சைவ வேளாளர் கலாச்சார ஒழுக்க விதிமுறைகள் :
- பூமி புத்திரர்களான சைவ வேளாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பது! (சேர , சோழ, பாண்டிய , நாயக்கர் , பிரிட்டிஷார் கால ஆவணங்கள் சைவ வேளாளர்களை நிலவுடமையாளர், நிலக்கிழார் என்று அழைக்கிறது)
- சைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் சைவ வேளாளர்கள் ஆகிவிட முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும், ( பிராமணர்களும், வடஇந்திய சேட், பட்டேல், தாகூர், ராஜபுட் போன்ற சாதிகள் கூட சைவ உணவே அருந்துகின்றனர் ) ஆக சைவம் சாப்பிடுபவர்கள் எல்லாம் சைவ வேளாளர் ஆகிவிட முடியாது! அதே போல் அசைவம் சாப்பிடுவதால் சைவ வேளாளர் இல்லையென்றும் ஆகிவிட முடியாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்!
- பின் தலையில் குடுமி (பின் குடுமி) வைத்திருப்பது (வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பழைய புகைப்படத்தை பார்த்தால் அதில் குடுமி வைத்திருப்பார்)!
- தீட்ஷை எடுக்க வேண்டும் (குறைந்தபட்சம் சமய தீட்ஷையாவது எடுக்க வேண்டும்) !
- தீட்ஷை எடுத்து சைவ வெள்ளாளர்கள் கண்டிப்பாக பூணூல் அணிய வேண்டும்!
6.சைவ வெள்ளாள பெண்களுக்கு 19 வயதிலும், ஆண்களுக்கு 21 வயதிலும் தவறாமல் திருமணம் முடிப்பது!
- சொந்த ஊரில் வீடு வைத்திருப்பது!
- குலத்தெய்வ கோவிலுக்கு கட்டாய வரி கொடுப்பது!
- சொந்த ஊரில் உள்ள கோவிலுக்கு கட்டாயம் வரி கொடுப்பது!
- குலத்தெய்வ கோவிலுக்கு வருடத்திற்கு 5 முறை செல்வது!
11.தமிழ் பஞ்சாங்கம் வாசிக்க, விவரம் புரிந்து கொள்ள கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பது!
- தினமும் காலையில் குளித்து முடித்ததும் உடலின் 16 இடங்களில் திருநீறு பூசுவது!
13.ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளி நகைகளில் கோர்த்து கழுத்தில் அணிவது!
14.வீட்டில் திருமுறை, திருவாசகம், பாசுரங்கள், திருமந்திரம், பகவத்கீதை, தேவாரம், இராமாயணம்,உபநிடதங்கள், வேதங்கள், மகாபாரதம் புத்தகம் வைத்திருப்பது, கண்டிப்பாக அதனை வாசிப்பது, அர்த்தம் புரிந்து கொள்வது அதன்படி நடப்பது! (வ.உ.சி தனது சுயசரிதையில் தனது ஆச்சியிடமும் (பாட்டி), தாத்தாவிடமும் மகாபாரத, இராமாயண இதிகாசங்களை கேட்டு அறிந்ததாக குறிப்பிட்டுள்ளார்)
- வாரத்திற்கு மூன்று முறை தவறாமல் கோபுரத்துடன் கூடிய சிவன், பெருமாள் கோவில்களுக்கு செல்வது!
- ஆன்மார்த்த சிவபூஜை செய்வது , பரார்த்த (ஆலய) வழிபாடு செய்வது
- அசைவத்தை தவிர்ப்பது! சைவ வேளாளர்கள் அசைவம் உண்ணவே கூடாது!
18. சைவ வெள்ளாள இளைஞர்களும், இளம்பெண்களும்,சிறுவர்களும், சிறுமிகளும் கண்டிப்பாக குத்துசண்டை, சிலம்பம் கற்று கொள்வது (வ.உ.சி அவர்களுக்கு மல்யுத்தம், சிலம்பம் , குதிரை ஏற்றம் ஆகியவை தெரியும் )!
- வீட்டில் நாட்டு பசுமாடுகள் வைத்திருப்பது!
- ஆதீனங்களுக்கும் – சைவ வெள்ளாளர்களுக்கும் இடையே உறவை வலுப்படுத்துவது!
- ஆதீன நிலங்கள், கடைகளை வெள்ளாளர்களுக்கு மட்டுமே ஒதுக்க நடவடிக்கை எடுப்பது!
- சைவ வெள்ளாளர் குடும்பங்களில் குறைந்தது மூன்று குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைக்கு மேல் பெற்று கொள்வது! அதில் இரண்டு ஆண் குழந்தை கட்டாயம் இருக்க வேண்டும்! (சைவ வேளாளர்களின் மக்கள்தொகை குறைந்து வருவதை மீட்டெடுப்பது)
- இராமேஸ்வரம், காசி, சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி என புனித தளங்களுக்கு கண்டிப்பாக குடும்பத்துடன் செல்வது!
- பூமிதேவி புத்திரர்களான நாம் பூமியில் உழவுக்கு பயன்படும் மேழிக்கொடியை (ஏர்கலப்பை) அனைத்து சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்களில் பயன்படுத்துவது!
- சைவ வெள்ளாளர் சார்ந்த ஊர்களில் சைவ வெள்ளாள நாட்டாண்மை முறையை கொண்டு வருவது!
- வேதம் படிப்பது! (பிரிட்டிஷார் எழுதிய திருநெல்வேலி பற்றிய நூலில் சைவ வேளாளர்கள் வேதம் வாசித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் வ.உ.சி சுயசரிதையால் தான் வேதாந்திற்கு ஆதரவானவர் என்று கூறியுள்ளார், வேதாந்தத்திற்காகவே விவேகபானு என்று பத்திரிக்கையும் நடத்தியுள்ளார்)!
- சமஸ்கிருதம் கற்று கொள்வது! (பிரிட்டிஷார் ஆவணப்படி சைவ வேளாளர்கள் வேதம் வாசித்தவர்கள் என்றால் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் என்று பொருள்) ! தென்காசி மாவட்டத்தில் விக்கிரமசிங்க புரத்தில் (V.K புரம்) சைவ வேளாளர் குலத்தில் பிறந்த சிவஞான யோகிகள் பல்வேறு சமஸ்கிருத நூல்களை தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்!
- சைவ வேளாளர்களின் வீட்டில் கண்டிப்பான முறையில் லைசன்ஸ் துப்பாக்கி , வாள் (மருதநாயகம் பிள்ளை, தானாபதியா பிள்ளை போன்ற நமது சைவ வேளாள முன்னோர்கள் மன்னராகவும் வாள் கொண்டு போர் புரிந்தும் வந்துள்ளனர்) , கத்தி, சுருள் வாள், ஈட்டி வைத்திருப்பது! (இன்றும் சைவ வேளாளர் ஆதீனமான மதுரை ஆதீனத்தில் துப்பாக்கிகள், வாள்கள் போன்றவை உள்ளன)
- அவரவர்களின் பூர்வீக ஊரிலுள்ள பிராதான ஆலயம், கிராம தேவதை ஆலயம், சமுதாய ஆலயம் மற்றும் குடும்ப கோவில்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்!
- நில அளவீட்டு முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்!
நெல் அளவீட்டு முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்!
- திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமைப்புர ஆதீனம் போன்ற 18 சைவ ஆதீனங்களில் சைவ வேளாளர்கள் காவி உடை அணிந்து துறவறம் பூண்டு ஆதீனங்களில் தம்பிரானாக, சாமியாராக கண்டிப்பாக ஆர்வம் கொண்டு வர வேண்டும், குறிப்பாக 58 வயதை கடந்து Retired ஆன சைவ வேளாளர் பெரியவர்கள் ஆதீனங்களில் தம்பிரானாக மாற வேண்டும்!
- ஊரின் பிரதான நீர்நிலைகளான கடல், ஆறு, ஏரி, குளம், வாய்க்கால் போன்றவற்றின் வரலாற்றையும், அவற்றின் போக்குவரத்து பாதையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் நீர்நிலைகளை பாதுகாக்க முடிந்தளவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்!
- சைவ வெள்ளாள ஆண்கள் தங்களது இரண்டு கால்களிலும் அல்லது ஒரு காலிலாவது வீரக்கழல் (ஆண்கள் தங்களது காலில் அணியும் ஒரு வகையான ஆபரணம் தண்டை எனப்படும்) அணிந்து இருக்க வேண்டும், அது வெள்ளியிலோ அல்லது ஐம்பொன்னிலோ அல்லது பித்தளையிலோ அல்லது வெண்கலத்திலோ இருக்க வேண்டும்! ஆனால் இரும்பில் ஆனதை மட்டும் அணிய கூடாது!
- சைவ வெள்ளாள ஆண்கள் தங்களது ஒரு கையில் காப்பு அணிந்து இருக்க வேண்டும், அதுவும் வெள்ளி, ஐம்பொன் , வெண்கலத்தில் இருக்க வேண்டும், காப்பு இரும்பில் இருக்க கூடாது! வலது கை விரலில் தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ அல்லது ஐம்பொன்னிலோ கண்டிப்பாக மோதிரம் அணிய வேண்டும்!
- சைவ வெள்ளாள பெண்கள் தங்களது கையில் கண்டிப்பாக சங்கு வளையல் அணிந்து இருக்க வேண்டும், (வ.உ.சி அவர்களின் மனைவி சங்கு வளையல் அணிந்திருப்பார்) , சங்கு வளையல் இராமேஸ்வரம், கன்னியாக்குமரி உட்பட கடற்கரை நகரங்களில் கிடைக்கும்!!
38.சைவ வெள்ளாள பெண்களுக்கு சிறு வயதிலே மூக்கு குத்தியிருக்க வேண்டும், பெண்களுக்கு மூக்குத்தி அணிந்து இருப்பது கட்டாயம்!! பெண்கள் கம்மல், கொலுசு, கையில் மோதிரம், கழுத்தில் நகை அணிந்துயிருக்க வேண்டும், கம்மல், முக்குதி, கையில் மோதிரம், கழுத்தில் நகை ஆகியவை தங்கத்திலும், கொலுசு வெள்ளியிலும் இருக்க வேண்டும்,
39.சைவ வெள்ளாளர் ஆணும் பெண்ணும் சாதி விட்டு சாதி திருமணம் செய்ய கூடாது!
- சைவ வெள்ளாளர்கள் மற்ற வேளாளர் உட்பிரிவுக்களில் மாற்றி மாற்றி திருமணம் செய்வதும் தடை செய்ய வேண்டிய ஒன்று, அதுவும் கார்காத்த வேளாளராக இருந்தாலும் சைவ வேளாளர்கள் கார்காத்த வேளாளர்களுடன் திருமணம் புரிய கூடாது!
- சைவ வெள்ளாளர் ஆண்களும், பெண்களும் மது, கள், போதை வஸ்துகள் அருந்துவது கூடவே கூடாது! வெற்றிலை பாக்கு மட்டும் பயன்படுத்தலாம்!
- திருமணத்திற்கு முன் உடலறவு என்பது சைவ வெள்ளாள சாதியில் தடை செய்யப்பட்ட ஒன்று!
43.சைவ வெள்ளாள ஆண்கள் தங்களது இரு காதுகளிலும் கடுக்கன் (ஒரு வகையான காதணி) அணிய வேண்டும்! கடுக்கண் கண்டிப்பாக தங்கத்தில் அல்லது ஐம்பொன்னில் அல்லது வெள்ளியில் இருக்க வேண்டும்!
- சைவ வேளாளர்கள் தங்களது வாழ்நாளில் வேளாளர்களுக்கான 32 அறங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு அதனை கண்டிப்பாக சைவ வேளாளர்கள் தங்களது வாழ்நாளில் செய்ய வேண்டும்!
- சைவ வேளாளர்கள் தங்களது குடிமக்களான 18 குடிபடை சாதிக்கான நலன்களை பேணி காக்க வேண்டும்! (குறிப்பு : குடிபடை சாதி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வது நலம்) !
- சைவ வேளாளர்கள் விவசாயத்தில் ஈடுபடும் போது நாட்டு விதைகளையே பயன்படுத்த வேண்டும்!
- சைவ வேளாளர்கள் தங்களது திருமணம், வீட்டு கிரஹபிரவேஷம் முதலான நல்ல காரியங்களுக்கு ஆதிசைவர்கள் (ஆதிசைவர் பட்டங்கள் குருக்கள், பட்டர் என்பதாகும்) எனப்படும் ஆதிசைவச்சிவாச்சாரியார்களை மட்டுமே அழைக்க வேண்டும் அல்லது சைவ வேளாள குருக்கள், தேசிகர்களை அழைக்க வேண்டும் (குறிப்பு : ஸ்மார்த்த பிராமணர்களான ஐயர்களையோ அல்லது ஐயங்கார்களையோ அழைக்க கூடாது)!
- சைவ வேளாளர்கள் தங்கள் கோத்திரம், கிளை, கூட்டம் (குலம்), குலத்தெய்வம் போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும், அதை உங்கள் குடும்பத்தில் உள்ள அடுத்த தலைமுறைக்கு மறக்காமல் எடுத்து கூற வேண்டும்!
- வேளாளருடைய அறுதொழில்களை செய்தல், வேளாளர் ஆறு தொழில்கள் கீழே :
- உழவு 2. பசுக்காத்தல் 3. பொருளீட்டல்
- ஈதல் 5. ஓதல் 6. வேட்டல்
- வேளாளருக்குரிய பத்து கடமைகளை செய்தல், வேளாளர்களுக்குரிய பத்து கடமைகள் கீழே :
- ஆணைவழி நிற்றல் 2. அழிந்தோரைக் காத்தல்
- கைக்கடனாற்றல் 4. கசிவகத்துண்மை
- ஒக்கல் போற்றல் 6. ஓவா முயற்சி
- மன் இறைதருதல் 8. ஒற்றுமை கோடல்
- விருந்தோம்பல் 10. திருந்திய ஒழுக்கம்
- சைவ வேளாளர்கள் தவிர மற்ற அடுத்த சாதியை சார்ந்தவர்களை மாமா, மச்சான், அத்தை, சித்தி என்று உறவுமுறை வைத்து அழைக்க கூடாது!
- சைவ வேளாளர்கள் அடுத்த சாதியினர் வீட்டில் உணவருந்த கூடாது, அது அடுத்த சாதியினரின் விழாக்களுக்கு சென்றாலும் மொய் பணம் மட்டும் கொடுத்து விட்டு வர வேண்டும், சாப்பிட கூடாது, (வெளிஇடங்களுக்கு தூர தொலைவு பயணம் மேற்கொள்ளும் போது சைவ உணவங்களை நாடி சென்று உணவருந்த வேண்டும்) !
- சைவ வேளாளர்களின் வீட்டு சுபகாரியங்களுக்கு, அசுப காரியங்களுக்கு சமையல் செய்ய சமையல்காரர்களை அழைக்கும் போது அவர்கள் சைவ வேளாளர்களாகவோ
அல்லது பிராமணராகவோ தான் இருக்க வேண்டும், மற்ற சாதியினரை அழைக்க கூடாது!
- கோவிலுக்கு, முக்கியமான காரியங்களுக்கு செல்லும் போது கண்டிப்பான முறையில் வெள்ளை வேட்டை, வெள்ளை சட்டை அணிந்து செல்ல வேண்டும்! பஞ்சகட்சம் மாடல் வேட்டி அணிய தெரிந்தவர்கள் பஞ்சகட்சம் அணிவது நலம்! பிரம்மசாரிகள் பஞ்சகட்சம் வேட்டி அணிய கூடாது,
- வருடா வருடம் பித்ருக்களுக்கு பிண்டம் பிடித்து திதி கொடுப்பது!
- சைவ வேளாளரில் அப்பா இல்லாதவர்கள் அமாவாசை விரதமும், அம்மா இல்லாதவர்கள் பௌர்ணமி விரதமும் இருக்க வேண்டும்!
- சைவ வெள்ளாளரில் ஒரே சாதியாக இருந்தாலும் முறைபார்த்து தான் கல்யாணம் செய்ய வேண்டும், மாமா பொண்ணு, அத்தை பொண்ணு என்று முறைபார்த்து திருமணம் செய்ய வேண்டும் , சைவ வேளாளராக இருக்கிறார் என்பதற்காக முறை பார்க்காமல் திருமணம் செய்ய கூடாது!
- சைவ வெள்ளாளர் மற்றும் மற்ற வெள்ளாளர் பற்றின வரலாறுகளை சைவ வெள்ளாளரின் அடுத்த தலைமுறைக்கு எடுத்து விளக்கி கூற வேண்டும்,!
- விவசாயம் குறித்தும், விவசாயம் குறித்த நுட்பங்களையும் சைவ வெள்ளாளரின் அடுத்த தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டும்!
- சைவ வேளாளர்களில் திருமணம் ஆன ஆண்கள் தங்களது பெயருக்கு முன் சைவத்திரு என்றும், திருமணம் ஆன பெண்கள் சைவத்திருமதி என்றும், திருமணம் ஆகாத ஆண்கள் சைவச்செல்வன் என்றும், திருமணம் ஆகாத பெண்கள் சைவச்செல்வி என்றும் பதிவிட வேண்டும்!
- சைவ வேளாளர் பெண்கள் தினமும் காலையில் கண்டிப்பான முறையில் குளித்து விட்டு தான் சமையல் செய்ய வேண்டும், குளிக்காமல் சமையல் செய்ய கூடாது,
- சைவ வேளாளர் திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்பின் போது மாப்பிள்ளை குதிரையின் மீதோ அல்லது யானையின் மீதோ ஊர்வலமாக அழைத்து வரப்பட வேண்டும், (சைவ வேளாளரின் பழமையான வழக்கம் தான் இது)
- கோத்திரம் இல்லாத சைவ வேளாளர்கள் குலத்தெய்வத்தை வைத்து திருமணம் செய்ய வேண்டும், ஒரே குலத்தெய்வத்தை வணங்குபவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்ய கூடாது, வேறு வேறு குலத்தெய்வத்தை வணங்குபவர்கள் மட்டும் தான் தங்களுக்குள் திருமணம் செய்ய வேண்டும்!
- சைவ வேளாளர் மணமகள், மணமகன் திருமண வரன் பார்க்கும் போது Bio – data வில் (சுயவிவர குறிப்பு) கண்டிப்பாக கோத்திரம், குலத்தெய்வம், பூர்வீக சொந்த ஊர் , எந்த ஊர் சைவ வேளாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளீர்கள் போன்ற விவரங்களை அதில் குறிப்பிட வேண்டும்!

65.சைவ வேளாளரில் அத்தை, மாமா மகன் வயதில் மூத்தவர் என்றாலோ, அக்காவின் கணவர் அல்லது தங்கையின் கணவர் வயதில் மூத்தவர் என்றாலோ *அத்தான்* என்று அழைப்பது தான் வழக்கம்! மாமா என்றோ, மச்சான் என்றோ அழைப்பது மற்ற சாதிகளின் வழக்கம், சைவ வேளாளரின் வழக்கம் கிடையாது,
66.சைவ வேளாளரில்
அத்தை, மாமா மகள் வயதில் மூத்தவர் என்றாலோ, அண்ணனின் மனைவியையோ மதினி என்று அழைப்பது தான் வழக்கம்! மாறாக அண்ணி என்று அழைப்பது மற்ற சாதிகளின் வழக்கம், சைவ வேளாளரின் வழக்கம் கிடையாது,
67.சைவ வேளாளரில் அண்ணன் முறையில் வயதில் மூத்தவர் என்றால் *அண்ணாச்சி* என்று அழைப்பது, இந்த சைவ வேளாளரின் வழக்கத்தை நாடார்கள்(சாணான்) அப்படி கைக்கொண்டு விட்டு அண்ணாச்சி என்றால் நாடார்( சாணான்) என்பது போல் திரித்து விட்டார்கள் என்பது கவனத்துக்குரியது,சைவ வேளாளர்களை மட்டும் தான் அண்ணாச்சி என்று அழைக்க வேண்டும், மற்ற சாதியினரை அண்ணாச்சி என்று அழைக்க கூடாது, வடமாவட்டங்களில் உள்ள சைவ வேளாளர்கள் வயதில் மூத்த சைவ வேளாளரை அண்ணாத்த என்று அழைப்பது வழக்கம்
- சைவ வேளாளர்கள் கண்டிப்பான முறையில் தமிழ்சங்கம் மற்றும் சைவ சித்தாந்த சபையில் உறுப்பினராகவோ, பொறுப்பாளராகவோ இருக்க வேண்டும்,( ஒரு காலத்தில் சைவ சித்தாந்த சபை என்றாலே சைவ வேளாளர்கள் தான் என்று இருந்தது)
- சைவ வேளாளர் கல்யாணத்தின் மறுநாள் அல்லது கல்யாணத்தின் நாளை மறுநாள் பட்டிண பிரவேஷம் செல்வது வழக்கமாக இருந்தது, தற்பொழுது அது மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருவது வருத்தக்குரியது, எனவே சைவ வேளாளர் கல்யாணத்தின் மறுநாள் அல்லது நாளை மறுநாள் பட்டிண பிரவேஷம் கண்டிப்பான செல்ல வேண்டும், (வ.உ.சி யின் கல்யாண பத்திரிக்கையில் பட்டிண பிரவேஷம் என்பது குறிப்படப்பட்டுள்ளது)
- சைவ வேளாளர்கள் காலம் காலமாக கூட்டு குடும்பமாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள், கூட்டு குடும்பம் தான் சைவ வேளாளர் சாதியை காக்கும் மாபெரும் சக்தி, ஆகவே சைவ வேளாளர்கள் தனிக்குடித்தனம் செல்வதை குறைத்து கொண்டு கூட்டு குடும்பத்துடன் வாழ வேண்டும், குடும்பத்திற்கு என்று தனியாக தொழிலை தொடங்கி கூட்டு குடும்பமாக தொழிலை நடத்துவது சைவ வேளாளர் சாதியை காக்க துணை நிற்கும்!

- சைவ வேளாளர் ஆண்கள் திருமணம், கோவில் விழா, சைவ வேளாளர் சங்க கூட்டம், அரசியல் கூட்டம் என முக்கியமான நிகழ்ச்சிகளில் எல்லாம் தலைப்பாகை அணிய வேண்டும், அந்த தலைப்பாகையும் காதை மறைக்காமல் அணிய வேண்டும், ரெடிமேட்டாக கடைகளில் கிடைக்கும், பட்டு நேரியல் என்பதை அணியலாம், பாரதியார் மாதிரி முண்டாஸ் கட்டாமல் வ.உ.சி மாதிரி தலைப்பாகை அணிய வேண்டும்!
- சைவ வேளாளர் ஆண்கள் திருமணம், கோவில் விழா, சைவ வேளாளர் சங்க கூட்டம், அரசியல் கூட்டம் என முக்கியமான நிகழ்ச்சிகளில் எல்லாம் அங்கவத்ஸ்ரம் (தோளில் அணியும் பட்டு துண்டு) அணிய வேண்டும் கண்டிப்பாக!
- சைவ வேளாளர்கள் பஞ்சமகா பாவங்கள் எப்பொழுதும் செய்தல் கூடாது, பஞ்சமகா பாவங்களவன : கொலை செய்தல், களவு செய்தல், அடுத்தவர் மனைவி மீது காமம் கொல்லுதல், பொய் பேசுதல், கள் (மது) அருந்துதல் போன்றவை பஞ்சமகா பாவங்கள் ஆகும், இவற்றை சைவ வேளாளர்கள் செய்தல் கூடாது!
- சைவ வேளாளர் ஆணும், பெண்ணும் காலையில் சூரியன் உதிக்கும் முன்னர் குளித்து முடித்து சூரியன் உதிக்கும் போது கிழக்காக நின்று சூரிய நமஸ்காரம் செய்தல் வேண்டும்!
- சைவ வேளாளர் பெண்களும், ஆண்களும் தங்களை விட வயதில் மூத்தவர்களை சந்திக்கும் போது கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்லி வரவேற்க வேண்டும், அதைவிடுத்து ஆங்கிலத்தில் Hi என்று கை அசைப்பதை தவிர்க்க வேண்டும்!
இந்த சைவ வேளாளர் கலாச்சார, ஒழுக்க விதிமுறைகள் இனியும் கட்டுரையாக அடுத்த அடுத்த பாகங்கள் வெளிவரும் விரைவில்!!!
எழுத்தாளர் : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன். கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758








தங்களுடைய கட்டுரையை படித்து சற்றே மனம் குளிர்ந்தேன்,ஏனெனில் இந்த நாதக அரசியல் வாதிகள் வேளாளர்களை களப்பிரர் எனவும்,பாலி மொழியை தாய்மொழியாக கொண்டவர் எனவும் வடுகர் எனவும், பெரிய புராண ஆதாரத்தை கோடிட்டும் காட்டுகின்றனர்.வன்னியரும் சாணாரும் வேளாளரை தமிழன் அல்ல என்கின்றனர்