கன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்

ஆரல்வாய்மொழியும் ஜாதி கிணறு
( ஆலடி கிணறு ):

குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ஊர் மேற்கு தொடர்ச்சிமலையின் கடைசி கணவாய் பகுதியாகும். எனவே இவ்வூரில் மழைமேகங்களை ஈர்த்து மழை பொழிய செய்யும் வகையில் மலைத்தொடர்கள் இல்லை. எனவே மழை மறைவுநிலம் போல மழைவளமும் நீர்வளமும் குறைவாக காணப்பட்டுவதால் இங்கு குளங்களும் கிணறுகளும் அதிகம் உள்ளன. கரும்பாட்டுக்குளம், பொய்கைகுளம், பெரியகுளம், ராமர்குளம் ஆகியன மிக முக்கிய பாசன நீர் நிலைகள்.
இவ்வூரில் மக்களின் அன்றாட தண்ணீர் தேவைக்கு பல கிணறுகள் உள்ளன, அவை சாதியின் பெயர்களால் உள்ளன.பெருமாள் புரம் ஆலடி நகரில், ஆலடி கிணறு உள்ளது. கிணற்றின் சுவரில் ஆலமரம் வளர்ந்து இருப்பதால் இப் பெயர் இருக்கலாம்.
இக் கிணற்றில் கிழக்கு பக்கத்தில் உள்ள சுவற்றில் 1933 ம் ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது.

அதில் ” 1108 கொல்லம் ஆண்டு ( ஆங்கில வருடம் 1933) ஊர் வகை சமுதாயம் வெள்ளாளர் ஊர் கிணறு ” என காணப்படுகிறது. இப்போது எல்லா சாதி மக்களின் பொது கிணறாக உள்ளது.Pic அம்மு.நன்றி
மேலும் தொடர்புக்கு : 
ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *