளம்)

7) திருக்கயிலாய பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் (மதுரை)

8) திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் (குன்றக்குடி)

9) திருக்கயிலாய பரம்பரை இராமேஸ்வரம் ஆதீனம்

10) திருக்கயிலாய பரம்பரை நீலப்பாடி ஆதீனம் (திருவாரூர்)

11) திருக்கயிலாய பரம்பரை தாயுமான சுவாமிகள் ஆதீனம் (அன்னப்பன்பேட்டை)

12) திருக்கயிலாய பரம்பரை சாரமாமுனிவர் ஆதீனம்

13) திருக்கயிலாய பரம்பரை சொர்க்கபுர ஆதீனம்.

14) திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம்.

15) திருக்கயிலாய பரம்பரை சீர்காழி ஆதீனம்.

16) திருக்கயிலாய பரம்பரை வரணியாதீனம்.

17) திருக்கயிலாய பரம்பரை நாச்சியார் கோவில் ஆதீனம்.

18) திருக்கயிலாய பரம்பரை துழாவூர் ஆதீனம்.

மேற்கண்ட 18 ஆதீனங்களில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம், திருக்கயிலாய பரம்பரை நாச்சியார் கோவில் ஆதீனம், திருக்கயிலாய பரம்பரை துழாவூர் ஆதீனம் ஆகியவை கிரஹஸ்த ஆதீனங்கள் ஆகும்.
மேற்கண்ட 18 ஆதீனங்களில் திருக்கயிலாய பரம்பரை நீலப்பாடி ஆதீனம், திருக்கயிலாய பரம்பரை சிவப்பிரகாச ஆதீனம், திருக்கயிலாய பரம்பரை சீர்காழி ஆதீனம், திருக்கயிலாய பரம்பரை இராமேஸ்வர ஆதீனம் ஆகிய நான்கு ஆதீனங்கள் தற்போது ஆதீனகர்த்தர்கள் இன்றி செயல்பாடு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் : சைவன் ஆத்தூர் மைனர் சுந்தர் பிள்ளை 

மேலும் தொடர்புக்கு : சைவன் ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *