சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* :

சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி என்றாலே அசிங்கம் என தவறான புரிதலை கொண்டு இருப்போருக்கு இந்த பதிவு!

தனிமனித வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி, அந்த தனிமனிதன் வாழ்க்கையில் உயர,அந்த தனிமனிதன் துன்பத்தில் கஷ்டப்படும் போது அரசாங்கமே கண்டு கொள்ளாது ஆனால் ஓடி வந்து உதவுவது சாதி சங்கங்களே!

1.தேசத்திற்கான தலைவர்கள் சாதி தலைவர்களாக போற்றப்படவில்லையெனில் அந்த தலைவர்களை இந்த தமிழகம்,இந்திய தேசம் மறந்து இருக்கும்,தேசத்தலைவர்களை உலகத்திற்கு வெளிகொண்டு வந்தது சாதி அமைப்புகள்


2.குறு,சிறு நகரங்களை விட அதிக தொலைவில் இருந்த கிராமங்களுக்கு பேருந்து வசதி வேண்டி போராடியது சாதி அமைப்புகள் , இந்த பின்தங்கிய கிராமங்களுக்காக எந்த அரசியல் கட்சி போராட முன்வரவில்லை Including கம்யூனிஸ்ட்கள் கூட

எ.கா : தென்மாவட்டங்களில் பள்ளர்கள் அதிகம் வசிக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதி வேண்டி  புதிய தமிழகம் கட்சி,ஜான்பாண்டியன் கட்சி ஆகிய சாதி கட்சியினர் தான் போராடி பெற்றனர்! 

முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் ஊர்களில் பேருந்து வசதி வேண்டி தேவர் சாதி அமைப்புகள் தான் போராடி பெற்றனர் 

அதே போல் 

நாயக்கர்களுக்கான சாதி அமைப்புகள்

ரெட்டியார்களுக்கான சாதி அமைப்புகள்

பறையர்களுக்கான சாதி அமைப்புகள் 

எல்லாம் என்னுடைய பக்கத்து பக்கத்து கிராமங்களில் நடந்த உண்மை சம்பவங்கள் ஆகும்! 

3.சாதி தலைவர்களாக உருமாற்றப்பட்ட தேசியதலைவர்களின் பிறந்த நாள், குருபூஜைகளில் (நினைவு நாள்) இரத்த தானம் வழங்கப்பட்டது அதிகளவில்

எ.கா : வெள்ளாளரான வ.உ.சி பிறந்த நாளுக்கு அதிகளவில் இரத்த தானம் கொடுக்கப்பட்டது

4. தமிழக அரசு மூலம் பின்தங்கிய பகுதிகளில் பள்ளிகூடங்கள் கட்டக்கூட வக்கில்லை, ஆனால் சாதி சங்கங்கள் ஓடி ஓடி துவக்க பள்ளி,நடுநிலைபள்ளி,உயர்நிலை பள்ளி,மேல்பள்ளிகளை திறந்தனர் ! சாதி பெயரில் துவக்கப்பட்ட பள்ளி என்றாலும் அனைத்து சாதி மாணவர்களும் அந்த பள்ளியில் பயின்றனர்,பயின்று வருகின்றனர்!

எ.கா: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆயிரவைசிய பள்ளி,விஸ்வகர்மா பள்ளி,நாடார் பள்ளி,

இன்னும் ஏராளமாக பல்வேறு நாடார் பள்ளிகள்,வெள்ளாளர் பள்ளிகள்,வன்னியர் பள்ளிக்கூடங்கள்,செட்டியார் பள்ளிக்கூடங்கள்,நாயுடு – நாயக்கர் பள்ளிக்கூடங்கள் உள்ளது

5.பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயில கல்லூரி செல்ல முடியாமல் திணறிய போது இதே சமூகநீதி புரட்சி புண்ணாக்கு திராவிட கட்சிகள் கண்டுகொள்ளாத போது,கம்யூனிஸ்ட்கள் கண்டு கொள்ளாத போது,பெரியார் கோஷ்டிகள் கண்டுகொள்ளாத போது சாதி பெயரிலே பல கல்லூரிகளை திறந்தனர் சாதி சங்கங்கள்! இந்த சாதி கல்லூரிகளிலும் குறைந்த கட்டணத்தில் அனைத்து மாணவர்களும் படிக்கின்றனர்

எ.கா: தூத்துக்குடி காமராஜர் கல்லூரி,தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி,சாத்தூர் S.ராமசாமி நாயுடு Memorial College,மதுரை யாதவா கல்லூரி


5.தேசிய தலைவர்கள் சாதி தலைவர்களானாலும் அவர்களின் பிறந்த நாள், நினைவு நாளுக்கு பல்வேறு சாதி அமைப்புகள்,சாதி சங்கங்கள் முதியோர் இல்லங்கள்,அனாதை ஆசிரமம்,மாற்று திறனாளி (ஊனமுற்றோர்) இல்லங்களுக்கு அன்னதானம் வழங்கின!

எ.கா : வெள்ளாளர் வ.உ.சி பெயரில் இயங்கிய சாதி அமைப்புகள்

6.வருடந்தோறும் அவரவர் சாதிக்குள் பத்தாவது,+2 வில் அதிகபெண் எடுக்கும் மாணவர்,மாணவர்களுக்கு ஊக்கத்தொகைகள், உதவித்தொகைகள் வழங்கின! இந்த மாதிரி ஊக்கதொகைகள் அந்த மாணவர்களின் மேல்நிலை கல்விக்கு கல்வி கட்டணம் செலுத்த உதவியது!

எ.கா: இதனை அனைத்து சாதி சங்கங்களும் செய்கின்றனர்!


7. பத்தாவது முடித்து விட்டு, +2 முடித்து விட்டு கல்லூரி செல்ல முடியாத மாணவர்கள்,கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள்,மாற்று திறனாளி மாணவர்கள்,பெற்றோரில் யாராவது ஒருவர் இல்லாத மாணவர்களுக்கு கல்வி கட்டணம்,விடுதி கட்டணம் செலுத்தி மேல்நிலை கல்விக்கு உதவி வருகிறது சாதி சங்கங்கள்!

எ.கா : இதை எல்லா சாதி சங்கங்களும் செய்கின்றனர்

8.பெண்கள் வயதிற்கு வரும் போது சடங்கு நடத்த,திருமணம் நடத்த,நிச்சயதார்த்தம் நடத்த என பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடத்த அரசு சமூக நலக்கூடங்களை ஏற்படுத்தும் முன்னரே சாதி சங்கங்கள் திருமண மண்டபங்களை ஏற்படுத்தியது,அவர் அவர் சாதிக்கு குறைந்த கட்டணத்தில் வாடகை விட்டது, கஷ்டப்படுவோருக்கு வாடகை கட்டணமே கிடையாது!

எ.கா: தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு எதிராக செல்லும் தெருவில் உள்ள நாடார் மண்டபம்,தூத்துக்குடியில் உள்ள சைவ வேளாளர்கள் திருமண மண்டபம்,கோவில்பட்டியிர் உள்ள சைவ செட்டியார் மஹால் என தமிழ்நாடு முழுக்க சாதி பெயரில் திருமண மண்டபங்கள் உள்ளது

9.அவரவர் சாதியில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் பல்வேறு இந்திய நகரங்களுக்கு விளையாட செல்லும் போதும்,உலகில் பல்வேறு நாடுகளுக்கு சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் போது அந்த விளையாட்டு வீரர்களுக்கு பயண செலவுக்கு,உணவு செலவுகளுக்கு உதவித்தொகை வழங்கி உதவுகிறது சாதி சங்கங்கள்!

10.தங்களது சாதியினர் தொழில், வணிகத்தில் வளர்ந்து பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வட்டியில்லா கடன்களை தங்கள் சாதியினருக்கு வழங்கின! அரசு கூட இதை செய்ய முடியாது

எ.கா : கொங்கு வெள்ளாளர்கள், மார்வாடிகள்,நாடார்கள்,நாட்டுக்கோட்டை செட்டியார், வெள்ளாள பிள்ளைமார்கள்

11.கணவனை இழந்த கைப்பெண்கள், கணவன் மாற்றுதிறனாளியாக உள்ள பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கி வருகிறது சாதி சங்கங்கள்! அவர்கள் தொழில் தொடங்க உதவுகிறது!

12.அப்பா இல்லாத திருமணம் செய்யவே கஷ்டப்படும் இளம்பெண்களுக்கு சீர்வரிசை கொடுத்து திருமணம் நடத்தி வைக்கின்றர் சாதி சங்கங்கள்!

13.சென்னை,பெங்களூரு,மும்பையில்,இன்னும் பல்வேறு நகரங்களில் தங்கி அரசு வேலைக்கு படிக்கும் மாணவர்கள்,வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதி, உணவு வசதி செய்து கொடுக்கிறது சாதி சங்கங்கள்!

எ.கா : எனக்கு தெரிந்த நேரில் சென்று நான் பார்த்த மும்பை வாழ் தூத்துக்குடி நாடார் மகிமை சங்கம்,மும்பை வாழ் தமிழ்நாடு ரெட்டியார் சங்கம் , சென்னையில் உள்ள வன்னியர் சங்க கட்டிடம்

14.அவரவர் சாதியில் ஒருவர் இறந்தாலும் ஈமச்சடங்கு செய்ய கூட முடியாத குடும்பங்களுக்கு ஈமச்சடங்கு செலவு கூட ஏற்று நடத்துகிறது சாதி சங்கங்கள்!

15.அவரவர் சாதியினருக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி கொடுக்கிறது சாதி அமைப்புகள்! சில சாதிகள் தங்கள் சொந்த பணத்தை போட்டு வாங்கிய ஆம்புலன்ஸை மற்ற சாதியில் கஷ்டப்படுவோருக்கும் கொடுத்து உதவுகிறது

16.முக்கியமான கோவில்களில் பக்தர்கள் தங்கி செல்ல சாதி சங்கங்கள் தங்கும் விடுதிகளை ஏற்படுத்தியுள்ளது,

கோவில்களை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியுள்ளது, ஆனால் தங்கும் வசதிகளை செய்து கொடுத்து இருக்கிறதா? இல்லையே! சாதி அமைப்புகள் இதை செய்கிறது!

17.சாதி சங்கங்கள் பெயரில் வணிக வளாகங்கள் கட்டி அதனை குறைந்த வாடகைக்கு கொடுத்து அந்த அந்த சாதியினர் தொழிலில் முன்னேற வழிவகை செய்தது சாதி சங்கங்கள் 

எ.கா : நாடார் வணிக வளாகம் என்பதே நாம் எந்த ஊரில் வேண்டுமென்றாலும் காணலாம் 

கம்மவார் வணிக வளாகம் 

யாதவர் வணிக வளாகம் 

ரெட்டியார் வணிக வளாகம் 

இன்னும் பல 

18.சாதி சங்கங்கள் அவரவர் சாதியின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டிற்காக போராடியது, உயிரையும் இழந்தனர் அந்த போராட்டத்தில் 

எ.கா : வன்னியர் உள்இடஒதுக்கீடு போராட்டம் 

சீர்பழங்குடியினர் எனும் DNT/DNC போராட்டம் 

அருந்தியர் இடஒதுக்கீடு போராட்டம் 

படுகர் இடஒதுக்கீடு போராட்டம் 

19.தேசிய தலைவர்களின் பிறந்த நாள், இறந்த நாள், குருபூஜை,ஜெயந்தி நாட்களில் சாதி அமைப்புகள் அனைத்து பொதுமக்களுக்குமான இலவச மருத்துவ முகாம்களை நடத்தியது

20.ஒவ்வொரு சாதியில் உள்ள தேசிய தலைவர்களின் பிறந்த நாள், இறந்த நாளின் போது பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி இயற்கை வளம் செழிக்க, சுற்றுச்சூழல் பாதுகாக்க, மழை அளவு பெருக, மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, பூமியில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்க சாதி சங்கங்கள்,சாதி அமைப்புகள்,இயக்கங்கள் ஏற்பாடு செய்கின்றனர்!

எ.கா : செப்டம்பர் 5 – ஆம் தேதி, 2023 அன்று வேளாளர் சாதியில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகி, வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளின் போது பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது! கீழே அதன் புகைப்படம் 

இன்னும் சாதி அமைப்புகளின் சாதனைகளை அடக்கி கொண்டே போகலாம்!

சாதி சங்கங்கள்,சாதி இயக்கங்கள்,சாதி அமைப்புகள்,சாதி கட்சிகள் தங்கள் சாதியினரிடம் கேட்டு கொள்வது ஒன்றே ஒன்று மட்டும் தான் வேறு சாதியில் கலப்பு திருமணம் செய்யாதீர்கள்,சொந்த சாதியில் மட்டுமே திருமணம் செய்யுங்கள் என்பது மட்டும் தான்!  

சாதி என்றாலே தவறானது என்ற புரிதலை கொண்டுள்ள முட்டாள்களுக்கு இவையெல்லாம் தெரியாது! சென்னை,பெங்களூருவில்,மும்பையில்,வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு புரட்சி புண்ணாக்கு பேசுவோருக்கு, சமூகவலைதளங்களில் வாழ்க்கை நடத்துவோருக்கு சாதி சங்கங்களின் சேவைகள் புரியாது!

கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் : 

ஒட்டப்பிடாரம் 

சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 

9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *